25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Feb 26, 2026

'அமரன்' திரைப்படம் 7 பிலிம்பேர் விருதுகளை வென்றது.

பிலிம்பேர்விருதுகள். 70வதுவிருதுவழங்கும் விழாவில்தமிழ்மொழிபடங்களில்ராஜ்குமார்பெரியசாமிஇயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த 'அமரன்' படம், 'சிறந்த திரைப்படம், சிறந்தநடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசை அமைப் பாளர், சிறந்த பாடகர், பாடகி, ஒளிப் பதிவாளர்' என 7 விருதுகளை வென்றது.கொச்சியில் நடந்த 70வது பிலிம்பேர் விருதில் 'அமரன்' படத் திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றார் சிவகார்த்திகேயன். விழாவில் பேசிய அவர், "13ஆண்டுகளுக்கு முன் பிலிம்பேர் விருதுக்கு தனுஷ் உடன் வந்தேன். சும்மா வா ஜாலியா போய்ட்டு வரலாம் என கூட்டிட்டு போனார். அப்போது 2வது வரிசையில் எனக்கு சீட் இருந்தது. இப்போது முன் வரிசையில் சீட்டு ஒதுக்கப் பட்டிருந்தது. இதைஅடையஎனக்கு 13 ஆண்டுகளானது" என்றார்.

Feb 26, 2026

மெய்யழகன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது .

மெய்யழகன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ,கேரள சுற்றுலாவுடன் இணைந்து 70வது பிலிம்பேர் விருதுகள்,  விழாவில் விருது (தமிழ்) கார்த்திக்கு வழங்கப்பட்டது. 

Feb 26, 2026

மோகன்லால்  மகளான  விஸ்மாயா அறிமுகமாகும் ‘தொடக்கம்' படப்பிடிப்பு நிறைவு.

ஜூட் ஆண்டனி இயக்கி, மோகன்லால் மகளான விஸ்மாயா 'தொடக்கம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஓணம் பண்டிகைக்கு படம் ஆக.,26 ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

Feb 26, 2026

பிப்., 27 ல்  சரத்குமார் (ஆழி), ராதிகா (தாய் கிழவி) ஆகியோரின் படங்கள் மோதுகின்றன.

.பிப்ரவரி 27ல்,ஏ படம், ஆழி, பேர்த் புளோர், தாய் கிழவி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் கணவன், மனைவியான சரத்குமார் (ஆழி), ராதிகா (தாய் கிழவி) ஆகியோரின் படங்கள் மோதுகின்றன.

Feb 26, 2026

நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பு துவக்கம்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல், அமிதாப் பச்சன், என பலர் நடித்து  2024ல் வெளியான படம் 'கல்கி 2898 ' . இந்திய அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் 2ம் பாகத்தில் சாய் பல்லவி இணைந்ததாக சொல்கின்றனர்.. அமிதாப், கமல் நடிக்கும் காட்சிகள் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

Feb 26, 2026

அபிஷேக் நமா இயக்கத்தில் 'நாகபந்தம்'டீசருக்கு வரவேற்பு.

விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிப்பில்  அபிஷேக் நமா இயக்கத்தில் உருவான 'நாகபந்தம்' படத்தின் டீசர் வெளியானது. ஆன்மிகம் அட்வென்சர் படமாக உருவாகி ,நடித்தவர்கள் வளர்ந்து வரும் நடிகர்கள். இருப்பினும் டீசருக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Feb 19, 2026

நேரடியாக ஓடிடியில் பிப்.20ல் ரிலீஸாகும் 'லக்கி'

ஜிவி பிரகாஷ் தற்போது 'லக்கி தி சூப்பர் ஸ்டார் என்ற படத் தில் நடித் துள்ளார்.  உதய் மகேஷ் இயக்கி ,அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க, உள்ளார். வரும் பிப்., 20ல் நேரடியாக ஓடிடியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸாகிறது,குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி உள்ள இப்படம்.

Feb 19, 2026

பஹத் பாசில் ஆவேஷம் 2': அப்டேட் 

 ஜித்து மாதவன் இயக்கத் தில் 2024ல் ரிலீசாகி ,மலையாளத்தில் பஹத் பாசில் நடித்து, ரூ.150 கோடி வசூலித்த படம் 'ஆவேஷம்'. பஹத்திற்கு முதல் 100 கோடியை கடந்த படம் , இதன் 2ம் பாகம் பற்றி பேசியுள்ள பஹத் பாசில், அதற்கான பணிகள் துவங்கி யுள்ளதாகவும், 2027 அல்லது 2028ல் படப் பிடிப்பு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Feb 19, 2026

இளையராஜாவின் 2வது சிம்பொனி விரைவில் 

இளையராஜா கடந்தாண்டு லண்டனில் 'வேலியன்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.அடுத்து 2வது சிம்பொனியை எழுதப்போவதாகவும் அறிவித்த இளை யராஜா வெளியிட்ட பதிவில், 'புதிய ஸ்டுடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் ஆகி,. எனது இரண்டாவது சிம்பொனியின் எழுத்துப் பணியும் முடித்தது ' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Feb 19, 2026

சாகித் கபூருக்கு  மீண்டும் ஜோடியாகும் ராஷ்மிகா.

 ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை .ஹிந்தியில் சாகித் கபூருக்கு ஜோடியாக இவர் நடித்த 'காக் டைல் 2" படம் விரைவில் ரிலீசாகிறது. . காதல், காமெடி கதையில்,. 'மைதான்' இயக்குனர் அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்க, இவர்கள் ஜோடி மீண்டும் இணைகிறது. 

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 89 90

AD's



More News