25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Dec 11, 2025

'லாக் டவுன்' டிரைலர் வெளியாகி உள்ளது.

ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்துள்ள 'லாக் டவுன்' படம் ஏஆர் ஜீவா இயக்கத்தில் டிச.5ல் ரிலீஸானது. ஒரு  சம்பவத்தால் பாதிக்கப்படும் அனுபமா அதை வீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்தச்சூழலில் லாக் டவுன் போடப்படுகிறது. இதன் பின்னணியில் நடக்கும் கதையாக உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தை எடுத்துள்ளனர். 14 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள்  டிரைலருக்கு கிடைத்துள்ளன.

Dec 11, 2025

விஜய் மகன் இயக்கும் சிக்மா' படத்தில் ஜேசன் நடிக்கிறார்.

 ஜேசன் சஞ்சய்  நடிகர் விஜய் மகன் இயக்குனராக களமிறங்கி உள்ளார். இவரின் முதல் படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது இந்த படத்திற்கு சிக்மா என பெயரிட்டு முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். ஆக்ஷன் கதையில் உருவாகி உள்ளது.இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடல் உள்ளது. அதில் கேத்ரின் தெரஸா நடனம் ஆடி உள்ளார். அவருடன் ஜேசனும் நடனமாடி நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார் .

Dec 04, 2025

'மகா அவதார் நரசிம்மா'ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளது.

 அனிமேஷன் திரைப்படமான அஷ்வின் குமார் இயக்கத்தில் வெளியான 'மகா அவதார் நரசிம்மா' 98வது ஆஸ்கர் விருதுக்கான அனிமேஷன் படங்களுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதுக் குழு அறிவித்துள்ள 35 படங்க ளின் பட்டியலில் இந்தப் படமும் உள்ளது.  இறுதியாக இதிலிருந்து 5 படங்களை தேர்வு செய்வார்கள்.

Dec 04, 2025

'வாரணாசி'. பிரமாண்ட படம் என்பதால் தெலுங்கு தெரியாத, பிரியங்கா தெலுங்கு பேச பயிற்சி எடுக்கிறார்.

மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் , ராஜமவுலி இயக்கத்தில் படம் 'வாரணாசி'. 2027ல் வெளியாகும் இதன் படப்பி டிப்பு நடக்கிறது. பிரமாண்ட படம் என்பதால் தெலுங்கு தெரியாத, பிரியங்காவிற்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்பதற்காக தற்போது தெலுங்கை இவர் கற்று வருகிறார்.

Dec 04, 2025

நடிகர் கமலிடம் சினிமாவிலிருந்து ஓய்வு குறித்த கேள்வி?

சினிமாவிலிருந்து ஓய்வு குறித்த கேள்வி ,கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமலிடம்  கேட்டதற்கு அவர்,” ரசிகர்களுக்கு புது கூட்டணி தேவை என்றால் பழைய கூட்டணிக்கு ஓய்வு கொடுத்துவிடுவார்கள்”. “நான் தோல்வி படம் கொடுத்தால் ரிட்டயர்டு ஆக நினைத்தது உண்டு”. “என் நண்பர்கள் தான் நல்ல படம் நடித்துவிட்டு ஓய்வு கொடு என்பார்கள்.” “அப்படி ஒரு நல்ல படத்தை பண்ணிட்டு ஓய்வு  பெறுகிறேன்"என்றார்.

Dec 04, 2025

2025ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாளை 5 படங்கள் ரிலீஸ்

கடந்த 11 மாதங்களில் 250 படங்கள் ரிலீஸாகிவிட்டன. நாளை டிச., 5ல் "அங்கம்மாள், கேம் ஆப் லோன்ஸ், சாரா, சாவீ, நிர்வாகம் பொறுப்பல்ல" ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. 2025ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாளை 5 படங்கள் ரிலீஸ் 

Dec 04, 2025

6வது படத்தில் ,ரியோ ராஜ்  நடிக்கும் 'ராம் இன் லீலா’

நடிகர் ரியோ ராஜ், ஜோ, ஆண்பாவம் பொல்லாதது  படங்களின் வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ராம்சந்திரன் இயக்கும். தனது 6வது படத்தில் வர்திகா எனும் புதுமுக நடிகை நாயகியாக நடிக்க உள்ளார். காதல், காமெடியில் உருவாகும் இப் படத்திற்கு 'ராம். இன் 'லீலா' என பெயரிட்டுள்ளனர்.

Dec 04, 2025

'கொம்பு சீவி' டிச.25, கிறிஸ்துமஸ்க்கு இப்படம் ரிலீஸ்.

 இயக்குனர்  பொன்ராம்  இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்களை அடுத்து,விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் 'கொம்பு சீவி' படத்தை இயக்கியுள்ளார். சரத்குமார், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிச.25, கிறிஸ்துமஸ்க்கு இப்படம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

Nov 27, 2025

உடல்நல குறைவால் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் .

நடிகர் தர்மேந்திரா 1960ல் வெளியான தில் பி தேரா ஹம் பி தேரே என்ற ஹிந்தி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்து வந்தார். ஹிந்தி திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்இவர் நடிப்பில் வெளியான ஷோலே ஹிந்தி படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து நாடு முழுதும் தர்மேந்திரா பிரபலமானார். பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார்.300க்கும் மேற் பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஹிந்தி சினி மாக்களில் அதிக ஹிட் படங்களை தந்த ஹீரோ என்ற சாதனையையும் படைத்துள்ளார். தர்மேந்திரா நடிப்பில் உருவான இக்கீஸ் படம், அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2012ல், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் வழங்கி அப்போதை மத்திய அரசு கவுரவித்தது.இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவால், சுவாசக் கோளாறு மற்றும் இதயநோய் காரணமாக தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

Nov 27, 2025

'ஜென்டில்மேன் டிரைவர்' விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.

கார் பந்தயங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித் துக்கு எஸ். ஆர். ஓ. மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.பிரெஞ்சு தொழிலதிபரும், கார் பந்தய வீரருமான மறைந்த பிலிப் சாரியோல் (Philippe Charriol) நினைவாக இத்தாலியின் வெனிஸ் நகரில் வழங்கப்படும் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025' (Gentleman Driver of the Year 2025) விருதை பெற்றிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

1 2 ... 29 30 31 32 33 34 35 ... 89 90

AD's



More News