25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழமொழி.

Oct 01, 2024

ஏறச்சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிகோபம்

ஏறச்சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிகோபம்.பழமொழி விளக்கம்ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சிலருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும், எருதுவின் மேலே ஏறினால் எருதுவுக்கு வலிக்கும் ஏறவில்லை என்றொல் நொண்டிக்கு கஷ்டம் .நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் கொடுக்கும்.என்பதை குறிப்பது தான் இந்த  பழமொழி.

Sep 24, 2024

காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது

காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது.இறைவனை நினைக்க இளமையிலேயே அறிந்து கொண்டால் முதுமையில் நமது ஆத்மா இறைவனோடு இணைந்து விடும். இறைவனை உணர, மனதில் கொண்டு வர, இறை சூத்திரம் தெரிந்திருக்க வேண்டும். வாழ்க்கையின் முடிவில் சிந்தித்துப் பயனில்லை. இதனால் நாம் அறிவுப்பூர்வமாக விழிப்புணர்ச்சியோடு இறைவனை உள்ளத்தில் கொண்டுவந்து வழிபட வேண்டும். அதுவே பேரறிவு

Sep 17, 2024

தம்பியுடையான் படைக்கஞ்சான் 

தம்பியுடையான் படைக்கஞ்சான் தம்பியை உடைய ஒரு அண்ணன் எதற்கும் அஞ்சாமல், அனைத்தையும் தைரியமாக செய்யலாம். ஒருவேளை தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் ,தன் குடும்பத்தை காத்து நிற்க தன் தம்பி இருக்கிறான் என்ற தைரியம். 

Sep 10, 2024

பழகப் பழக பாலும் புளிக்கும்

ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதன் மூலம் ஒருகட்டத்தில் அலுப்பு தட்டும்.

Sep 03, 2024

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

சித்தம் தெளிய வில்வம்.குடல்புண் நலம் பெற அகத்திக்கீரை.சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.சூட்டை தணிக்க கருணைக்கிழங்குஜீரண சக்திக்கு கண்டைக்காய்.தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை.பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு,வாத நோய் தடுக்க அகத்திக்கீரை.உவாத நோய் தடுக்க அரைக்கீரை.

Aug 27, 2024

ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.

தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை.அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு, அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான். 

Aug 20, 2024

உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது.

உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது. உலை பொங்கி வராமல் இருக்க அடுப்பின் தீயை குறைத்து ,ஒரு தட்டை கொண்டு மூடி சமைத்துவிடலாம். ஆனால் எந்த  ரகசியமும் யாரிடமும் பாதுகாப்பாக இருக்கிறது. எப்படியாவது அது கசிந்துவிடும்.

Aug 13, 2024

பழமொழி வடிவில் உணவு பழக்கம்

சீரகம் இல்லா உணவு சிறக்காது. தன் காயம் காக்க வெங்காயம் போதும். வாழை வாழ வைக்கும். அவசர சோறு ஆபத்து, இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு ரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை  இருமலை போக்கும் வெந்தயக் கீரை. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். உஷ்ணம் தணிக்க கம்பங்களி கல்லீரல் பலம் பெற கொய்யா பழம். கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை

Aug 06, 2024

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி 

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி ஓட்டை கப்பல் என்பது நமது உடல். ஒன்பது மாலுமி என்பது நமது உடலில் இருக்கும் நவதுவாரங்கள்.

May 28, 2024

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய். பொருள்: இப்பழமொழி மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது. கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிலக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

1 2 ... 9 10 11 12 13 14 15 16 17 18

AD's



More News