25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதுமை

Aug 19, 2026

அதிக பசி எடுப்பதற்கு என்ன காரணம்?

சிலருக்கு அடிக்கடி அதிக பசி எடுப்பது இயல்பாக இருக்கலாம். ஆனால் சில உடல்நலக் காரணங்களும் இதற்கு பின்னணியாக இருக்கலாம்.மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் போது உணவை அதிகமாக உட்கொள்ளும் பழக்கம் ஏற்படலாம். தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால் அதிக பசி இருந்தாலும் உடல் எடை குறையக்கூடும்.அலர்ஜி மருந்துகள், ஸ்டீராய்டு போன்ற சில மருந்துகளும் பசியை அதிகரிக்கலாம்.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை திடீரெனக் குறைந்தால் கடுமையான பசி, வியர்வை, இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். உடனடியாக இனிப்பு எடுத்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.குடல்புண், மது அருந்தும் பழக்கம், மன அழுத்தம் மற்றும் முதுமையில் ஏற்படும் டிமென்ஷியா போன்ற காரணங்களாலும் அதிக பசி தோன்றலாம்.அதிக பசி நீண்ட நாட்களாகத் தொடருமானால் மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிவது நல்லது. எந்த நோயும் இல்லாமல் அதிக பசி இருந்தால் அது நல்ல உடல்நலத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

Aug 12, 2026

முதுமையில் காதுகேளாமை – கவனிக்க வேண்டிய அறிகுறிகள்.

வயது அதிகரிக்கும் போது செவித்திறன் படிப்படியாகக் குறைவது இயல்பான மாற்றமாகும். இதனை Presbycusisஎன மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.ஆரம்பத்தில் உயர்ந்த ஒலிகள் கேட்காமல் போகும். காலிங் பெல், பறவைகளின் கீச்சு போன்ற ஒலிகள் கேட்க சிரமம் ஏற்படும். பின்னர் சாதாரண உரையாடல்களைக் கூட தெளிவாகக் கேட்க முடியாமல் போகலாம்.ஒரே விஷயத்தை மீண்டும் சொல்லச் சொல்வது, டிவியின் ஒலியை அதிகப்படுத்துவது போன்றவை காதுகேளாமையின் ஆரம்ப அறிகுறிகளாகும். பல நேரங்களில் இந்த மாற்றத்தை முதலில் குடும்பத்தினரே கவனிப்பார்கள்.காதுகேளாமைக்கு சிறந்த தீர்வாக காது கேட்கும் கருவி பயன்படுகிறது. ஒரு காதில் மட்டும் பிரச்னை இருந்தால் அந்தக் காதுக்கு மட்டும், இரண்டு காதுகளிலும் பாதிப்பு இருந்தால் இரண்டுக்கும் கருவி பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான கருவியைத் தேர்வு செய்வது முக்கியம்.

Aug 05, 2026

தொப்புள் குடலிறக்கம் என்றால் என்ன?

தொப்புள் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமடையும்போது, சிறுகுடலின் ஒரு பகுதி வெளிப்புறமாக புடைத்துக் காணப்படும் நிலையே தொப்புள் குடலிறக்கம் (Umbilical Hernia). இது பொதுவாக பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள், பல முறை பிரசவமானவர்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு அதிகமாக ஏற்படலாம்.ஆரம்ப நிலையில் பெரிதாக வலி இருக்காது. ஆனால் நிற்கும்போது, இருமும்போது அல்லது அதிக அழுத்தம் கொடுக்கும்போது புடைப்பு தெளிவாகத் தெரியும். படுத்துக்கொண்டால் அது குறைந்து காணப்படும்.இந்தப் பிரச்னை உள்ளவர்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் நீடித்த இருமலுக்கு சிகிச்சை பெறவும் வேண்டும். வயிற்றுப் பகுதியை அல்ட்ராசவுண்ட் மூலம் பரிசோதித்து உறுதி செய்யலாம்.காலப்போக்கில் குடலிறக்கம் பெரிதாகலாம். குடல் சிக்கிக் கொண்டால் திடீர் கடுமையான வலி ஏற்படும். அப்படிப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

Jul 29, 2026

சிறு தானியங்களின் மருத்துவ பயன்கள்: முதுமையை வெல்லும் நல்உணவு!

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் (உடற்பயிற்சியின்மை, எப்போதும் டிவி பார்ப்பது, மூவேளையும் அரிசி உணவு) உடல் பருமனும், நீரிழிவு நோயும் வேகமாக அதிகரித்து வருகின்றன. மருத்துவமனை வரிசைகளில் நிற்பதைத் தவிர்க்க, நமது பாரம்பரிய சிறுதானிய உணவுகளுக்கு மாறுவதே சிறந்த வழி.மூத்தோர்களின் ஆரோக்கியத்திற்குச் சிறுதானியங்கள் வழங்கும் நன்மைகள் .1. செரிமானமும் உடல் எடையும்.எளிதில் ஜீரணமாகும்: அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தாது.மலச்சிக்கல் தடுப்பு: இதில் நார்ச்சத்தின் (Fiber) அளவு அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.உடல் எடை குறையும்: தேவையற்ற உடல் பருமனைத் தடுத்து, எடையைக் குறைக்க உதவுகிறது.2. சர்க்கரை மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு.சர்க்கரை அளவு குறையும்: குடலில் இருந்து சர்க்கரை மிகவும் மெதுவாக உறிஞ்சப்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.கொழுப்பு குறையும்: ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்க உதவுகிறது.3. எலும்பு மற்றும் உடல் வலிமை.உறுதியான எலும்புகள்: சுண்ணாம்புச்சத்து (Calcium) அதிகம் உள்ளதால், பற்களையும் எலும்புகளையும் பலப்படுத்துகிறது.உடனடி ஆற்றல்:உடலுக்குத் தேவையான கலோரித் திறன் அதிகம் உள்ளதால், சாப்பிட்ட உடனே நல்ல ஆற்றல் (Energy) கிடைக்கிறது.4. நோய் எதிர்ப்பு மற்றும் பிற நன்மைகள்.புற்றுநோய் தடுப்பு: குடல் புற்றுநோய் போன்ற சில கடுமையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.மனநலம் மேம்படும்: சில சிறுதானிய வகைகள் மன ஆரோக்கியத்தையும் சீராக்க வல்லவை.ஒவ்வாமை இல்லை: பொதுவாக சிறுதானியங்கள் உடலுக்கு எந்தவிதமான ஒவ்வாமையையும் (Allergy) ஏற்படுத்தாது.உடல் வெப்பம் தணியும்: கோடைகாலத்தில் கம்பு, ராகி போன்ற கஞ்சிகளை உட்கொள்வது உடலின் வெப்பத்தைத் தணிக்க உதவும். பல நன்மைகளைக் கொண்ட சிறுதானியங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், நோயற்ற வாழ்வோடு முதுமையையும் தள்ளிப்போடலாம்!

Jul 22, 2026

மூத்த குடிமக்களுக்கான சளி, இருமல் தீர்க்கும் சித்த மருத்துவ முறைகள்.

முதுமையில் ஏற்படும் இருமல், சளி, தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சலைக் குணப்படுத்த எளிய வீட்டு வைத்திய முறைகள்:துளசி இலை: காலையில் வெறும் வயிற்றில் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு,  வெந்நீர் குடிக்க வேண்டும். இதில் உள்ள Eugenolஎன்ற வேதிப்பொருள் தொண்டைக்கட்டைச் சரிசெய்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.தூதுவளை & முசுமுசுக்கை:தூதுவளைக் கீரையை வாரம் இருமுறை துவையலாகச் சாப்பிட நெஞ்சுச்சளி குறையும். முசுமுசுக்கை இலை சாற்றை தோசை அல்லது சப்பாத்தி மாவில் கலந்து சாப்பிட்டாலும் கோழை குறையும்.கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இலையை அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன் (ஒரு டீஸ்பூன்),  தேன் கலந்து காலையில் குடித்தால் இருமல் மற்றும் சளி குணமாகும்.தும்பைப் பூ: 4-10 தும்பைப் பூக்கள் மற்றும் 2-6 மிளகை நல்லெண்ணெயில் வறுத்து, அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு மற்றும் கமறல் உடனே நீங்கும்.வெற்றிலை & மிளகு: இரண்டு இளம் வெற்றிலைக்குள் 2-6 மிளகு வைத்து மடித்து மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறன் (Anti-bacterial) கபத்தைச் சேர்க்காமல் தடுக்கும்

Jul 15, 2026

ஹோல்டர் மானிட்டர் பரிசோதனை (Holter Monitor) .

சாதாரண ஈ.சி.ஜி (ECG) காட்டாத, விட்டு விட்டு ஏற்படும் இதயத் துடிப்பு மாற்றங்களைக் கண்டறிய 24-48 மணி நேரம் மார்பில் பொருத்தப்படும் ஒரு சிறிய ரெக்கார்டர் சாதனம் இதுவாகும்.யாருக்குத் தேவை? நெஞ்சு படபடப்பு, திடீர் மயக்கம், மாரடைப்புக்கு பிந்தைய துடிப்பு மாற்றம் உள்ளவர்கள் மற்றும் பேஸ்மேக்கர் (Pacemaker) பொருத்தியவர்கள்.பயன்படுத்தும் முறை: மார்பில் ஒட்டப்படும் இந்தச் சாதனத்தை அணிந்து கொண்டு குளியலைத் தவிர மற்ற அனைத்து அன்றாடப் பணிகளையும் செய்யலாம். அதிநவீனக் கருவிகளை கைப்பேசியுடனும் இணைக்கலாம்.கவனிக்க வேண்டியவை: சாதனம் நனையக் கூடாது; மொபைல் மற்றும் காந்தப்புலங்களுக்கு அருகில் அதிக நேரம் இருக்கக் கூடாது; அறிகுறிகள் தோன்றும் நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.முக்கிய பயன்:துல்லியமான இதய செயல்பாட்டை அறிந்து, பேஸ்மேக்கர் தேவையா என்பதைத் தீர்மானிக்கவும், மயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் உதவுகிறது.

Jul 08, 2026

நெஞ்சு எரிச்சலா? மாரடைப்பா?

முதுமையில் ஏற்படும் நெஞ்சு எரிச்சலுக்கும் மாரடைப்புக்கும் அறிகுறிகளில் அதிக ஒற்றுமை இருப்பதால் குழப்பம் ஏற்படலாம். அவற்றை பிரித்தறியும் வழிகள்:. நெஞ்சு எரிச்சல் (Heartburn / GERD)காரணம்: முதுமையில் உணவுக்குழாய் தளர்ச்சியடைவது (Presbyoesophagus), அமிலம் நெஞ்சுக்குள் வருவது (Refluxoesophagitis) மற்றும் உதரவிதான இறக்கம் (Hiatus hernia).அறிகுறிகள்: நெஞ்சு அடைப்பு, எரிச்சல், வாந்தி, வாயில் உமிழ்நீர் சுரப்பது. குனியும் போதோ, தலையணை இன்றி படுக்கும் போதோ, அதிகமாக சாப்பிடும் போதோ தொல்லை அதிகரிக்கும்.சிகிச்சை: கொழுப்பு மற்றும் உணவின் அளவைக் குறைத்தல், உடல் எடையைக் குறைத்தல், படுக்கும் போது தலைப்பகுதியை உயர்த்துதல், மருந்துகள் உட்கொள்ளுதல். பலனளிக்காவிடில் அறுவை சிகிச்சை. மாரடைப்பு (Heart Attack)காரணம்/ஆபத்துகள்: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மது, புகைப்பிடித்தல், மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும்.அறிகுறிகள்: கடின உடற்பயிற்சி, வேகமான நடை, அதிக உணவுக்குப் பின் அல்லது சும்மா இருக்கும் போது கூட திடீர் நெஞ்சுவலி, படபடப்பு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.

Jul 01, 2026

அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா?.

நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றும் சேர்த்து வருவது, அறுபதாவது வயதில் வரும் பிறந்த நாளில் தான்.மறுமுறை இதே போல சேர்ந்து வருவது நூற்று இருபதாவது வயதில் தான். அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள் ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை"ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி' என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்காமலே கூட போய் விடுகிறது. இருப்பவர்கள் இதை செய்து கொள்வது நல்லது தானே.

Jun 24, 2026

யாருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யலாம்?

ஏற்கனவே அவர்களின் அன்றாட வாழ்க்கையில் வேலைகளை அவர்களே செய்துகொள்பவர்கள்.  நன்றாக நடந்து மாடிப் படிக்கட்டுகளில் தாங்களாகவே நடக்கும் திறன் உள்ளவர்கள். உயரத்திற்கு ஏற்ற எடை (BMI 1823) உள்ளவர்கள். வாழ்வியல் நோய்கள் -சுகர், பி.பி., கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள். சுய எதிர்ப்பாற்றல் நோய்கள் (auto immune disorders), முடக்குவாதம், தைராய்டு நோய் இல்லாதவர்கள். மது, புகைப்பழக்கத்தால் கல்லீரல், நுரையீரல் நோய்கள் இல்லாதவர்கள். இதய நோய்கள் இல்லாதவர்கள். ரத்தம் கசிதல்,உறைதல் குறைபாடு இல்லாதவர்கள். தடுமாற்றம் உள்ள நடை இல்லாதவர்கள். நரம்பியல் நோய், பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் நோய் போன்ற பிரச்னைகள் இல்லாதவர்கள்.

Jun 17, 2026

குதிகால் வலி (Calcaneal Spur) - காரணங்களும் தீர்வுகளும்...

உங்களுக்கு இரண்டு கால்களிலும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது அதிகமாக வலி ஏற்படுகிறதா? சிறிது நேரம் நடந்தால் வலி சற்றுக் குறைந்து, ஆனால் நாள் முழுவதும் ஒரு அசௌகரியம் நீடிக்கிறதா? உங்களுக்கு பி.பி., சுகர் இல்லை என்றாலும், உடல் எடை சற்று அதிகமாக இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.❓ காலையில் வலி ஏற்படக் காரணம் என்ன?காலையில் ஏற்படும் குதிகால் வலிக்கு மிக முக்கியமான காரணம் கால்கேனியல் ஸ்பர் (Calcaneal spur) என்னும் தொல்லைதான்.எலும்பு வளர்ச்சி: கால்சியம் சத்து, குதிகால் எலும்பில் அதிகமாகப் படிந்து (முள் போல) வளர்வதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.தசையழுத்தம்: இந்த கூடுதல் எலும்பு வளர்ச்சி, குதிகால் தசைகளுக்கு அதிக அழுத்தம் தருவதால் கடுமையான வலி உண்டாகிறது.🎯 இது யாருக்கெல்லாம் வரலாம்?⚖️ உடல் பருமன் (அதிக எடை) உள்ளவர்கள்👟 பொருந்தாத அல்லது கடினமான காலணிகள் அணிவோர்🚶‍♂️ தவறான நடை அமைப்பு உள்ளவர்கள்👵 முதியோர்கள்🔍 நோயின் அறிகுறிகள் மற்றும் கண்டறிதல்காலையில் படுக்கையை விட்டு எழும்போது, ஊசி குத்துவது போல திடீரென கடுமையான வலி ஏற்படும்.நேரம் ஆக ஆக, வலி சற்றுக் குறைந்து ஒருவித அசௌகரியமாக மாறும்.நீண்ட நேரம் அமர்ந்திருந்துவிட்டு திடீரென எழும்போது மீண்டும் இந்த வலி ஆரம்பமாகும்.கண்டறியும் முறை: ஒரு சாதாரண குதிகால் எக்ஸ்ரே (X-Ray) படம் மூலம் இந்த நோயை எளிதாக உறுதி செய்துவிடலாம்.🛠️ சிகிச்சை முறைகள் (Treatments)வீட்டு வைத்தியம்: வெந்நீரில் கல் உப்பு போட்டு, அதில் உங்கள் கால்களை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். இது தற்காலிகமாக வலியைக் குறைக்கும்.உடல் பருமனைக் குறைத்தல்: எடையைக் குறைப்பது குதிகாலுக்குத் தரும் அழுத்தத்தைக் குறைக்கும்.பொருந்தும் காலணிகள்: மென்மையான மற்றும் சரியாகப் பொருந்தும் மருத்துவக் காலணிகளை (MCR slippers) மட்டுமே அணிய வேண்டும்.முறையான உடற்பயிற்சி: பிஸியோதெரபி (Physiotherapy) பயிற்சிகள் தசைகளை வலுவாக்கும்.மருந்துகள்: மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.நடைப் பயிற்சி: சரியாக நேராக நடக்கப் பழக வேண்டும்.மேற்கூறிய எளிய சிகிச்சைகளுக்குப் பலனில்லை எனில், மருத்துவர்கள் வலி உள்ள இடத்திலேயே ஊசி (Injection) போடுவார்கள். ஆனால், இது ஒரு தற்காலிக நிவாரணமே ஆகும். இதிலும் குணம் தெரியவில்லை என்றால் மட்டுமே இறுதி வாய்ப்பாக அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படும்.🩺 உங்களுக்கான முக்கிய ஆலோசனை:நீங்கள் முதலில் உடல் பருமனைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். வீட்டிலும் வெளியிலும் மிருதுவான காலணிகளை (MCR) அணியுங்கள். தொடர்ந்து வலி இருப்பின், ஒரு சிறந்த எலும்பு மருத்துவச் சிகிச்சை நிபுணரை (Orthopedist) நேரில் சந்தித்து ஆலோசனை பெறவும். தொடர்ந்து பிஸியோதெரபி செய்வதன் மூலம் இந்த வலியிலிருந்து முற்றிலும் விடுபட அதிக வாய்ப்புள்ளது!

1 2 3 4 5 6 7 8

AD's



More News