25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

May 14, 2026

'வாழை' பட சிறுவன் +2 தேர்வில்  600-க்கு 506 மார்க்குகளை பெற்றுள்ளார்.

'வாழை' படத்தில் நடித்த பொன் வேல்  +2 பொதுத்தேர்வு முடிவுகளில் 600-க்கு 506 மார்க்குகளை பெற்றுள்ளார்.   நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த, பொன் வேல்  தற்போது தனது படிப்பிலும் சிறப்பாக" செயல்பட்ட  பாராட்டுகளை பெற்று வருகிறார். 

May 14, 2026

மறுமணம்,விதவை திருமணத்தைஆதரித்து,படம் நுாறுசாமி  படம் .

'நுாறு சாமி விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள படம் ,பற்றி இயக்குனர் சசி கூறுகையில், "கள்ளக் குறிச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பற்றி ஒரு டாக் ஷோவில் பேசினார்கள். அப்போது இந்த கரு உருவானது. இந்த படம் பார்த்த பலர் தங்கள் உறவு பெண்ணுக்கு அதை செய்து இருக்கலாமே என நினைப்பார்கள்" என்றார். மறுமணம்,விதவை திருமணத்தைஆதரித்து இந்தப்படம் இருக்கும். முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளதால் விரைவில் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

May 14, 2026

முதல்வராக தபு ,கேங்ஸ்டராக நாகார்ஜுனா...

 100வது படத்தில் ,தெலுங்கு நடிகர் நாகார் ஜூனா  இப்போது  நடிக்கிறார். இதை தமிழில் “நித்தம் ஒரு வானம்” படத்தை இயக்கிய ரா கார்த்திக் இயக்க, தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ் மிதா பட் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிரீயட் படமாக உருவாகும் இந்த கதையில் நாகார்ஜூனா கேங்ஸ்டராகவும், தபு முதல்வராகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

May 14, 2026

வில்லன் பஹத் சல்மான்கான் 'தி மெசஞ்சர்ஸ்' படத்தில் …

ஹிந்தியில் சல்மான் கான், நயன்தாரா நடிப்பில் , வாரிசு படத்தை இயக்கிய வம்சிபைடிபள்ளி ஒரு படத்தை இயக்குகிறார். ஜவான் படத்திற்கு பின் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. முக்கிய வேடத்தில் அக்ஷய் கண்ணா, பஹத் பாசில், அரவிந்த்சாமி ஆகியோரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு 'தி மெசஞ்சர்ஸ்' என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளனர்.

May 14, 2026

சாய்பல்லவி  'ஏக்தின்' படத்தில் நான் செட்டாகவில்லை.

'ஏக்தின்' படத்தில் நடிகை சாய் பல்லவி ஹிந்தியில், அமீர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக நடித்தார். ஓரளவே வரவேற்பை பெற்றது. பட விழாவில் பேசிய சாய் பல்லவி, "இந்தப் படத்தின் முழு காப்பியைப் பார்த்த போதுதான், இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் செட்டாகவில்லை என்று உணர்ந்தேன்.  அமீர்கானிடமே இன்னும் கொஞ்சம் ஆடம்பரமான அல்லது துடிப்பான தோற்றம் கொண்ட ஒரு புதிய நடிகை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினேன்" என்றார்.

May 07, 2026

எம்.எஸ்., சுப்புலட்சுமி படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு பதில் ருக்மணி வசந்த்.

கவுதம் தின்னனுாரி பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். இதில் சாய் பல்லவி நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு பதில் ருக்மணி வசந்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.கன்னடத்தில் இவர் நடித்த 'சப்த சாக ரலு தாட்டி எல்லா' படத்தை பார்த்த இயக்குனர், ருக்மணியை நடிக்க வைக்க முடிவுசெய்தாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.

May 07, 2026

நாகசைதன்யா புதையலை தேடும் வேட்டைக்காரனாக நடிக்கும் படம்' 'விருஷ கர்மா'.

இயக்குனர் கார்த்திக் தண்டு வர்மா இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம்' 'விருஷ கர்மா'. நாக சைதன்யா, " புதையலை தேடிச் செல்லும் ஒரு வேட்டைக்காரனாக அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாலி வுட்டில் இதுபோல பல படங்கள் வந்தாலும், இந்தியாவில் சில படங்களில் மட்டுமே இதுபோல முயற்சி செய்கின்றனர். நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை கொடுக்கும்" .

May 07, 2026

பட்ஜெட் காரணமாக நயன்தாராவுக்கு பதில் காஜல் அகர்வால்.

கோபிசந்த் மல்லேனி தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை இயக்க உள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் காரணமாக படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டது, அதிக சம்பளம் காரணமாக நயன்தாராவும் வெளியேற, அவருக்கு பதில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

May 07, 2026

'ஏஐ' இல்லாத  படங்களுக்கு மட்டுமே ஆஸ்கர்விருது வழங்கப்படும்.

உலக சினிமாவில் உயரிய விருதாக  உலக சினிமாவில் , ஆஸ்கர்  பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளுக்கு புது விதிகள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக் கியமாக ஏஐயில் உருவாக் கப்படும் படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு எடுத் துக் கொள்ளப்பட மாட்டாது. படத்தில் ஒரு அங்கமாக ஏஐ பயன்படுத்தலாமே தவிர முழுவதும் ஏஐஆக இருக்க கூடாது. கதை, திரைக்கதை, நடிப்பு உள்ளிட்டவைகளில் மனிதர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். மற்றவை தகுதியற்றதாகக் கருதப்படும் என ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.

May 07, 2026

மே 8ல்  '29' என்ற ஒரே ஒரு தமிழ் படம்தான் ரிலீஸ்.

2026 ம்ஆண்டின் நான்கு மாதங்களில் இதுவரை 86 படங்கள் வெளியாகி,. அவற்றில் நான்கைந்து படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தமிழக சட்ட சபை தேர்தல் பரபரப்பால் இருவாரங்களாக படங்களின் ரிலீஸ் மந்தமாக உள்ளது. இந்தவாரம் (மே 8 ல்) ரத்ன குமார் இயக்கத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள '29' என்ற ஒரு தமிழ் படமே வெளியாகிறது.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 89 90

AD's



More News