25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Dec 25, 2025

இந்தாண்டின் (2025) கடைசியாக  ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் .

 டிச.25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் அன்றே படங்கள் வெளியாகின்றன. அருண்விஜயின்‘ரெட்டதல', விக்ரம் பிரபுவின் 'சிறை' மற்றும் சோனியா அகர்வாலின் 'பருத்தி' படங்கள் ரிலீஸாகின்றன. டிச.26ல் 'ரகசிய சினேகிதனே' என்ற படம் வெளியாகிறது.சுரேஷ் ராஜ குமாரி இயக்கத்தில் விக்ரம்பிரபு, எல்கே அக்ஷய் குமார், அனந்தா, அனிஷ்மா நடித்துள்ள 'சிறை' படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தின் இரண்டாவது பாடலான "மின்னு வட்டம் பூச்சி" வெளியாகி உள்ளது. ஜஸ் டின் பிரபாகர் இசையில் யுவன் ஷங்கர் ராஜா, பத்மஜா ஸ்ரீனிவா சன் பாடி உள்ளனர். கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுதி உள்ளார்

Dec 25, 2025

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2026 மார்ச் 15ல் அமெரிக்காவில் நடக்கிறது

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்காக இந்தியாவில் இருந்து அரசின் சார்பில் ஒரு படம் அனுப்பி வைக்கப்படும்.  மதம், சாதி கடந்த புனிதமான நட்பையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வலியையும் உணர்த்திய  படம் .நீரஜ் கய்வான் இயக்கி, இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா நடித்துள்ள 'ஹோம் பவுண்ட்' படம் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் தகுதிப் பட்டியலுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது.

Dec 25, 2025

.'தி மம்மி' பட வில்லன் விஜய் தேவரகொண்டா படத்தில்…

விஜய் தேவரகொண்டாவின் படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். நாயகியாக ராஷ்மிகா நடிக்க ,இதன் படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் ஹாலிவுட் படமான 'தி மம்மி'யில் வில்லனாக நடித்த அர்னால்ட் வோஸ்லு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இணைந்துள்ளார்.

Dec 25, 2025

2025 ல் 'காந்தாரா சாப்டர்’ ரூ 850 கோடி பட வசூலை “துரந்தர்” முறியடித்து ரூ. 870.30 கோடி வசூலித்தது.

ஹிந்தியில் சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' படம் 2025ல் அதிக வசூலை குவித்த இந்திய படமாக ரூ.870.30 கோடி வசூலித்து முதலிடம் பிடித்தது. முன்னதாக ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட படமான 'காந்தாரா சாப்டர்’ ரூ 850  கோடி பட வசூலை “துரந்தர்” முறியடித்து ரூ. 870.30  கோடி வசூலித்தது. 

Dec 18, 2025

8 மணிநேர வேலை வர வேண்டும் என நடிகைகள் கருத்து. சாத்தியமில்லை  என  மலையாள நடிகர் துல்கர் சல்மான் .

நடிகைகள் தீபிகா படுகோனே, ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போன்றோர் ,சினிமாவிலும் 8 மணிநேர வேலை வர வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மலையாள நடிகர் துல்கர் சல்மான், "8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை. ஒரு நாளைக்கு சில மணிநேரம் கூடுதலாக வேலை செய்வது நல்லது. இல்லாவிட்டால் அடுத்த நாள் ஷூட்டிங் நடத்தும் செலவு அதிகமாகும்" என்றார்.

Dec 18, 2025

'பராசக்தி' படத்திற்காக சிறப்பு கண்காட்சி

சிவகார்த்தி கேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா நடித் துள்ள சுதா கொங்கரா இயக்கத்தில்,   படம் பராசக்தி'. 1965 கால   கட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப் பட்டுள்ள இப்படம் ஜன.14ல் ரிலீசாகிறது. இதனை பிரபலப்படுத்தும் நோக்கில், 'தி வேர்ல்ட் ஆப் பராசக்தி என்கிற பெயரில் டிச.16 முதல் ஒரு வாரத்திற்கு நடத்த படக்குழு, 60களில் உள்ள பொருட்களை வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பு கண் காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

Dec 18, 2025

 'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கிறார்.

'ப்ரோடாடி'படத்தில்பிரித்விராஜுக்குஅப்பாவாக மோகன்லால்நடித்திருந்தார்.வைசாக்இயக்கிவரும்பிரித்விராஜ் நடிப்பில் ,'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அதுவும் பிரித்விராஜின் தாத்தாவாக “மாம்பரக் கல் அகமத் அலி “என்கிற தாத்தா வேடத்தில் நடிக்கிறாராம். இரு பாகங்களாக உருவாகும் இப்படம் பற்றி பிரித்விராஜ், "2026 ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகும் முதல் பாகத்தில், இந்த ஜாம்பவானை சந்தியுங்கள், இரண்டாம் பாகத்தில் அவரது ரத்த சரித்திரத்தை தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

Dec 18, 2025

புதிய சாதனையை படைக்கும் ஜப்பானில் வெளியாகும் 'புஷ்பா 2'.

  அல்லு அர்ஜுன், ராஷ் மிகா, பஹத் பாசில் நடிப் பில் சுகுமார் இயக் கத்தில் கடந்தாண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்த படம் 'புஷ்பா 2'. இதை இப்போது ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்து ,ரிலீஸ் செய்வதாக அறிவித் துள்ளனர். வசூலில் அங்கு வரவேற்பை பெற்றால் மற்றுமொரு புதிய சாதனையை படைக்கும்.

Dec 18, 2025

தமிழ் பிரிவில்  சென்னை திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்கள் போட்டியிடுகின்றன

டிச., 11 முதல் 18 வரை 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. 27 மொழி களில் 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்படு கின்றன. "அலங்கு. வேம்பு, மாயகூத்து, மருதம், காதல் என் பது பொது உடமை, டூரிஸ்ட் பேமிலி, 3 பிஎச்கே, மாமன், ஒன்ஸ் அபான் டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, பறந்து போ, பிடி மண்" ஆகிய 12 படங்கள் தமிழ் பிரிவில் போட்டியிடுகின்றன.

Dec 18, 2025

நடிகர் சிரஞ்சீவியின் 157வது படம் 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' ஜன.12ல் ரிலீஸ்.

தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி, தனது 157வது பட மாக 'மனா சங்கரா வரபிர சாந்த் காரு' எனும் படத் தில் நடித்துள்ளார். நாயகி யாக நயன்தாரா, முக்கிய கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா நடித்துள்ளனர். இப் படம் ஜன., 12ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். ஏற்க னவே தெலுங்கில் பிரபாஸ் நடித்த 'தி ராஜா சாப்' படம் ஜன.,9ல் ரிலீசாவதாக அறி வித்துள்ளனர். இதனால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 89 90

AD's



More News