25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Mar 19, 2026

என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக் கொண்டேன்" எனக்கூறி கண்கலங்கினார். சிவகார்த்திகேயன்.

சிவ கார்த்திகேயன்  தயாரித்து,சிவகுமார் முருகேசன் இயக்கிய 'தாய் கிழவி' பட. ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த ,படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "தொடர்ந்து நல்ல படங்கள் தயாரிக்க போகிறேன். ப்ரிவியூ காட்சியை பார்த்தபோது இயக்குனர் சிவகுமார் முருகேசனின் தந்தை என்னையும், சிவகுமாரையும் கட்டிப்பிடித்த ,தருணத்தில் என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக் கொண்டேன்" எனக்கூறி கண்கலங்கினார். 

Mar 19, 2026

திரைப் படங்களுக்கு சப் டைட்டில் கட்டாயம்.

காது கேளாதவரும், பார்வையற்றோரும் திரைப்படங்களை பார்க்கும் வகையில் ,சில விதி முறைகளை சென்சார் போர்டு வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மார்ச் 15 முதல் புதிய படங்களில் சப் டைட்டில், ஒலி வடிவில் காட்சிகளை விவரிக்கும் ஆடியோ ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.  சென்சார் சான்றிதழ் தணிக்கைக்கு சமர்ப்பிக்கும் போதே சப் டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்பினால் தான் வழங்கப்படுமாம்.

Mar 19, 2026

'துரந்தர் 2' முன்பதிவு கடந்த வாரம் துவங்கி ,100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாம்.

ரன்வீர் சிங் நடித்துள்ள ஆதித்யாதர் இயக்கத்தில் 'துரந்தர் 2', மார்ச் 19ல் ரிலீஸாகிறது. இப்படத்தின் முன்பதிவு கடந்த வாரம் துவங்கி, 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாம். இந்தியாவில் மட்டும் 60 கோடி, வெளிநாடுகளில் 40 கோடி என முன்பதிவு ஆகியுள்ளதாம். இது மேலும் அதிகரிக்கலாம்.

Mar 19, 2026

 நடிகர் தனுஷ் கென் கருணாஸிற்கு கூறிய அறிவுரை

   தேர்வுகள், சட்டசபை தேர்தல் போன்ற காரணங்களால் இந்தவாரம் ரிலீஸில் சுணக்கம் நிலவுகிறது.தமிழில் குறைந்தது  ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வெளியான நிலையில் இந்தவாரம் மார்ச் 19ல் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள 'யூத்' படம் மட்டுமே வெளியாகிறது. தவிரஹிந்தி படமான 'துரந்தர்2 ' தமிழில் டப்பாகி ரிலீஸாகிறது. கென் கருணாஸ் இயக்கி நடித்தி ருக்கும் 'யூத்' படம் மார்ச் 19 ரிலசாகிறது. இப்பட விழாவில் பங் கேற்று பேசிய நடிகர் தனுஷ், "யூத் அடைகிற வெற்றி அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர் கருப்பையாவிற்கு தான் சேரும். எல்லார்கிட்டையும் எல்லாம் இருக்கும். ஆனால் கொடுக்க மனம் வராது. நட்பை வார்த்தையில் வைக்காமல் மனதில் வைப்பது நல்லது"எவ்வளவு வெற்றி அடைந்தாலும் கென், அவரை மனதில் வைக்க வேண்டும். மறக்க கூடாது என அறிவுரை வழங்கினார்.

Mar 19, 2026

இயக்குனர் பிரியதர்ஷனின் 100வது படத்தில் முதல் பட நாயகன் மோகன்லால்.

 'பூச்சக் கொரு மூக்குத்தி' 1984ல் மோகன்லாலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.பிரியதர்ஷன், பின்னர் பல  மொழிகளில் படங்களை இயக்கினார்.   இவரது 98வது படம் ஏப்.10ல் ரிலீசா கும் அக்ஷய் குமாரின் 'பூத் பங்களா' ,ஹிந்தியில் சைப் அலிகான் நடிப்பில் 'ஹைவான்' 99 வது படத்தை இயக்க உள்ளார்.  தனது முதல் படத்தில் நடித்த மோகன்லாலை பிரியதர்ஷன், இயக்கும் 100வது படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Mar 12, 2026

மகளிர் தினத்தை முன்னிட்டு 'மயிலா' படத்தின் டீசர் வெளியானது.

குணச்சித்ர வேடங்களில் நடித்த செம்மலர் அன்னம், தற்போது 'மயிலா' எனும் படத்தை இயக்கியுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியானது. படம் பற்றி பேசிய செம்மலர் அன்னம், பெண்கள் பெரும் பொறுப்புகளை சுமந்தாலும் அதற்கான அங்கீகாரம் அரிதாகவே கிடைக்கிறது “நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளால் உருவானது .

Mar 12, 2026

இந்த வாரம் படங்கள் ரிலீஸ் .

50க்கும் மேற்பட்ட படங்கள் இந்தாண்டில் இதுவரை வெளியாகி உள்ளன. இந்தவாரம் மார்ச் 13ல் "கெணத்த காணோம், கொலைச் சேவல், போலீஸ் பேமிலி, வெஞ்சென்ஸ், வௌவல்ஸ்" ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. பிரியங்கா மோகனின் 'மேட் இன் கொரியா' படம் மார்ச் 12ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

Mar 12, 2026

65 மில்லியன் பார்வைகள்'துரந்தர்-2' டிரைலர்.

 ஆதித்யா தர்,ரன்வீர் சிங் கூட்டணியில் துரந்தர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. மார்ச் 19ல் படம்வெளியாகஉள்ளநிலையில் இதன்டிரைலர்மார்ச் 7ம்தேதிவெளியானது.தமிழ், தெலுங்குஉள்ளிட்ட 5 மொழிகளையும் சேர்த்து 65 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன.

Mar 12, 2026

50 கோடி 10 நாளில் வசூலித்த 'தாய் கிழவி'.

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் இந்தாண்டில் இதுவரை வெளியான 50க்கும் அதிகமான படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி' ஆகிய படங்கள் தான் லாபம் தந்துள்ளது. 'தாய் கிழவி. படம் வெளியான 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது.

Mar 12, 2026

மகேஷ்பாபுவை ஸ்டார் ஆக்கிய 'போக்கிரி' .

'வாரணாசி' படத்தில்  ராஜமவுலி இயக்க, நடிக்கிறார் மகேஷ்பாபு. அவர் அளித்த பேட் டியில், “2006 ரிலீசான 'போக்கிரி' படம் வெற்றி பெற்று என்னை ஸ்டார் ஆக்கி,. எனக்கு வேறு வித மான பெரிய அனுபவத்தை கொடுக்கிறது" ,ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 89 90

AD's



More News