இந்தியா, நியூசிலாந்து அணிகள்ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த பைனலில் மோதின. நியூசிலாந்து அணியில் மெக்கோன்கிக்கு பதிலாக ஜேக்கப் டபி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்,பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 255/5 ரன் குவித்தது. நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 'நடப்பு சாம்பியனாக' கள மிறங்கிய இந்திய அணி, இமாலய வெற்றியுடன் மீண்டும் கோப்பை வென்றது.
ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் கர்நாடகாவின் கலபுராகி நகரில் ,ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி ('நம்பர்-468'), அன்கிதா ரெய்னா ('நம்பர் -681) ,முதல்செட்டில் இருவரும், 6-6 என ஆனது. இதையடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' வைஷ்ணவி ஆதிக்கம் செலுத்தினார். முதல்செட்டை 7-6 என கைப்பற்றினார்.இரண்டாவது செட்டிலும் 4-4 என நீடித்தது. வைஷ்ணவி அடுத்த இரு 'கேம்களை' கைப்பற்றி, 6-4 என செட்டை வென்றார். ஆட்ட முடிவில்வைஷ்ணவி 7-6,6-4 என்றநேர்செட்டில் வெற்றிபெற்றுசாம்பியன்ஆனார்.வைஷ்ணவிக்கு ரூ. 4.5 லட்சம், அன்கிதாவுக்கு ரூ. 2.42 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட் மின்டன் தொடர் பர்மிங்காமில்ஆண்கள் ஒற்றையர்பிரிவு பைனலில், உலகின் 'நம்பர் -12' இந்தியாவின் லக்சயா சென், 'நம்பர்-2' வீரரான சுன்-யிலின் மோதினர். லக்சயா சென் 15-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
நடப்பு ஆண்டின் முதல் 'கிராண்ட் பிரிக்ஸ்’ பார்முலா 1 கார்பந்தயம்,ஆஸ்திரேலியாவின்மெல்போர்ன்நகரில்,'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஜார்ஜ்ரசல், பந்தய தூரத்தை ஒரு மணி நேரம்,23 நிமிடம்,06.801 வினாடியில் கடந்து 'சாம்பியன்' பட்டத்தை வென்றார்.'மெர்சிடஸ்' அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி 2வது இடம் பிடித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வதுசீசன்நேற்றுஇத்தாலியின்மிலன், கார்டினாநகரில்,முதன்முறையாக 56 நாடுகளை சேர்ந்த 616 பேர் பங்கேற் கின்றனர். இதற்கு முன், 2018ல் தென் கொரியாவில் நடந்த போட்டியில் 49 நாடுகளை சேர்ந்த 564 பேர் பங்கேற்றது அதிகம். ஐஸ் ஹாக்கி, ஸ்னோபோர்டு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில், 79 பதக்கப் போட்டிகள் நடக்கவுள்ளன.ஒருவர் கூட இந்தியா சார்பில் தகுதி பெறவில்லை. இம்முறை 160 வீராங்கனைகள் களமிறங்க இருப்பது சாதனை..
இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் நெபிலி ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மோதி, ஒரு மணி நேரம் 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யா வின் பர்டினாவை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் மற்றொரு காலிறுதியில் வென்றார்.இந் தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 7-6, 6-2 என, இந்தியாவின் சோனல், பெலா ஜோடியை பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் வென்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சோஹா, ஆகான்ஷா ஜோடி, 6-7, 6-0, 10-5 என ஜப்பானின் ஒஜெகி, இந்தியாவின் ஷிவானி ஜோடியை வென்றது.
பிராகு செஸ் தொடர் நடந்தது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, செக்குடியரசில், சாலஞ்சர் பிரிவில் பங்கேற்றார். நேற்று 9வது, கடைசி சுற்று போட்டிகள் நேற்று திவ்யா, செக் குடியரசு வீரர் ஸ்டீபனை எதிர்கொண்டார்.கருப்பு நிற காய்களுடன்விளையாடியதிவ்யா ,10வதுநகர்த்தலில்பின்தங்கி,26வதுநகர்த்தலில்ஸ்டீபன்செய்ததவறைபயன்படுத்திய திவ்யா, வெற்றி பெற்றார். திவ்யா 5.0 புள்ளியுடன் முடிவில் மூன்றாவது இடம் பெற்றார்.
எம். எஸ்.எஸ்., கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. இதன் 2025 சீசனில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி இடம் பெற்ற, இன்டர் மயாமி அணி முதன் முறையாக சாம்பியன் ஆனது.மெஸ்ஸி தொடர்ந்து 2வது ஆண்டாக (2024, 2025) தொடரின் சிறந்த வீரராக தேர்வானார்.இன்டர் மயாமி அணிக்கு நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பாராட்டு விழா நடந்தது. மெஸ்ஸி, லூயிஸ் சாரஸ், அலெண்டே,ரோட்ரிகோ டி பால் உள்ளிட்ட அணியினர், பங்கேற்றனர்.எம்.எல்.எஸ்., தொடரில் கோப்பை வெல்வது என்பது சாதாரண விஷயமல்ல. மிகவும் கடினமானது. மயாமி அணிக்கு மெஸ்ஸி வந்தார், வென்றார். இவர் மீது அதிக நெருக்கடி இருந்தது. இதற்கு முன் நியூயார்க் காஸ்மோஸ்அணிக்காக பிரேசில் ஜாம்பவான் பீலே, இங்கு விளையாடியுள்ளார். ஆனால், அவரை விட நீங்கள் சிறந்த வீரராக திகழ்கிறீர்கள் எனடிரம்ப் கூறினார்.'ஜெர்சியின்' இளஞ் சிகப்பு நிறத்தினால் ஆன, கால்பந்து, டிரம்ப் பெயர் பொறித்த மயாமி அணி 'ஜெர்சி', அதிபருக்கு வழங்கினர்.
இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாசென்று பங்கேற்கிறது. இப்போட்டி பெர்த்தில் இன்று துவங்குகிறது. இது, பெண்கள் கிரிக்கெட்டில் நடக்கவுள்ள 4வது பகலிரவு டெஸ்ட். .
இந்திய அணி 'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது..இரண்டாவது அரையிறுதியில் 'நடப்புசாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. 'டாஸ்' வென்ற ஹாரி புரூக், 'பவுலிங்' தேர்வு செய்தார்.இந்திய அணி 20 ஓவரில் 253/7 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.நேற்று நடந்த அரையிறுதியில் 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.இங்கிலாந்து அணி வெளியேறியது.ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.