இசைஞானி இளையராஜா தனது 50 ஆண்டுகால திரையுலகப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், தான் உருவாக்கிய முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான "வேலியண்ட்" (Valiant Symphony No. 1) என்ற படைப்பை லண்டனில் அரங்கேற்றினார்.லண்டன் 'ராயல் ஃபில்ஹார்மோனிக்' இசைக்குழுவுடன் இணைந்து முழுமையான மேற்கத்திய சிம்பொனியை கம்போஸ் செய்து, அங்கு நேரலையாக நிகழ்த்திய முதல் ஆசிய மற்றும் இந்தியத் திரை இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை இதன் மூலம் அவர் படைத்தார்.லண்டனைத் தொடர்ந்து, இந்த பிரம்மாண்டமான 'வேலியண்ட் சிம்பொனி' (Valiant Symphony) நிகழ்ச்சி, சென்னையில் மே 30, 2026 அன்று ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மற்றும் லண்டன் சிம்பொனி நிகழ்ச்சிகளின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இளையராஜா தனது இரண்டாவது சிம்பொனி (Second Symphony) படைப்பிற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.அத்துடன், மேற்கத்திய மற்றும் இந்திய நடன அசைவுகளுக்குப் பொருந்தும் வகையில் ‘சிம்போனிக் டான்சஸ்’ (Symphonic Dances) என்ற புதிய இசை முயற்சியிலும் அவர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இளையராஜாவின் இந்த அரிய சிம்பொனி சாதனையைப் பாராட்டி, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் (Rajya Sabha) அவருக்குச் சிறப்புப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைச் சேவையைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு ‘இளையராஜா பெயரில் விருது’ வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.82 வயதிலும் ஓயாமல் சிம்பொனி மற்றும் புதிய இசை ஆல்பங்களை உருவாக்கி வரும் இசைஞானியின் இந்த லேட்டஸ்ட் சாதனைகள் உலக அளவில் உள்ள தமிழ் இசை ரசிகர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளன.
கலை மற்றும் திரையுலகிற்கு மம்முட்டி ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற காலிகட் பல்கலைக்கழகம் (University of Calicut) அவருக்கு இந்த கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.மம்முட்டியுடன் இணைந்து பிரபல விண்வெளி விஞ்ஞானி மாதவன் நாயர் மற்றும் கவிஞர் சுகதகுமாரி ஆகியோருக்கும் அதே விழாவில் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக (50 ஆண்டுகள்) இந்தியத் திரையுலகில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, மூன்று தேசிய விருதுகளை வென்ற அவரது கலைப் பயணத்திற்காக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.நடிப்பைத் தாண்டி மம்முட்டி செய்து வரும் பல்வேறு மனிதாபிமான உதவிகள், தொண்டு நிறுவனப் பணிகள் மற்றும் சமூக நலத்திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாகவும் இப்பல்கலைக்கழகம் இதனை வழங்கியது.கௌரவ முனைவர் பட்டம் பெற்றதன் மூலம், கலைத்துறையில் தங்களின் தனித்துவமான முத்திரையை பதித்த உலகளாவிய ஆளுமைகளின் வரிசையில் நடிகர் மம்முட்டியும் இணைந்தார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படத்தில் நடித்த மாதவன், இப் போது தமிழக விஞ்ஞானி ஜி.டி., நாயுடுவின் வாழ்க்கை படமான 'ஜி.டி.என்.,'ல் நடித்துள்ளார். இதை கிருஷ்ணகுமார் ராம் குமார் இயக்கி உள்ளார். ஜெயராம், பிரியாமணி , துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் துள்ளனர். கோவிந்த் வசந்தா இசைய க்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என -பான் இந்தியா படமாக வரும் ஜூலை 17ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
மோகன்லால், மீனா நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மே 21ல் வெளியான படம் 'திரிஷ்யம் 3'. கலவையான விமர்சனங்கள் வந்தாலும்,வசூல்சிறப்பாக உள்ளது.58 மணிநேரத்தில்ரூ.100 கோடிவசூலைக்கடந்துள்ளது. 'லுலூசிபர், புலி முருகன், தொடரும், எல் 2 எம்புரான்' ஆகிய படங்களை தொடர்ந்து மோகன்லாலுக்கு இது 5வது ரூ.100 கோடி வசூல் படமாகும்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா கூட்டணியில் வெளியாகி தியேட்டர்களில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளதால் த்ரிஷா செம்ம குஷியில் உள்ளார்.இந்நிலையில், த்ரிஷாவின் தீவிர ரசிகர் ஒருவர் படத்தின் தலைப்பை மையமாக வைத்து, அவருக்கு 'கருப்பு ஸ்டார்' என்ற புதிய பட்டத்தைச் சூட்டியுள்ளார். ரசிகரின் இந்த பாசமான பதிவைக் கவனித்த த்ரிஷா, "இது ரொம்ப அழகா இருக்கு... தேங்க்யூ" எனத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ரீ-ட்வீட் செய்து பதிலளித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி 'அப்பாகுட்டி'படத்தில், மு.மாறன் இயக்கத்தில் நடித்து ,இதற்கு 'அப்பாகுட்டி' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். தந்தை மகள் உறவை மையமாகக் கொண்டு ஆக்ஷன் குடும்ப படமாக உருவாகிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
கோடைவிடுமுறையில்அதிகபடங்களைவெளியிட்டு,. 'கருப்பு' தவிர்த்துவெளியானமற்றபடங்கள்எதுவும்வசூலை அள்ளவில்லை.படங்கள் வெளியீடும் குறைந்துவிட் டது. மே 28, 29 முறையே அர்ஜூனின் 'பிளாஸ்ட்', மறைந்த ரோபா சங்கர் ஹீரோவாக நடித்த 'ஈகோ ராமன்' ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
.பிரதீப் ரங்கநாதன் நடிகராகவும் வெற்றியாளராக வலம் வருகி றார். பிரதீப் ரங்கநாதன் நடிகராக, அவரது 3 படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியாளராக வலம் வருகி றார் . சத்தமின்றி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி ,தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கி, நடிக்க உள்ளார் பிரதீப்., மமிதா பைஜூ நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.
மணி ஹெய்ஸ்ட்'உலகின் பிரபலமான வெப் சீரீஸ்,. உலகளவில் அதிகமான நபரால் பார்க்கப்பட்ட வெப் தொடரும் இது. இப்போது அடுத்த சீசனுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்க சுரங்கம், தங்கம் கொள்ளை தொடர்பான கதை என கூறப்படுகிறது.மணி ஹெய்ஸ்ட்'டீசரில் 'புரட்சி ஒருபோதும் முடிவதில்லை' என வாசகம் இடம் பெற்றுள்ளது.
சமந்தா கதையின் நாயகியாக நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடித்து, தயாரித்துள்ள படம் 'மா இண்டி பங்காரம்'.ஆக் ஷன் பின்னணியில் சஸ்பென்ஸ் படமாக உருவாகி உள்ளது. படப் பணிகள் முடியாததால் ,நேற்று படம் வெளியாக வேண்டிய. ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது ஜூன் 19ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.