25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Feb 12, 2026

தமிழ் சினிமாவில் இந்த வார ரிலீஸ் படங்கள் .

பிப்., 13ல் "கா - தி பாரஸ்ட், மை லார்ட், மைலாஞ்சி, பூக்கி, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி, தெரிஞ்சா காத லிங்க, சீதா பயணம்” ஆகிய புதிய படங்கள் தமிழ் சினிமாவில் ரிலீஸாகின்றன. இதன் உடன் காதலர் தினத்தை முன்னிட்டு ரீரிலீஸாகின்ற 'உயிருள்ள வரை உஷா, மௌனம் பேசியதே, மின்னலே, காதலர் தினம்' ஆகிய பழைய படங்கள்.

Feb 12, 2026

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்குகலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கு கடந்த 2022முதல் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் வருதை  தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது.  2022ஆம் ஆண்டு ஆரூர்தாஸ், 2023ல் கவிஞர் மு.மேத்தா மற்றும் பி.சுசீலாஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருது பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்திற்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது முதுபெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கிய எம்.என்.ராஜம் குழந்தைநட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன், பாசமலர்உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதே போல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது சினிமாவாழ்க்கையை தொடங்கிய எஸ்.பி.முத்துராமன் ரஜினி, கமலை வைத்து பலவெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவர் முரட்டுக்காளை, தர்மத்தின் தலைவன்,குரு சிஷ்யன், சகலகலா வல்லவன், ஜப்பானில் கல்யாணராமன் உள்பட 70க்கும்மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்..

Feb 12, 2026

இரு வேடங்களில் அதர்வா நடிக்கும் 'வலை'

அதர்வா, வாணி போஜன், ரூபா மஞ்சரி நடிக்க, 9 ஆண்டுகளுக்கு பின் படம் ஜீவா சங்கர் இயக்குகிறார் 'வலை' என பெயரிட்டு, டீசர் வெளியிட்டுள்ளனர். குட்டி, சாரா இரு வேடங்களில் அதர்வா நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க,கடல், மீனவர்கள் பின்னணியில் உருவாகி உள்ளது..

Feb 05, 2026

வேள்பாரி கதையில் ரஜினியை நடிக்க வைக்க ஆசைப்படும் இயக்குனர் ஷங்கர்,

இயக்குனர் ஷங்கர்பல ஆண்டுகளாக'வேள்பாரி' நாவலை சினிமாவாக்க முயற்சித்து வருகிறார்.பட்ஜெட், நடிகர்களின் கால்ஷீட் காரணமாக தள்ளிப்போனது. தற்போது நடிகர்கள் விக்ரம், ரன்வீர் சிங்கை வைத்து படத்தை இயக்க ,மும்பை நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியை ஒரு கவுரவ வேடத்தில் அல்லது முக்கிய கேரக்டரில் ரஜினியைநடிக்க வைக்க ஆசைப்படும் ஷங்கர், அதற்காக ரஜினியை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். அவர் 'ஓகே' சொன்னால் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Feb 05, 2026

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் 94வது வயதில்இயக்கும் 61வது படம்.

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்,பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், லிட்டில் ஜான், ராஜ பார்வை, மைக்கேல் மதன காம ராஜன்' போன்ற படங் களை இயக்கியவர். தற்போது94 வயதை எட்டியுள்ள அவர், தனது61வது படத்தை இயக்க,தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் பட தலைப்பை அறிவிக்கின்றனர்.

Feb 05, 2026

அட்லிஇயக்கும் படத்தில் இணையும் ஜான்வி கபூர்.

அல்லு அர்ஜூனின்22வது படத்தை அட்லிஇயக்க,தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் நாயகிகளாக நடிக்கின்றனர். அட்லி,ஜான்வி கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தவிர்த்து மற்ற நடிகர்களை வைத்து இயக்கி வந்தார் .ஜான்விஇம்மாதம் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Feb 05, 2026

பிப்ரவரி.6ல் வெளியாக உள்ள படங்கள்.

2026ல் முதல் மாதமான ஜனவரியில் 22 படங்கள் ரிலீசாகின. பிப்ரவரியிலும் ரிலீசாக படங்கள் வரிசையாக உள்ளன. 'கில்லி மாப்பிள்ளை, காதல் கதை சொல்லவா, ரெட் லேபிள், வித் லவ், யோகி டா' என5 நேரடி தமிழ் படங்களும், பாவனா, ரகுமான் நடித்த 'அனோமி' என்ற மலையாள படத்தின் தமிழ் டப்பிங்கும் முதல் வாரமான பிப்.6ல் வெளியாக உள்ளன.

Feb 05, 2026

பிப். 13ல் 'மை லார்ட்' படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

ராஜூ முருகன் இயக்கத்தில் மை லார்ட் என்ற படத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.சைத்ரா ஆச்சர், ஆஷா சரத்  உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து ஒரு தனி மனிதனின் போராட்ட களமாக இப்படம் உருவாகி உள்ளது. பிப். 13ல் படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

Feb 05, 2026

கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

விக்ரம், ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்த 'துருவ நட்சத்திரம்' படம் கவுதம் மேனன் இயக்கத்தில் 2017ல் முடிந்து இன்னும் வெளியாகவில்லை.கவுதம் மேனன் இப்படம் பற்றி,"ரிலீஸ் தேதிபலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது, பைனான்ஸ் பிரச்னையை சரி செய்ய இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது இறுதிகட்ட பிரச்னைகளை சரிசெய்து வருகிறேன். இன்னும் இரு வாரங்களில் பட ரிலீஸ் தேதியை அறிவிப்போம் .இதன் ரிலீசுக்காக புதிய படங்களை இயக்காமல் இருக்கிறேன்" என்று கூறினார்.

Feb 05, 2026

'ரணபலி' விஜய் தேவரகொண்டாவின் 14வது படம். 

விஜய் தேவரகொண்டாவின் 14வது படத்திற்கு ,ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில், 'ரணபலி' என பெயரிட்டு அறிமுக வீடி யோவை வெளியிட்டுள்ளனர். ராஷ்மிகா, ஹாலிவுட்டின் மம்மி பட புகழ் அர்னால்ட் வோஸ்லு ஆகியோர் நடிக்கின்றனர்.  செப்., 11ல் 5 மொழிகளில் ரிலீஸாக உள்ள படம், 1876 காலகட்ட கதையில் பிரீயட் படமாக உருவாகிறது..

1 2 ... 21 22 23 24 25 26 27 ... 89 90

AD's



More News