25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Feb 19, 2026

சிவகார்த்திகேயன் படத்தில் மலையாள நடிகர் திலீப்

'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் என்பவர் இயக்கத்தில் அடுத்து  நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். கிராமத்து கதையில் உருவாக உள்ள இந்த படத்திற்கான புரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பை மதுரையில் எடுக்க உள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Feb 19, 2026

தேர்வுகள் நடப்பதால் பட வெளியீட்டில்,தியேட்டர்களுக்கு சிக்கல்.

இந்த வாரம் பிப்., 20ல் "லவ் சப்ஸ்க்ரைப் ஷேர், சிவசம்போ, எம்ஜி 24” ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன.  17th feb முதல் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வுகள் துவங்குகின்றன.அடுத்த இரு மாதங்களுக்கு தேர்வுகள் நடப்பதால் பட வெளியீட்டில் சுணக்கம் நிலவும் என்பதால் தியேட்டர்களுக்கு இன்னும் சிக்கல் ஏற்படலாம்.

Feb 19, 2026

ராம் சரண், மனைவி உபாசனா அவர்களின் இரட்டையர்களுக்கு சிவராம் மற்றும்அன்வீரா தேவி என்று பெயர்.

நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா, ஜனவரி 31அன்று தங்கள் இரட்டைக் குழந்தைகளான ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தையை வரவேற்ற பிறகு இரட்டைக் குழந்தைகளுக்கு ஷிவ்ராம் மற்றும் அன்வீரா தேவி என்று பெயர் சூட்டி.நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா, ஜனவரி 31அன்று தங்கள் இரட்டைக் மகிழ்ச்சியின் புதிய கட்டத்தில் திளைத்து வருகின்றனர்.அவர்கள் தங்கள் பதிவில் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்திருப்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது,எங்களுக்கு மிகுந்த நன்றியுணர்வை அளிக்கிறது. எங்கள் வாழ்க்கையில் பெண்கள் எங்கள்மிகப்பெரிய பலமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தருணத்திலும் எங்களுடன் நின்று எங்களுக்குஆதரவளித்த எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நான்மிகவும் நன்றி கூறுகிறேன்என்று எழுதியுள்ளனர்.இந்தச் செய்திக்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் நலம் விரும்பிகள்ஏராளமானோர் அன்பைப் பொழிந்தனர்.சில நாட்களுக்குப் பிறகு, இரட்டையர்களின் வருகையைச் சுற்றியுள்ள ஆன்மீக மற்றும்ஜோதிட ஏற்பாடுகளை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோவைப் பகிர்வதன் மூலம் உபாசனாஅவர்களின் பயணத்தைப் பற்றிய ஒரு நெருக்கமான பார்வையை வழங்கினார்.எங்களுக்காக பிரார்த்தனை செய்த உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் - உங்கள்ஆசீர்வாதங்கள் என்றென்றும் போற்றப்படும்.2012 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்ட ராம் சரண் மற்றும் உபாசனா,2023 ஆம் ஆண்டு முதல் முறையாக தங்கள் மகள் கிளின் காரா கொனிடேலாவின் பிறப்புடன் பெற்றோரானார்கள்.

Feb 19, 2026

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் அனிமேஷனில் தயாராகிறது.

 'ஆர் ஆர்ஆர்' படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில் தற் போது 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இவர் இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தை அனி மேஷனில் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜப்பான் நிறுவனம் ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

Feb 19, 2026

'அனிமல்-2'வில் ரன்பீர் கபூருக்கு இரட்டை வேடம்.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஆயிரம் கோடிவசூலித்தது. இதன் 2 ம் பாகத்திற்கு 'அனிமல் பார்க் என பெயர் வைத்துள்ளனர். சந்தீப் ரெட்டி, "தற்போது பிரபாஸை வைத்து 'ஸ்பிரிட்' படத்தை இயக்கி வருகிறேன். 'அனிமல் 2' படப்பிடிப்பு 2027 ஜூனில் துவங்கும். இதில் ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிப்பதால் , 'அனிமல் பார்க்' டைட்டில் வைத்துள்ளேன்" என்றார்.

Feb 12, 2026

பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்.

'ராமாயணா' படத்தில் சீதாவாக சாய் பல்லவி, மூக்குத்தி அம்மன் 2'வில் அம்மனாக நயன்தாரா நடிக்க ,'நாகபந்தம்' படத்தில் நடிகை நபா நடேஷ் பார்வதியாக நடிக்கிறார். கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகிறது.அபிஷேக் இயக்கும் இப்படத் தில் தெலுங்கு நடிகர் விராட் கர்ணா ஐஸ்வர்யா மேனன் இன்னொரு நாயகியாகவும் நடிக்கின்றனர்.

Feb 12, 2026

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் பாலிவுட் ஹிந்தி நடிகர்  ஜிம் செராப்.

அல்லு அர்ஜுன் நடிக்கும்  22வது படம் 600 கோடி பட் ஜெட்டில் அட்லி இயக்கத்தில் உருவாகிறது.. இப்படத் தில் பாலிவுட் நடிகர்  ஜிம் செராப் இணைந்துள்ளார். இவர் கடந் தாண்டு வெளியான தனுஷின் 'குபேரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். நாயகிகளாக தீபிகா படுகோனே மிருணாள் தாகூர் நடிக்கின்றனர்.

Feb 12, 2026

இயக்குனர் ஷங்கருக்கு அமெரிக்க விசா கிடைக்க உதவிய பாடல்:

படத்தில் ஒரு பாடலை தவிர அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். அந்த ஒரு பாடலை வாலி எழுதியிருந்தார். ஆனால் அந்த ஒரு பாடல் தான் இயக்குனர் ஷங்கருக்கு அமெரிக்கா செல்வதற்கான விசாவை பெற்று கொடுத்துள்ளது என்றால் நம்ப முடிகிறது. இதுதான் உண்மை. இது குறித்து பேசிய ஷங்கர், அமெரிக்கா செல்வதற்காக விசா நேர்காணலுக்குச் சென்றுள்ளார். அமெரிக்கன் எம்பெஸியில், ஒரு அமெரிக்கப் பெண் அதிகாரி அவரிடம் நீண்ட நேரமாக விசாரணை நடத்தியுள்ளார். நீங்கள் யார்? எதற்காக அமெரிக்கா செல்கிறீர்கள்? உங்கள்பின்னணி என்ன?" என சுமார் அரை மணி நேரம் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார். இந்த கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் சொல்லி இருந்தாலும், அந்த அதிகாரிக்குத் திருப்தி ஏற்படவில்லை. விசா கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது அப்போது அந்தப் பக்கமாக தூதரகத்தில் பணியாற்றும் ஒரு தமிழர் தற்செயலாக வந்து என்னை அடையாளம் கண்டுகொண்டு இவர் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குளர்,'காதலன்" என்ற படத்தை இயக்கியவர்" என்று அந்த அதிகாரியிடம் கூறினார்.அதற்கு அந்த அமெரிக்கப் பெண், "காதலனா? என்று சந்தேகமாக கேட்டார் அப்போது அந்த தமிழர், அந்தப் படத்தில் 'முக்காலா முக்காலா" என்ற பாடல் வருமே, அந்தப் படம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பெண் அதிகாரி அந்த படத்தின் இயக்குனரா என்று ஆச்சரியமாக கேட்டு, உடனடியாக விசா நடைமுறைகளை முடித்துவிட்டு எனக்கு அமெரிக்க விசாவுக்கான அங்கீகாரத்தை கொடுத்தார் என்று ஷங்கர் கூறியுள்ளார்.

Feb 12, 2026

'மன சங்கர வர பிரசாத் காரு'.

'மன சங்கர வர பிரசாத் காரு' தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து சமீபத்தில் வெளியான படம் வெற்றி பெற்றது. அடுத்து இவரின் 158வது படத்தை பாபி கொல்லி இயக்கு கிறார்.முக்கியவேடத்தில் மோகன் லால் நடிக்க, நாயகியாக பிரியா மணி இணைந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இருந்த சாரா, சமீபத்தில் துரந்தர் படத்தில் நாயகியானார். தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கிறார். அடுத்து சிரஞ்சீவி யின் 158வது படத்தில் அவரது மகளாக நடிக்க ,இதில் நடிக்க முதலில் கிர்த்தி ஷெட்டியிடம் பேசி வந்த நிலையில் அவர் மறுக்க இவர் இணைந்துள்ளார். . ஏஆர் ரஹ் மான் இசை.விரைவில் படப் பிடிப்பு துவங்க உள்ளது.

Feb 12, 2026

'மைலாஞ்சி' பிப்.  13ல் ரிலீஸ்.

 இளையராஜா இசையமைத்து, பாடல்கள் எழுதி உள்ளார். ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப் நடித்து அஜயன் பாலா இயக்கத்தில் படம். 'மைலாஞ்சி'. மலைப்பிரதேச பின்னணியில் காதல் கதையில் உருவாகி உள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்த சூழலில் பிப்., 13ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 89 90

AD's



More News