சித்திரா பௌர்ணமியன்று சித்திரகுப்தனை வழிபட்டால் அவர் நம் பாவ கணக்குகளைக் குறைத்து, புண்ணிய கணக்குகளை அதிகமாக்குவார் என்றும் ஒரு நம்பிக்கை இருப்பதால் சித்திரா பௌர்ணமியன்று பெருமாள், சிவன், அம்பிகை போன்ற தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதோடு, சித்திரகுப்தனுக்கும் வழிபாடு செய்கிறார்கள். சித்திரா பௌர்ணமி சித்திரகுப்தனின் பிறந்த நாள் என்று ஒரு சாராரும், அவருடைய திருமண நாள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.மரணத்திற்கு அதிபதி கடவுளான யமதர்மராஜாவுக்கும் ஒரு சமயம் சிக்கல் ஒன்று நேர்ந்தது. தான் யாருடைய உயிரை பறிக்க வேண்டுமோ அவர்களைப் பற்றிய முழு விவரங்களைப் பற்றி தெளிவான கருத்துகள் இல்லாத தனது தர்மசங்கடத்தைஸ்ரீ பிரம்மாவிடம் இவர் முறையிடுகிறார். அச்சமயம் அங்கு தோன்றும் சிவபெருமான் சித்திரகுப்தனை அப்பணிக்கு அமர்த்துகிறார். சித்திரகுப்தரும் வெகு சிரத்தையாக மானிடர்கள் பிறந்த காலம் முதல் இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்து பாவ, புண்ணிய காரியங்களையும் 'ஆகாஷிக் குறிப்புகள்' ஒரு பதிவேட்டில் பதிவு செய்கிறார். இவரது ஒரு கையில் மையினை உடைய ஒரு கிண்ணமும் மறு கையில் சிறகால் ஆன எழுதுகோலும் இருக்கும். சித்திரா பௌர்ணமியன்று இவர் இந்தக் கணக்கை யமதர்மராஜாவிடம் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து கணக்குகளையும் முறையாக எழுதி பராமரித்து வருபவர் சித்திரகுப்தர்தான் என்பது இந்து சமய நம்பிக்கை. ஒருவருடைய இறப்புக்குப் பிறகு இந்தக் கணக்கு வழக்குகளைப் பொறுத்தே அவரவருக்கு சொர்க்கமோ நரகமோ அமையும் என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கையாகும்.சித்திரா பௌர்ணமியன்று, "சித்திரகுப்தன் இன்றைக்கு நம்மோட பாவ, புண்ணிய கணக்கை எழுதி யம தர்மராஜா கிட்ட கொடுக்கிற நாள். இன்னிக்கு சேட்டை எதுவும் செய்யாம ஒழுக்கமா ஜாக்கிரதையா இருங்க. ஒரு ஈ, எறும்பைக் கூட கொல்லக் கூடாது!" என்று வீட்டில் பெரியோர்கள் எச்சரிப்பதை சின்ன வயதிலேயே நாம் கேட்டிருக்கிறோம்.இன்று உப்பில்லாத விரதம் அனுசரித்து சித்திரகுப்தனை வழிபடுவார்கள். இன்று எருமைப் பாலில் செய்த பாயசம் சிறப்பான நைவேத்தியமாகும்."நாங்கள் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் கணக்கில் எடுத்துக்கொள்!" என்று சித்திரகுப்தரிடம் இறைஞ்சி வழிபடுகின்றனர்.சித்திரகுப்தருக்கு தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் தனிக்கோயில் உள்ளது. அதேபோல, தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திரபுத்திர நாயனார் என்னும் பெயருடன் கோயில் அமைந்துள்ளது. இதைத்தவிர, திருவண்ணாமலை அருணாசலேஸ்வார் கோயிலில் இவருக்கு ஒரு தனி சன்னிதி உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் நுழைவு வாயில் அருகே உள்ள பிராகாரத்தில் இவர் ஒரு தூணில் காட்சியளிக்கிறார்.சித்திரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலமும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இன்று சித்திரா பௌர்ணமி ஆகும். இன்று கிரிவலம் வருபவர்கள் ஈசனின் அருளோடு, சித்திரகுப்தரின் கருணையையும் பெற்று சிறக்கலாம்.
தமிழ் புத்தாண்டு சந்தோசத்திற்கும்,கொண்டாட்டதிற்கு மான தருணம் இதுகுடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்குமிகுந்த சந்தோசங்களையும்,வளங்களையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.
மழையும் வெயிலும்மண்ணுக்கு வேண்டும்ஈகையும் நட்பும்மனிதனுக்கு வேண்டும்இந்நன்னாளில் உங்கள்எல்லா துன்பங்களும்கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்கஇனிய ரமலான் வாழ்த்துக்கள்
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.உகாதி என்கிற சொல் சமசுகிருதம் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமசுகிருதத்தில்"யுக" என்ற சொல்லுக்கு வயது என்றும்,"அடி" என்ற சொல்லுக்கு தொடக்கம் என்கிற பொருள் கணப்படுகிறது."ஓர் ஆண்டின் தொடக்கம்" என்கிற பொருளில்"உகாதி" என்கிற சொல் வந்துள்ளதைக் காணலாம்.உகாதி சித்திரை மாதத்தின் சுத்த பாட்டிமை தினத்தில் வருகிறது. பெரும்பாலும், இப் பண்டிகை, ஆங்கில நாட்காட்டியின் படி, மார்ச்சு மாதக் கடைசியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வருகிறது.கர்நாடக மாநிலத்தில் இது "யுகாதி" என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் "உகாதி" என்றும் அழைக்கப்படுகிறதுதமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதனால், இப் பச்சடியில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள் கலந்துள்ளன. இது, வருகிற புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறதுமகாராட்டிரம் மாநில இந்துக்களால் இந்த நாள் குடீ பாடவா என்று கொண்டாடப்படுகிறது. .சிந்து மாகாணம், சிந்தி இன மக்கள் இதனை சேட்டி சந்த் என்று கொண்டாடுகிறார்கள்மணிப்பூர் வாழ் மக்கள் இதனை "சாஜிபு நொங்மா பன்பா" எனக் கொண்டாடுகின்றனர்.பாலி மற்றும் இந்தோனேசியா வாழ் இந்துக்கள் இதனை நைபி என்று கொண்டாடுகின்றனர்.
சின்னய்யா அழகப்பர் சிறுவிழிகள் மலர்ந்த தினம் சகலகலாவல்லித் தாய் பன்னெடும் நாள் புரிந்த தவம் முன்னவர் வழிபாட்டால் முந்தி வந்த மூலதனம் முளைத்தெழுந்த தாமரையாய் முகம் காட்டி மலர்ந்த தினம் விளைவிக்க கல்விப்பயிர் விவசாயி ஜனித்த தினம் சளைக்காமல் அள்ளியிட சூரியனார் உதித்த தினம் மழையாகத் தனம் பொழிய மனை தவழ்ந்த மன்னரினம் மகத்தான கல்வித்தாய் மகவொன்றை ஈன்ற தினம் துளைத்திடும் நோவுக்கே தனை ஈந்த வள்ளலினம்.byவள்ளி முத்தையா
சிவராத்திரி என்பது விழா அல்ல.அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிப்பது சரியானது.சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதைபுரிந்து கொள்ளலாம்.அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும்.நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர் .நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும். அலைபாயும் மனதை கட்டுப் படுத்த சிவராத்திரி மகாவிரதத்தை தத்துவம் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
ஆசைகளைவெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள்அவர்களிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசும் போதுஅவர்களின் ஆசைகள் மற்றும் இலட்சியங்கள் அவர்களின்உணர்வுகளை மதிப்போம் துணை யாய் நிற்போம்.
பத்தாம் திருநாள் 24.02.2024 சனிக்கிழமை (மாசி மாதம் 12ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடு காலை 7.15 7.45 மணிக்குள் கும்ப லக்னத்தில் தீர்த்தவாரி, மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடுமண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா - ஸ்ரீமதி R.நளினா ராமலெக்ஷ்மிஸ்ரீ S.R.ஸ்ரீராம் ராஜா - ஸ்ரீமதி S.சாரதா தீபாபஜன் மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: திரு. S.S. மாடசாமிராஜா அவர்கள் தலைமையில் வாழும் கலை அமைப்பினர்
ஒன்பதாம் திருநாள் 23.02.2024 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 11ம் தேதி) தேர்த்திருவிழாபல்வேறு வாத்யமேள தாளங்களுடன், காலை 6.00 மணிக்கு மேல் கும்ப லக்னத்தில் தேர்த்திருவிழாமண்டகப்படிதாரர்கள் ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்இரவு 7.35 மணிக்கு தேர் உலா பாதையில் வலம் வருதல்.மண்டகப்படிதாரர்கள் ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர்; செல்வன் R.M.பாலு, M.A.M.Phil., மதுரை. மற்றும் குழுவினர்.
எட்டாம் திருநாள்22.02.2024 வியாழக்கிழமை (மாசி மாதம் 10ம் தேதி) தெப்போற்சவம்இரவு 7.00 மணிக்கு திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் தெப்போற்சவம் தொடர்ந்து அம்பாள், ஸ்வாமி குதிரை வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்