ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில்வே பீடர் ரோட்டில் , பஞ்சு மார்க்கெட் டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பி வர வேண்டிய அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நேரத்தை மிச்சப் படுத்த ரயில்வே ஸ்டேஷன் அருகே தொடங்கும் இந்த ரோட்டில் நுழைந்து மெயின் ரோட்டை அடைகின்றன .பள்ளிகள் அதிகம் உள்ள இந்த ரோட்டில் வேகம் எடுக்கும் வாகனங்களால் பள்ளி மாணவர்கள் ரயில் பயணிகள் உயிர் பயத்தில் ஒதுங்கி வழிவிட வேண்டியுள்ளது. ஏற்கனவே மேடு பள்ளங்களாக உள்ள ரோட்டில் வேகம் எடுக்கும் வாகனங்கள் வேக கட்டுப்பாட்டை பின் பற்ற வேண்டும். வாகனங்களை வேக கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற செய்வதுடன், வாகனங்களில் ஒலிக்க விடும் ஏர் ஹாரன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமக்கள் எதிர்பார்க்கின்றனர் .
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ரூ.3.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.திறப்பு விழா நடந்து இரண்டு மாதங்கள் கடந்தும் பஸ் ஸ்டாண்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பிற்கு போலீஸ், பஸ் நிறுத்த ஊர் பெயர் எழுதாதது, நேர அட்டவணை என அடிப்படை வசதிகளும் போதிய பாதுகாப்பும் இல்லாமல் பயணிகள் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.இது தவிர அரசு மகப்பேறு 'மருத்துவமனை முன்பு ஏற்கனவே இருந்த தற்காலிக பஸ் ஸ்டாப்பும் செயல்பாட்டில் இருந்ததால், பஸ் ஸ்டாண் டில் கூட்டம் குறைவாக இருந்து பயணிகளில் முழு அளவு வரவில்லை.இந்நிலையில் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நகராட்சி கமி ஷனர் நாகராஜன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீமான், வடக்கு போலீஸ் எஸ்.ஐ ராஜ்குமார் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதில் பஸ் ஸ்டாண்டில்பயணிகள்பாதுகாப்பிற்காக 15 கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து ஒழுங்குபடுத்தி அறிவிப்பு செய்ய ஒலி பெருக்கி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகரங்களை அடுத்து உள்ள நெடுஞ்சாலைகள், கிராமச்சாலைகள் என மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் வடமாநில வியாபாரிகள்,இவர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்த பொருட்களை மொத்தமாக கொண்டு வந்து சில்லறை வியாபாரிகளை அணுகி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்காலிக கடை விரிப்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இவற்றை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி பேரம் பேசுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. சாலையோரம் விரிக்கும் கடைகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரோட்டின் வெள்ளை அபாய கோடு வரை கடை பரப்பி வைக்கின்றனர்.சாலைகளின் குறிப்பிட்ட தொடர்ச்சியாக கடை இடைவெளிகளில் பரப்பி நிற்கும் இது போன் றவர்களை போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்வதில்லை. இவர்களின் விதி மீறலால் ஏதும் அறியா வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதை தடுக்க வேண்டும். ரோட்டில் இருந்து சற்று தொலைவில் கடைகள் அமைப்பது குறி த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கில் சிக்கியுள்ள டிராக்டர்கள், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டுக்கு வெளியே, நிறுத்தி வைத்துள்ளனர்.வாகனங்களை அகற்றாமல் 10 அடி விட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து புதிய தார்ரோடு பணிகள், நடந்து முடிந்துள்ளது.வழக்கில் சிக்கியுள்ள வாகனங்களால் ஏற்கனவே இடையூறுடன் ரோட்டின் அகலம் சுருங்கிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். முழுமையான அளவுரோடு பணிகள் நடைபெற வேண்டும். சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையத்தில் காலாவதியான பொருட்கள், கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது உணவுப் பொருட்களின் பெயர், விலாசம், தயாரிப்பு காலாவதி தேதி உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் தெரியும் வகையில் அச்சிட வேண்டும் என்பது அடிப்படை விதி.இந்நிலையில் வளர்ந்து வரும் ராஜபாளையம் நகர் பகுதியில் பெரும்பாலான உணவகங்கள், பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றில் கலப்பட உணவு பொருட் கள், அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.ஓட்டல்களில் விற்பனையாகாத உணவுகளை பிரிட்ஜ்களில் வைத்து விற்பது, பாஸ்ட் புட் கடைகளில் எந்தவித பாதுகாப்பும் சுகாதாரமும் இன்றி உணவு தயாரிப்பு போன்றவை மக்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இவற்றைக் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம், தேவதானம், சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி தென்னை விவசாயம் நடக்கிறது. இவற்றில் 50 சதவீத பரப்பில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து பரவி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.வெள்ளை ஈக்கள் பாதிப்பு 2016 பரவ துவங்கியது முதல் மரங்களில் பல்வேறு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கட்டுப் படுத்த அரசு கூறும் வழி முறைப்படி பின்பற்றியும் பலனில்லை.கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் மழைபொழிவு இல்லாதது காற்றின் தாக்கம் போன்றவை இவை வேகமாக பரவுவதற்கு வழி ஏற்படுத்தி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த அரசு முழு வீச்சில் இறங்குவதுடன் விவசாயிகளை இணைத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நடுவே செல்லும் ரயில்வே தண்ட வாளத்தை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இலகு ரக. வாகனங்கள் நெரிசலில் மேம்பாலம் வழியே ஏறி செல்லாமல், சுரங்கப்பாதை மூலம் சுலபமாக கடக்க 800 மீ., நீளத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ரோடு டி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இணைக்க திட்ட அறிக்கைக்கு பொதுப் பணித்துறை, நகராட்சி சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்ட வாளம் கீழ்ப்பகுதியில் புதைக்கப்பட்டு மின் வழித்தட கம்பிகள் மாற்றி பொருத்தியும், சுரங்கப் பாதைக்கான கார்டர்கள் பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் பணிகள் முடிந்தது.இணைப்புக்காக டி.பி மில்ஸ் ரோட்டில் 6 மீட்டர் நிலம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பாதை திருமங்கலம், கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப்பாதையாக உள்ளது. எனவே ரயில்வே துறை 4 மீட்டர் நிலம் வழங்க முன்வந்தால் நகராட்சி சார்பில் 2 மீட்டர்இடம்ஒதுக்கமுடியும்எனதெரிவிக்கப்பட்டது. இணைப்பு ரோடு தாமதத்தால் சுரங்கப்பாதையை தற்காலிகமாக மண் போட்டு மூடி விட்டனர். செயல் பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறுவதாக தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல், எரிபொருள் விரயம், ஆபத்தாக கடந்து செல்வதால் விபத்து அபாயம் போன்ற சிக்கல்களை தினமும் சந்தித்து வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன் சிக்கலுக்கு வழிகாண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுமை அடையும் நிலையை எட்டியுள்ளது. பலஇடங்களில் மேம்பால பணிகள் மட்டுமே முடிவடைய வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ்ஸ்டாண்ட் வரையுள்ள நான்கு வழிச்சாலையில் பல கனரகவாகனங்கள், கார்கள், இளைஞர்களும் பைக் ரேஸில், அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கும் நிலை கடந்த சிலநாட்களாக ஏற்பட துவங்கியுள்ளது. ஒருகார் கவிழ்ந்து நான்கு பேர் காயமடைந்தனர்.டூவீலரில் சென்ற எஸ்.ஐ. ஒருவர் தவறிவிழுந்து பலியானார்.வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலையிலேயே பயணிக்கின்றன. இவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சர்வீஸ் ரோட்டில் இறங்கும் போது வேகத்தை கட்டுப் படுத்தாமல் விபத்து ஏற்படுகிறது.விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.
பலா, மா அறுவடை சீசன் தொடங்கி ,ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை, பலா ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த பலாப்பழங்களை உண்ண வனப்பகுதியை விட்டு வெளியே யானைகள் கூட்டம்,கூட்டமாக வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தம்பாத்து ஊருணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக தோப்புக்குள் புகுந்து 25-க்கு மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து ,தென்னை மரங்கள், பலா பழங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டன என அப்பகுதி விவசாயிகள் கூறினர்இரவுநேரங்களில் காட்டுப்பன்றிகளும் அதிக அளவில் தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே தோட்டத்திற்குள் யானைகள், காட்டுப்பன்றி கள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறினர்.
ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காகராஜபாளையம் மூன்றாவது பிளாட்பார்மில் அமைந்துள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை முதல் பிளாட்பார்மில் மாற்ற வேண்டுமென பயணிகள் விரும்புகின்றனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள்ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வருகிறது. நுழைவு பாதைக்கு மாற்றாக வடக்கு பகுதியில், அகலமான நுழைவாயில் வாகன நிறுத்தம் பழைய நடைமேடையில் லிப்ட் பணிகள் முடிந்துள்ளது.பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளான திருட்டு, ஆட்கள் பொருட்களை தவறவிடுதல், விபத்துக்கள் குறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட வேண்டும். ஆனால் மூன்றாவது பிளாட்பார்மில் உள்ள பழைய கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாததால் புகார்கள் விடுபடுகின்றன. போலீசாரும் ஒவ்வொரு முறையும் நடைமேடை ஏறி இறங்கி ஸ்டேஷன்களுக்கு செல்வதில் சிரமம் எழுந்துள்ளது .அம்ரித் பாரத் திட்டத்தில் ஸ்டேஷன் மேம்பாட்டிற்கான கட்டிட பணி நடந்து வரும் நிலையில் பயணியர் சுலபமாக தொடர்பு கொள்வதற்காக முதல் பிளாட்பார்மில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.