25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Dec 18, 2025

அம்மா சென்டிமென்ட் இளையராஜா, யுவுன்  இணைந்து பாடிய பாடல்.

சண்முக பாண்டியன், சரத்குமார் நடித்துள்ள படம் " - பொன்ராம் இயக்கத்தில் , யுவன் இசையமைக்க 'கொம்பு சீவி'. நாயகியாக நடிகை ராணி மகள் தார்ணிகா அறிமுகமாகிறார். அவர் கூறுகையில், "இதில் அம்மா சென்டிமென்ட் ஒரு பாடல் உள்ளது. யுவன் நானும், அப்பா இளையராஜாவும் இணைந்து பாடியுள்ளோம்., விஜயகாந்த் மகன் ஹீரோ என்றதும், மறுப்பு ஏதும் சொல்லாமல் இசைய மைக்க ஒப்புக் கொண்டேன்" என்றார்.

Dec 18, 2025

உலகளவில் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. 'துரந்தர்'.

 ஹிந்தியில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், சாரா அர்ஜுன் நடிப்பில் , ஆதித்யதர் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் 'துரந்தர்'. இந்திய ஏஜன்ட் ஆன ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் நுழைந்து என்ன செய்கிறார் என்பது தான் கதை. படம் வெளியான 5 நாளில் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 160 கோடியும்,  உலகளவில் ரூ.200 கோடியை எட்டி உள்ளது. இப்படம் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 430.20 கோடி வசூலித்துள்ளது

Dec 18, 2025

ஹாலிவுட் படமான 'அவதார் 3' ரிலீஸ் ஒதுங்கும் தமிழ்ப் படங்கள்.

ஹாலிவுட்படமானஅவதார் 3 இந்த வாரம் வெளியாக உள்ளதால்,இந்தியாவில்இந்தபடத்திற்குஅதிகதியேட்டர்கள் கிடைத்திருப்பதால் மற்ற படங்கள் ஒதுங்கிவிட்டன.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்தாறு படங்கள் ரிலீஸாகி வந்தன. இந்தவாரம் டிச.,19ல் சண்முக பாண்டியன், சரத்குமாரின் 'கொம்பு சீவி' படம் வெளியா கிறது. இதனுடன் ஓரிரு சிறு படங்கள் ரிலீஸாகலாம்.

Dec 18, 2025

“ஒஜி' பட இயக்குனர் சுஜித்திற்கு பவன் கல்யாண் முதல் முறையாக இயக்குனருக்கு கார் பரிசு.

ரூ.300 கோடி வசூலை கடந்த  “ஒஜி' பட இயக்குனர் சுஜித்திற்கு விலையுர்ந்த லேண்ட் ரோவர் காரை முதல் முறையாக பவன் கல்யாண் பரிசளித்தார். தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'ஒஜி' படம் .

Dec 18, 2025

தெலுங்கு படம் 'பெத்தி’. ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வெளியான, 'சிக்ரி சிக்ரி' என்ற பாடல் தெலுங்கில் மட்டும் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் புச்சிபாபு சனா இயக்கத்தில் தெலுங்கு படம் 'பெத்தி’. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதிலிருந்து வெளியான 'சிக்ரி சிக்ரி' என்ற பாடல் தெலுங்கில் மட்டும் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தமிழ், ஹிந்தியில் 100 மில்லியன் பார்வை பாடல்களை கொடுத்துள்ள ரஹ்மானுக்கு தெலுங்கில் முதல்முறை. இந்த பாடல் மற்ற மொழிகளையும் சேர்த்து 150 பார்வைகளைக் கடந்துள்ளது .

Dec 11, 2025

'தேரே இஷ்க் மெய்ன்'ரூ.100 கோடி வசூல் .

தனுஷ், கிர்த்தி சனோன் நடிப்பில், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் சமீபத்தில் வெளியான படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. தமிழிலும் டப்பாகி ரிலீஸானது. இப் படம் உலகளவில் ரூ.118 கோடி வசூலை கடந்துள்ளது. மீண்டும் ஹிந்தியில் ரூ.100 கோடி வசூலை கடந்து 'ராஞ்சனா' படத்திற்கு பின், வெற்றி பெற்றுள்ளார் தனுஷ்.

Dec 11, 2025

ஷாருக்கான், கஜோலுக்கு  லண்டனில் சிலை.

 30 ஆண்டுகள் முன் ஷாருக்கான், கஜோல் நடிப்பில், 1995ல் ஹிந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே'. இதையொட்டி லண்டனின் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலின் வெண்கல சிலையை வைத்துள்ளனர். இதை இவர்கள் இருவருமே துவக்கி வைத்தனர். ஷாருக்கான். "இந்த சதுக்கத்தில் கவுரவிக்கப்படும் முதல் இந்திய படம் இது என்பதில் நம்ப முடியாத மகிழ்ச்சி" என்றார். 

Dec 11, 2025

பாலகிருஷ்ணா நடித்துள்ள தெலுங்கு படமான "அகண்டா 2” மூலம் ' “இளைஞர்களிடம் சனாதன தர்மம் போய் சேரணும்" என்றார்.

பாலகிருஷ்ணா நடித்துள்ள போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் தெலுங்கு படமான "அகண்டா 2' தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியானது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, ''நான் பிறந்தது சென்னை, இதுவே எனக்கு ஜென்ம பூமி. ஆந்திரா ஆத்ம பூமி, தெலுங்கானா கர்மபூமி. எனக்கும் தமிழக மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இப்படம் இந்து தர்மத்தை பற்றி உலகத்திற்கும், சனாதன தர்மத்தின் உயர்வையும் வலியுறுத்தும். வரும் தலைமுறையினருக்கும் சனாதன தர்மம் தெரிய வேண்டும்" என்றார்.

Dec 11, 2025

ஜப்பானில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து, பிரபாஸ் மகிழ்ச்சி.

பிரபாஸ் நடித்த, ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி' படத்தின் இரு பாகங்களையும் ஒன்றிணைத்து 'பாகுபலி தி எபிக்' எனும் படத்தை சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டு வரவேற்பை பெற்றது. ஜப்பானில் டிச.12ல் ரிலீசாகிறது. இதற்காக ஜப்பான் சென்ற பிரபாஸ் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து, கனவு  இன்று நனவாகியுள்ளது .'ஜப்பானிய ரசிகர்கள் நம் மீது மிகப் பெரிய அன்பு வைத்திருப்பதாக சொல்லி,. இனி ஆண்டுதோறும்ஜப்பான் வந்து ரசிகர்களை சந்திப்பேன்" என்றார்.

Dec 11, 2025

மம்முட்டி படத்தில் 22 கதாநாயகிகள்.

 ஜிதின் கே ஜோஸ் இயக்கி,மம்முட்டி நடிப்பில் ( 05/12/2025) மலையாளத்தில் வெளியான படம் களம் காவல்.. கதை நாயகனாக விநாயகனும், எதிர்மறை வேடத்தில் மம்முட்டியும் நடித்துள்ளனர். இதில் ரஜிஷா, ஸ்ருதி ராமச்சந்திரன், காயத்ரி அருண், மாளவிகா மேனன் உள்ளிட்ட 22 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

1 2 ... 28 29 30 31 32 33 34 ... 89 90

AD's