25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 28, 2025

Coffee With Collector” என்ற 191 மற்றும் 191-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் (28.05.2025) வத்திராயிருப்பு லயன்ஸ் மெட்ரிகுலேஷன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பில் பயிலும் 150 பள்ளி மாணவர்களுடனான இரண்டு குழுக்களாக நடைபெற்ற Coffee With Collector” என்ற 191 மற்றும் 192-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 191 மற்றும் 192-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

May 28, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் ரெயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், 31.05.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 06.00 வரை வழிதடம் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 441 Rly KM:579/900-580/000  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.எனவே 31.05.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து,  மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

May 28, 2025

பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் .

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற ஏழை எளிய குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்களின் மரணத்தால் அல்லது ஏதாவது உடல் உறுப்பு இழப்பால் நிரந்தர வருவாய் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இப்பேரிழப்பிலிருந்து காப்பீடு செய்தவர் அல்லது குடும்பத்தினர் மீளவும், தொடர்ந்து தொழில்கள் புரிந்திடவும் காப்பீடு உதவுகிறது.ஆதலால் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடையே காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சமுதாய பாதுகாப்பு பயன்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு PMSBY, PMJJBY, CMCHIS, PMJAY  மற்றும் APY ஆகிய காப்பீட்டு திட்டங்களில் தகுதியுள்ள அனைத்து சுய உதவிக் குழு உறுப்பினர்களும் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.மேலும், பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மே 2025-ம் மாதத்திற்குள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 27, 2025

விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர், மதுரை ரோட்டில் க.எண்: 6/415, 6/416 தபால் தந்தி காலனியில் செயல்பட்டு வந்த விருதுநகர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் -1 மற்றும் 2 ஆகிய அலுவலகங்கள்  26.05.2025 திங்கள் கிழமை முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது என விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் திரு.இரா.ரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 27, 2025

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதுமாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறும் அனைத்து மாணவ மாணவிகளும் தகுதியான சிறப்பு வாய்ந்த அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நான் முதல்வன், கல்லூரி கனவு, தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டம்  உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.இந்நிகழ்வில் சில கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளை தங்கள் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அவர்களை அணுகி மாணவர்களின் உடைய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவனோ மாணவியோ அரசு உயர் கல்வி நிறுவனங்களில் மற்றும் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கும் பொழுது தனியார் கல்லூரிகள் மாணவனின் அசல் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு தர மறுப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டறைக்கு புகார்கள் வருகின்றன.எனவே அவ்வாறு மாணவனின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மீது  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மாணவ மாணவிகள் இப்புகார்கள் சார்ந்து தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையை 8608204154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I  A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 27, 2025

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 31.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில்  சேர்வது தொடர்பான இரண்டாம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 31.05.2025(சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் நடத்தப்பட உள்ளது.இந்நிகழ்வில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய  கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில்  கலந்து கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக  கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த தகவல்களை இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 26, 2025

186 மற்றும் 187 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(26.05.2025)  இராஜபாளையம், திருவில்லிபுத்தூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இரண்டு குழுக்களாக நடைபெற்ற 186 மற்றும் 187 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பள்ளிப்படிப்பை முடித்து சிறந்த கல்லூரிகளில் பயின்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்களின் புள்ளி விவரங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், அது அதிக மதிப்பெண்கள் பெற்றவரோ, சராசரியாக படித்தவரோ என எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லை. தங்களுக்கான வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே சரியான நேரத்தில் விழிப்புணர்வும், அதற்கான முயற்சியும் எடுப்பவரே வெற்றியடைகிறார்கள்.நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு இருந்தால், அவர்கள் நல்ல முடிவு எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்கும் போது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களுக்கான இலக்கை அடைவதற்கு என்ன தேவை என திட்டத்தை வகுத்துக் கொள்வது மிக அவசியம். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற போதே, உயர்கல்விக்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு, நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

May 25, 2025

கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டி

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் (24.05.2025) மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகள் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி, உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரிக் கனவு என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்யும் வகையிலும், உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வலியுறுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் எதிர்காலத்திற்கான உறுதுணையாகவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது.இதில் ஆண்களுக்கான 12 கி.மீ தூரப்போட்டியில் வெற்றி பெற்ற இராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிசரத் என்பவருக்குமுதல் பரிசு ரூ.20,000/- மும், இராஜபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு இரண்டாம் பரிசு ரூ.15,000/- மும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கு மூன்றாம் பரிசு ரூ.10,000/- மும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு நான்காம் பரிசு ரூ.7000/- மும், மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருக்கு ஐந்தாம் பரிசு ரூ.5,000/மும்,பெண்களுக்கான 10 கி.மீ. தூரப்போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கு முதல் பரிசு ரூ.20,000/- மும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வனிதா என்பவருக்கு இரண்டாம் பரிசு ரூ.15,000/- மும், விருதுநகரைச் சேர்ந்த கௌசிகா என்பவருக்கு மூன்றாம் பரிசு ரூ.10,000/- மும், தூத்துக்குடியை சேர்ந்த கனகலட்சுமி என்பவருக்கு நான்காம் பரிசு ரூ.7000/- மும், மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கு ஐந்தாம் பரிசு ரூ.5,000/மும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இப்போட்டியில் தமிழக முழுவதிலிருந்து ஏராளமானவர்கள் ஆர்வமுடன பங்கேற்றனர்.

May 25, 2025

182 மற்றும் 183 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (24.05.2025) சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இரண்டு குழுக்களாக நடைபெற்ற  182 மற்றும் 183 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.  மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளிப்படிப்பை முடித்து சிறந்த கல்லூரிகளில் பயின்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்களின் புள்ளி விவரங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், அது அதிக மதிப்பெண்கள் பெற்றவரோ, சராசரியாக படித்தவரோ என எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லை. தங்களுக்கான வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே சரியான நேரத்தில் விழிப்புணர்வும், அதற்கான முயற்சியும் எடுப்பவரே வெற்றியடைகிறார்கள்.நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு இருந்தால், அவர்கள் நல்ல முடிவு எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்கும் போது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களுக்கான இலக்கை அடைவதற்கு என்ன தேவை என திட்டத்தை வகுத்துக் கொள்வது மிக அவசியம். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற போதே, உயர்கல்விக்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம். 

May 23, 2025

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 க்கான பயிற்சி வகுப்புகள் 27.05.2025-அன்று முதல் நடைபெறவுள்ளது .

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-ஐ க்கான தேர்வு 15.06.2025 அன்று நடக்கவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாநில அளவிலான இலவச முழுமாதிரித் தேர்வு 27.05.2025 அன்று சாத்தூர், ஸ்ரீ ராமசாமி நாயுடு நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 03.06.2025 மற்றும் 07.06.2025 அன்று விருதுநகர், VHNSN கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறவிருக்கிறது. இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/7kG8jf2vAH2optL9A  என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை studycirclevnr@gmail.com  என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம். எனவே TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 108 109 110 111 112 113 114 ... 140 141

AD's



More News