25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 23, 2025

வாசனை திரவியங்கள்

மனதை மயக்கும் இனிமையான நறுமணம் ஒரு இடத்தில் பரவும் போது மனதில் இனம் புரியாத மலர்ச்சியை உருவாக்கு கிறது. இதன் காரணமாகவே ஆதி காலத்தில் இருந்து மனித இனம் சென்ட் என்ற வாசனை திரவியங்களை பயன்படுத்தி வந்துள்ளது. வாசனை திரவியம் தயாரிக்கும் கலை பண்டைய எகிப்து, மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் சீனாவில் தோன்றியது. பின்னர் ரோமானியர்கள், அரபு மற்றும் பாரசீக வேதியியலாளர்களால் மேம்படுத்தப்பட்டது.தொடக்க காலங்களில் தாவரங்கள், மலர்களில் இருந்து பெறப்பட்ட சாறுகளை வடிகட்டி எரிசாராயத்தில் மூழ்க வைத்து நறுமண திரவியங்களை உருவாக்கினர். ஐரோப்பிய தோல் பதனிடும் தொழில் தான் வாசனை திரவிய தயாரிப்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்தது. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் தோல் பதனிடும் போது வெளிப்படும் அழுகிய, விரும்பத்தகாத மணத்தை குறைக்க வாசனை திரவியங்களை தெளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனை உணர்ந்து கொண்ட தோல் பதனிடும் நிறுவனம் முதன் முதலாக தாங்கள் தயாரித்த தோல் கையுறைகளில் திரவ வாசனை எண்ணெய்களை கொண்டு பதனிட்டுகையுறைகளை விற்பனை செய்தனர். தோல் வாடை எதுவும் இல்லாமல் கமகமக்கும் தாவர எண்ணெய் வாசனை கொண்ட அந்த கையுறைகள் வெகுவாக விற்பனை செய்யப்பட்டன. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரெஞ்சு புரட்சி மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட போர்கள், அடுத்து ஐரோப்பிய வாசனை திரவியங்கள் வணிகமயமாக வழிவகுத்தது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு நாடுகளும் விதவிதமான நறுமண திரவியங்களை உருவாக்கின. இன்று, வாசனை திரவியங்கள் கோடிக்கணக்கான மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்கிறது.

May 22, 2025

அரேபிய பாலை வனம் உலகின் நான்காவது பெரியது

அரேபியாவில்தற்போதைய பாலை வன பகுதிகள். இதற்கு முன் ஆறு, ஏரி உட்பட பசுமை பகுதியாக இருந்தன என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.அரேபிய தீபகற்பம் பெரும்பாலும் வெப்ப மயமானதாகவும், பாலைவன மணல் பரப்பை கொண்டதாகவும் உள்ளது. அரேபிய பாலை வனம்23.30 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இது உலகின் நான்காவது பெரியது. இந்நிலையில் 'இப்பகுதிகள் ஒரு காலத்தில்(9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) பசுமை பகுதியாக இருந்தன. இங்கு மழைப்பொழிவு அதிகம் இருந்ததால், ஆறு, ஏரி உட்பட பல நீர்த்தேக்க பகுதிகளாக இருந்தன. இந்த மழைப் பொழிவுக்கு ஆப்ரிக்க பருவமழை காலம் காரணமாக இருந்தது. இப்பகுதி செங்கடலை ஒட்டிய ஆசிர் மலைகளிலிருந்து1100 கி.மீ தூரம் வரை இருந்துள்ளது. பின்5000 ஆண்டுக்கு முன்பிலிருந்து மழைப் பொழிவு வெகுவாக குறைய தொடங்கி வறண்ட நிலைமை உருவாகியிருக்கலாம்' என ஆய்வு தெரிவித்துள்ளது. 

May 22, 2025

காது கேளாதவருக்கு உதவும் கண்ணாடி

பிறவியிலேயே காது கேட்காதவர்களுக்கும், வயதாவது அல் லது பிற காரணங்களால் காது மந்தம் அடைந்த வர்களுக்கும், உதவும் வகையிலான ஒரு புது கண்ணாடியை நியூயார்க் கைச் சேர்ந்த கோர்னெல் பல்கலையில் படிக்கின்ற 25 வயது மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.காது கேட்பதில் குறைபாடு உடையவர்களா ல் எதிரே பேசுபவருடைய வாய் அசைவை வைத்துத் தான் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து  கொள்ள முடியும்.இவ்வாறு அறிந்து கொள்வதற்குப் பேசுபவரை மிகவும் கூர்மை யாகக் கவனிக்க வேண்டு ம். இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக நிர்பாய்நரங்  (Nirbhay Narang) எனும் மாணவர் ஒரு கண்ணாடியை வடிவமைத்துள்ளார்.இதைச் சாதாரண மூக் குக் கண்ணாடி போலக் கண்கள் மீது அணிந்து கொள்ளலாம். இது ஐபோன் உடன் ப்ளூடூத் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.எதிரே ஒருவர் பேசும் போது அவருடைய குரல் போனில் பதிவாகி அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூல மாக எழுத்தாக, மாற்றப் படும்.இந்த எழுத்து அணிந்திருப்பவருடைய கண்ணாடியில் தெரியும்.இதனால் தன்னிடம் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதைக் கண்ணாடியில் வாசித்து அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் மட்டும் விற்கப்படுகின்ற இந்தக் கண்ணாடி விரைவில் உலகம் முழுதும் பிரபலமாகும்.

May 22, 2025

இத்தாலியில் உள்ள வெசுவியஸ் எரிமலை

 இத்தாலியில் வெசுவியஸ் எரிமலை வெடித்து பாம்பெய் நகரம் அழிந்ததை நாம் வரலாற்றில் படித்திருப்போம். இந்த வெடிப்பின் போது இறந்த ஒருவரின் உடலில், அதீத வெப்பத்தால் மூளை கருப்பு நிறக் கண்ணாடியாக மாறி இருப்பதைச் சமீபத்தில் அங்கு ஆய்வுசெய்த தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூகம்பம் ஏற் படுவதற்குப் பல்வேறு கார ணங்கள் உள்ளன. சூரியனின் வெப்பமும் கூட பூகம்பத்திற்கு ஒரு காரணம் என்று ஜப்பானிய புவியியலாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிறுவியுள்ளனர்.

May 21, 2025

வாகா எல்லையில் கம்பீரமாக பறக்கும் புதிய இந்திய தேசிய கொடி

வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி 3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது.55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது. கொடி கம்பத்தின் உயரம் 360 அடி. கொடி கம்பத்தை நிறுத்த (நடுவதற்கு) கிரேன் செலவாக 60லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.கொடியின் உயரம் 80அடி, அகலம் 120 அடி தேவைப்படும்போது12 கொடிகள் (மாற்று) தயாராக உள்ளன.இது ஒரு உலக சாதனை ஆகும். வாகா எல்லை கோட்டில் இருந்து 200 மீட்டர் உள்புறமாக மிக கம்பீரமாக  இந்திய தேசிய கொடி பறக்கும்.இந்தியர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.

May 21, 2025

தங்க நகரம் என்று அழைக்கப்படும் துபாய்.

துபாய் தங்க நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தங்க வர்த்தகம் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. துபாயில் சுமார் 300 தங்கக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் எல்லா நேரங்களிலும் தோராயமாக 10 டன் தங்கம் இருக்கும். 2013 ஆம் ஆண்டில், இங்கு 396 யானைகளின் எடைக்கு சமமான தங்கம் வர்த்தகம் செய்யப்பட்டது. 

May 21, 2025

'வடிவமைப்பு பரிமாணம்" செயலியை அறிமுகப்படுத்திய ஷ்ரவண் மற்றும் சஞ்சய், இந்தியாவின் இளைய தொழில்முனைவோர்.

சென்னையில் வசிக்கும் ஷ்ரவண் மற்றும் சஞ்சய், ஆண்டுக்கு ரூ.120 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இளைய தலைமை நிர்வாக அதிகாரி,இந்தியாவின் இளைய தொழில்முனைவோர். இருவரும் சேர்ந்து,2012 இல்"வடிவமைப்பு பரிமாணம்" செயலியை அறிமுகப்படுத்தினர். இந்த இரண்டு சகோதரர்களும் தங்கள் முதல் செயலியை உருவாக்கியபோது அவர்கள் முறையே7 ஆம்8 ஆம் வகுப்பு மாணவர்கள்.இதுவரை, அவர்கள்11க்கும் மேற்பட்ட செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

May 20, 2025

பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் பனிப்பாறைகள் ஆகும்.

பனிப்பாறைகள் என்பது பனிக்கட்டிகளாக மாறிய உறைந்த ஆறுகள் ஆகும். ஆண்டு முழுவதும் பனி ஒரே பகுதியில் இருக்கும் போது பனிப்பாறைகள் என்ற பெரிய அளவிலான திட வடிவ படிகமாக உருவாக தொடங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும், புதிய பனி அடுக்குகள் முந்தைய அடுக்குகளை புதைத்து சுருங்க வைக்கின்றன. சிறிய ஐஸ் துண்டுகள் போல உருவாகும் பனிப்பாறைகள் 100 ஆண்டுகளில் மலை போல் மிகப்பெரிய அளவை எட்டுகிறது.பனிப்பாறைகள் அனைத்து வடிவங்களிலும், அளவிலும் காணப்படுகின்றன. ஐஸ்-க்யூப் அளவிலான துண்டுகள் முதல் ஒரு சிறிய நாட்டின் அளவிலான பனித்தீவுகள் வரை உள்ளன. பனிப்பாறை என்ற சொல் 16 அடி விட்டம் கொண்ட பெரிய பனித் துண்டுகளை குறிக்கிறது. பெர்கிபிட்ஸ் மற்றும் க்ரோலர்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய பனிப்பாறைகள், கப்பல்களுக்கு மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் நீரில் அமிழ்ந்து கிடக்கும் இவற்றை கண்டறிவது கடினம். வடக்கு அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் கண்டத்தை சுற்றியுள்ள குளிர்ந்த நீர்நிலைகளில் தான் பூமியில் உள்ள பெரும்பான்மையான பனிப்பாறைகள் காணப்படுகின்றன.இந்த பனிப்பாறைகள் அதன் நீட்சியாக பனி படலங்களை தோற்றுவிக்கின்றன. பனிப்படலம் என்பது நிலத்தில் அமைந்து 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி காணப்படும் மிகப்பெரிய உறைபனி ஆகும். இப்போது பூமியில் இரண்டு பனிப்படலங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று உலகின் மிகப்பெரிய தீவானகிரீன்லாந்தின்பெரும்பகுதியைஉள்ளடக்கியது, மற்றொன்று அண்டார்டிக் கண்டம் முழுவதும் பரவியுள்ளது.

May 20, 2025

செலினியம் சத்து அதிகமாக உள்ள பிரேசில் நட்

பிரேசில் நட் எனப்படும் பருப்பு வகையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால், இது பெண் களின் குடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்து வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகின் மிகப் பழமையான பாலாடைக்கட்டி (சீஸ்) சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது 3,600 ஆண்டுகள் என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

May 19, 2025

கண்ணாடி தயாரிக்கும் முறை.

முகம் பார்த்தல், கண் பார்வை, வாகனம், ஜன்னல், அறிவியல் ஆய்வக கண்ணாடி என பல விதமான கண்ணாடிகள் உள்ளன. இதில் சில ஒளி ஊடுருவும், சில ஊடுருவாது. கண்ணாடியானது சிலிக்கா (மணல்). கால்சியம் கார்பனேட் (சுண்ணாம்புக்கல்), சோடியம் கார்பனேட் வேதிப்பொருள்களால் ஆனது. இவற்றை அதிக வெப்பநிலையில் அக்கலவை உருகிப் பாகுபோல ஆகிவிடும். உருகிய கண்ணாடியை வெவ்வேறு வடிவிலான வார்ப்புகளில் ஊற்றி அதை ஒரே சீராகவும், மெதுவாகவும் குளிரச் வெப்பப்படுத்தும்போது செய்து கண்ணாடிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன .

1 2 ... 102 103 104 105 106 107 108 ... 128 129

AD's



More News