25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jan 22, 2026

'பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்' வசூல் .

இந்த பொங்கலுக்கு 'பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. 9 நாளில் பராசக்தி படம் 80 கோடியும், மற்ற இரு படங்கள் முறையே 10 கோடியும்,20 கோடியும் வசூலை எட்டி உள்ளன. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியதாக படக்குழுஅறிவித்துள்ளது. இது இந்த ஆண்டின்முதல்ரூ.100 கோடிவசூல்படமாகும். 'டான், டாக்டர், அமரன், மதராஸி' படங்களைதொடர்ந்துசிவகார்த்திகேயனுக்கு 5வது 100  கோடி படமானது. 

Jan 22, 2026

ஒளிப்பதிவாளர் செழியனின் திரைப்பட மாணவர்கள் 34 இயக்குனர்களின் அறிமுக விழா.

'வழித்துணை' 'சுழற்சி', 'மத்தி' உள்ளிட்ட 34 படங்களை  ஒளிப்பதிவாளர் செழியனின் திரைப்பட மாணவர்கள் 34 பேர் இயக்குகின்றனர். இந்த படங்களின் துவக்கம், இயக்குனர்களின் அறிமுக விழா ஜன., 24ல் சென்னையில் நடக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவிவர்மன், எடிட்டர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 34 படங்கள் ஒரே நேரத்தில் தயாராகின்றது.

Jan 15, 2026

முதல்முறையாக பாலிவுட்டில் கல்யாணி பிரியதர்ஷன்.

கல்யாணி பிரிய தர்ஷன் நடித்த 'லோகா சாப்டர் 1'மலையாளத்தில் அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது. முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் .இவரை தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. பாலிவுட்டில். ரன்வீர் சிங் நடிப்பு, தயாரிப்பில் ஜோம்பி பின்னணியில் ஜெய் மேத்தா இயக்க, நாயகியாக கல்யாணி, ஒரு திரில்லர் படம் உருவாகிறது. 

Jan 15, 2026

வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் சீக்ரெட்.

சாப்பாடு பொறுத்தவரை, முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவேன், வீட்டில் செய்யும் உணவுகளே என் சாய்ஸ். ஹோட்டல் சென்றால் கூட, ஃபேன்சி உணவுகள் சாப்பிடவே மாட்டேன், 90 வயதாகும் வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் சீக்ரெட்டை கூறியுள்ளார்.

Jan 15, 2026

இந்திய அழகி ரியா சிங்கா தெலுங்கில் அறிமுகமாகும் படம் 'ஜெட்லி'.

தெலுங்கில் சத்யா நாயகனாக ரித்தேஷ் ராணா இயக்கத்தில் நடிக்கும் 'ஜெட்லி'. படத்தில் இந்திய அழகி ரியா சிங்கா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இவர் 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' 2024ல் நடந்த அழகி போட்டியில் பட்டம் வென்றவர். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், லாரா தத்தா, சுமன் ராவ் வரிசையில் இப்போது அழகியான ரியா சிங்காவும் சினிமாவிற்கு வந்திருக்கிறார்.

Jan 15, 2026

'டூரிஸ்ட் பேமிலி,காந்தாரா-2'  ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளன.

உலகளவில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விழா மார்ச்சில் அமெரிக்காவில் நடக்கிறது. சிறந்த திரைப்பட பிரிவில் தமிழிலிருந்து 'டூரிஸ்ட்பேமிலி', கன்னடத்திலிருந்து 'காந்தாராசாப்டர் 1, மகாவதார்நரசிம்மா', ஹிந்தியிலிருந்து 'தன்வி' சிறந்த வெளிநாட்டு பிரிவில் ஏற்கனவே இந்தியா சார்பில் 'ஹோம்பவுண்ட்' ஆகிய படங்கள் தேர்வாகி உள்ளன.

Jan 15, 2026

கஜேஸ், மறைந்த நடிகர்,நாகேஷ் பேரனின் புதிய படம்.

கஜேஸ்,மறைந்த நடிகர்நாகேஷின்பேரனும், நடிகர்ஆனந்த்பாபுமகன், நடித்த படங்கள்தோல்விஅடைந்தன.  அருள்பிரகாசம் இயக்கியுள்ள 'மனசும் மனசும் சேர்ந் தாச்சு' படத்தில் நாயனகாக நடித்துள்ளார்..

Jan 15, 2026

  ''கிராணி “படத்தில் சூனியக்காரியாக வடிவுக்கரசி

  ''கிராணி படம் பேய் திரில்லர் கதையில், விஜய குமாரன் என்பவர் இயக்க ,நடிகை வடிவுக்கரசி 80 வயது முதிய பெண்ணாக, சூனியக்காரியாக நடித்துள்ளார். 'தாய்கிழவி' படத்தில் ராதிகா, அங்கம்மாள்' படத்தில் கீதா கைலாசம்,  ஆகியோர் முதிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். 

Jan 15, 2026

மிக அதிகம் படித்த நடிகர் சார்லி.

உலக சினிமா வரலாற்றிலேயே அதிகம் படித்த ஒரே நடிகர் என்ற சாதனையினை படைத்துள்ளார் நடிகரும் வேதியியலில் முதுகலை பட்டம் மற்றும் டாக்டர் பட்டமும் வென்றவருமான சார்லி அவர்கள்  . M.Sc., M.Phil., Ph.D. 

Jan 15, 2026

பாக்யராஜ் மீண்டும் படம் இயக்க உள்ளார்.

பாக்ய ராஜ் தனது 72வது பிறந்தநாள் மற்றும் சினிமாவில் 50 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். நடிகரும் இயக்குனருமான அவர் அளித்த பேட்டியில், "சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். மீண்டும் படம் மற்றும் வெப் சீரியஸ் இயக்க உள்ளேன்" என்றார்.

1 2 ... 24 25 26 27 28 29 30 ... 89 90

AD's



More News