விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், குமிழங்குளம் ஊராட்சியில் (26.01.2026) 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2025 முதல்31.10.2025 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் குறித்தும், தொழிலாளர் வரவு - செலவு திட்டம் குறித்தும் வரவு - செலவு திட்டப் பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விபரம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும்.இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் தேவைகளை அறிந்து இனி வரும் காலங்களில் படிப்படியாக பூர்த்தி செய்து தரப்படும்.தற்பொழுது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று , வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலுக்கு முன்னதாக 16,26,458 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தி கொள்ளவும்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் மூலம் மகளிருக்கான கடனுதவிகள், உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்களின் தேவைகள் அறிந்து அதனை பூர்த்தி செய்தும், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ சிறப்பு முகாம் மூலம் சிறப்பு சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம் சார்பாக பள்ளிக்கல்வியினை தொடர இயலாத மாணவர்களின் இல்லங்களுக்கு மாவட்ட நிலை அலுவலர்கள் நேரடியாகச் சென்று, கல்வியினைத் தொடர இயலாத நிலையினை கண்டறிந்து அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கல்வியினைத் தொடர்வதற்காக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.மேலும், இரத்த சோகை குறைபாடுள்ள 430-கர்ப்பிணி தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1800-குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை அலுவலர்கள் நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கேச் சென்று அளித்து வருகின்றனர்.இதுபோன்று பொதுமக்களின் குறைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, 2-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில் ஆடு மற்றும் கறவை மாடு வளர்ப்பிற்காக மொத்தம் ரூ.60 மதிப்பிலான கடனுதவிகளையும், ஒரு நபருக்கு சிறு வணிகக் கடை அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் கடனுதவியும் என 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில் சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், வட்டார வளர்ச்சி அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (26.01.2026) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் வரவேற்றார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 8.15 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர், சிறப்பாக பணியாற்றிய 169 தலைமைக் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக ஒரு பயனாளிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் போர் கைம்பெண் கருணைத்தொகையும் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.25,000/- போரில் ஊனமுற்றமைக்கான வருடாந்திர பராமரிப்பு மானியத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு நல்கி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வரும் 19 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சிறப்பு இனங்களில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது சிறு சேமிப்பு தொகையை வழங்கிய பள்ளி மாணவனுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கும்,2 சிறந்த குருதிக் கொடையாளர்களுக்கும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் மற்றும் பொது வாழ்க்கைக்கான சிறந்த சேவை புரிந்தவருக்கும், ஒரு சிறந்த குழந்தைகள் நல காப்பகத்திற்கும், சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளருக்கும், சிறந்த தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு உதவிய எழுத்தாளருக்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் மூலம் பயன்பெற்று முன்னேறி வரும் 5 பயனாளிகளுக்கும், 2 சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், ஒரு சிறந்த பள்ளிக்கும், சிறந்த இளம் தொழில் முனைவோர், சிறந்த பெண் தொழில் முனைவோர், சிறந்த மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர், சிறந்த வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சிறந்த விவசாயி, சிறந்த சுற்றுச்சூழல் ஊக்கி ஆகியோருக்கும், 2 சிறந்த தன்னார்வ கொடையாளர்களுக்கும், 2 சிறந்த அங்கன்வாடி பணியாளர்கள், 2 சிறந்த அங்கன்வாடி உதவியாளர்கள், 2 சிறந்த சத்துணவு பணியாளர்கள், 4 சிறந்த தொண்டு நிறுவனங்கள், 2 சிறந்த திருநங்கைகள், 11 சிறந்த ஊராட்சி செயலர்கள், 3 சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு சாலை பாதுகாப்புக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரியும் 2 தூய்மைப்பணியாளர்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த 12 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், நகராட்சியில் சிறப்பாக பணிபுரியும் 2 தூய்மைப்பணியாளர்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தபணிகள் துறையில் 2 பணியாளர்கள், தீயணைப்பு மீட்புத்துறையில் 3 பணியாளர்கள், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிபுரிந்தமைக்காக 4 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.2000/-ரொக்கப்பரிசு, சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைச் சார்ந்த 149 அரசு பணியாளர்களுக்கும், குடியரசு தின விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த 16 நபர்களுக்கும் என மொத்தம் 293 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரா.ஆனந்தி, திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), மாவட்ட அளவிலான அலுவலர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், சூலக்கரை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்று, குடியிருந்து வரும் 27 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது.மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டங்களில் ஒன்றாக நமது மாவட்டம் திகழ்கிறது.அந்த வகையில் அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 27 குடும்பங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகளை பெற்று குடியிருந்து வருவதாகவும், இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டார்கள்வழங்கிடவேண்டுமெனகோரிக்கைவைத்தனர்.அதனடிப்படையில், குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருவாய்த்துறையின் மூலம், 27 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்த இடங்களில் நாங்கள் குடியிருந்து வந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே வீடு தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் நாங்கள் குடியிருந்து வரும் இந்த வீட்டுக்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர் திரு.செந்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (25.01.2026) தேர்தல் பிரிவின் மூலம் 16-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் ஆணையர் அவர்கள் வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி காட்சிகளை மாணவர்கள் பார்வையிட்டனர்.மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியம், கோலம் உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், புதிய வாக்காளர்களாக பதிவு செய்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ ரமணாஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவி எஸ்.சண்முகபிரியா என்பவர் உரையாற்றினார்.மேலும், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பந்தல்குடி கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பெ.கவிதா என்பவர் கட்டுரை வாசித்தார்.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கம் தேர்தல் ஆணையம். இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான ஜனவரி 25 ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக 2011ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள அனைவரையும் விடுதலின்றி வாக்காளராகப் பதிவு செய்வதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் தேர்தல் நடைமுறைகளில் குடிமக்களின் பங்கெடுப்பை அதிகரிப்பது ஆகியவையே இந்நாளினைக் கொண்டாடுவதன் நோக்கமாக உள்ளது. 18-வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களும் வாக்காளராகப் பதிவு செய்து கொண்டு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தில் பங்கெடுக்க இயலும். தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்த முறையில் புதிதாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி முன்னதாக 16,26,485 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது, சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியலில் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இதில் தங்களது பெயர் சரியான முறையிலும் சரியான இடத்திலும் பதிவாகி உள்ளதா என்றும் சரிபார்த்து, பெயரை சேர்த்துக் கொள்ளவோ, தேவை ஏற்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளவோ வேண்டும்.நமது நாட்டை ஆட்சி செலுத்தும் ஆட்சியாளர்களை குடிமக்களாகிய நாமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதே மக்களாட்சி.நமக்கு தேவையான படிப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளும் நாம் தேர்ந்தெடுக்கூடிய தலைவர்களால் உருவாக்கக் கூடிய கொள்கைகளால் தான் கொண்டு வரப்படுகின்றன.அப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க நம்முடைய வாக்குகளை நாம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். நடைபெறும் தேர்தல்கள் மக்களுக்கு தேவையான சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் அமைதியானதாகவும் நடைபெற குடிமக்கள் அனைவரும் சீரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தேர்தல்களில் அச்சமின்றியும், மதம், சாதி, இனம், வகுப்பு மற்றும் மொழி ஆகிய பாகுபாடு இல்லாமல் வாக்களிக்க வேண்டும். மேலும் எந்தவொரு தூண்டுதலுக்கு ஆளாகாமல் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம், நமது நலன் கருதும் மரபுகளைக் காப்பதுடன் தேர்தல்களின் மாண்பை நிலை நிறுத்துவோம்.இந்திய ஜனநாயகம் என்றென்றும் துடிப்புடன் இயங்க, அதன் இதயமாக உள்ள வாக்காளர்களாகிய நாம், வாக்காளர் என்பதில் பெருமை கொள்வதோடு, 100 சதவீதம் விடுதலின்றி நேர்மையாக வாக்களிப்போம் எனவும் பெருமிதம் கொள்வோம் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நமது இலக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, 16- வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்தமாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு மையத்தினையும், வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.மேலும், 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்டில்(Selfei Stand) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புகைப்பட எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரமணன், அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திரு.செந்திவேல், எஸ்.பி.கே.கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.இராதா, கல்லூரி செயலாளர் திரு.ஆசைத்தம்பி, எஸ்.பி.கே. பள்ளி செயலாளர் திரு.காசிமுருகன்,அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.01.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கள ஆய்வு மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் தருணங்களில், அக்குழந்தைகளுக்கு முறையாக ஆலோசனை வழங்கி அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றுப்படுத்துநர்கள் கட்டாயம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பள்ளி படிப்பினை இடைநிறுத்தம் செய்த குழந்தைகள் தான் சட்டத்திற்கு முரணான குழந்தைகளும், குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாறும் சூழ்நிலைகள் உள்ளதால் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அவர்கள் தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 2014-ன்கீழ் மாவட்டத்தில் பள்ளிகளின்கீழ் செயல்படும் பள்ளி விடுதிகள் அனைத்து பதிவு மற்றும் உரிமச்சான்று பெற்று இருக்கவேண்டும். அவ்விடுதியினை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நலஅலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியப்படும் பட்சத்தில், அக்குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன் ஒப்படைத்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் நலக்குழு முன் ஆஜராகும் வகையில் ஆணை பிறப்பித்து ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மனவள ஆலோசனைகள் வழங்கவேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக, விருதுநகரில் செயல்பட்டு சரஸ்வதியம்மாள் லையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பென்டகன் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் திருமதி ஆர்.ஜெயசுதா மற்றும் திருமதி உஷா நந்தினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, முதன்மை கல்வி அலுவலர் திரு,அரவிந்தன், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.திலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை ஊராட்சியில், சிவகாசி வட்டம் செவலூர் ஊராட்சியில் (24.01.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய கர்ப்பிணி தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்து கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24.01.2026) வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு வாகனம் வீதம் மொத்தம் 7 வாகனங்கள் மூலம் இளம் வாக்காளர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில்விழிப்புணர்வு நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த வாகனங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிப்பதோடு, வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கவுள்ளது.எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்கள் பகுதிகளுக்கு வரும் இந்த வாகனங்களை பயன்படுத்தி வாக்குப்பதிவு குறித்த செயல் விளக்கத்தை அறிந்து கொண்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் 25.1.2026 முதல் 27.1.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த அனைத்து (11 தொகுதிகள்) ஊராட்சி ஒன்றிய அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளது.இந்த விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.இவற்றில் முதலிடம் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். மேலும் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டார (BLOCK LEVEL) அளவிலான விளையாட்டுப் போட்டிகள் விருதுநகர் மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளன. இராஜபாளையம் வட்டத்தில், பு.மூ.மாரிமுத்து நாடார் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, தளவாய்புரம் காலை 08.00 மணியளவில், 25.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டி 100 மீ (பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டி குண்டு எறிதல் (பெண்கள்,) கேரம் (இரட்டையர்கள்) (பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), கபாடி(பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி(பெண்கள்), எறிபந்து (பெண்கள்), உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டி 100 மீ (ஆண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டி குண்டு எறிதல் (ஆண்கள்) கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்), கபாடி(ஆண்கள்), கயிறு இழுத்தல் போட்டி(ஆண்கள்), மட்டைப்பந்து (ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், திருவில்லிபுத்துார் வட்டம், மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி, திருவில்லிபுத்தூர், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள் மற்றும் பெண்கள், கபாடி(பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), எறிபந்து (பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி(ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன. சிவகாசி வட்டம், அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரி, சிவகாசியில், காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) கபாடி(பெண்கள்) கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்) கையுந்து பந்து(ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), கபாடி(ஆண்கள்), எறிபந்து (பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், வெம்பக்கோட்டை வட்டம், P.S.R. பொறியியல் கல்லுாரி, அய்யநாயக்கன்பட்டி, காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி(பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன. நரிக்குடி வட்டம், மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், நரிக்குடி முக்கு ரோடு, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று எறிபந்து (பெண்கள்), கபாடி(பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும், குண்டு எறிதல்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) பெண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி(ஆண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், திருச்சுழி வட்டம், S.B.K மேல்நிலைப் பள்ளி, கல்லுாரணி காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து (பெண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன. காரியாபட்டி வட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லாங்கிணறு, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கபாடி ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கபாடி ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி ஆண்கள், தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) பெண்கள், கேரம் (இரட்டையர்கள்) பெண்கள், எறிபந்து பெண்கள், கையுந்து பந்து பெண்கள், கபாடி பெண்கள், கயிறு இழுத்தல் போட்டி பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.விருதுநகர் வட்டம், செந்திகுமாரநாடார் கல்லுாரி, விருதுநகர், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கபாடி ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி பெண்கள், எறிபந்து பெண்கள், கையுந்து பந்து பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், சாத்துார் வட்டம் SRNM கல்லுாரி, சாத்துார், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கபாடி பெண்கள், கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி ஆண்கள், தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன. வத்ராயிருப்பு வட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி கூமாபட்டி, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி ஆண்கள், கையுந்து பந்து ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து பெண்கள், கபாடி பெண்கள், தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், அருப்புக்கோட்டை வட்டம் ஸ்ரீ செளடாம்பிகை பொறியியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை, காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) பெண்கள், எறிபந்து பெண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன., கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள இராஜபாளையம் வட்டம் திரு.K.மணிரத்தினம், (Cell:9940908430), திருவில்லிபுத்தூர் வட்டம் திரு. R.சுப்ரமணியன் (Cell:9751393412), சிவகாசி வட்டம் திரு. P.கார்த்திக், குத்துச்சண்டை பயிற்றுநர் (Cell:7339594617), வெம்பக்கோட்டை வட்டம் திரு. மகாராஜா (Cell:8667233423), நரிக்குடி வட்டம் திரு. நாகர்ஜீன் (Cell: 8939101902), திருச்சுழி வட்டம் திரு.ஆறுமுகம் Cell:9655849601), காரியாபட்டி வட்டம் திரு. எம்.ரஞ்சித் (Cell:7530082477), விருதுநகர் வட்டம் திரு.நாகேந்திரன் (Cell:8940904377), சாத்துார் வட்டம் திருமதி. ஆர்.நாகஜோதி (Cell:9500760243), வத்ராயிருப்பு வட்டம் திரு.எம்.அருள்போஸ் (Cell: 9488887989), அருப்புக்கோட்டை வட்டம் திரு.பிரகதீஸ்வரன் (Cell: 8610515749) என்ற அந்தந்த வட்டாரப் பகுதி எண்களை தொடர்பு கொள்ளலாம்.எனவே, மேற்கண்ட போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.01.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 நாட்களில் பணம் வரவு வைக்கப்படும் என மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம்) அவர்களால் தெரிவிக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிர் கடன், வழங்கவும், கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும், பல்வேறு நகராட்சிகள்,மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்எனமாவட்டஆட்சியர்அவர்கள்அறிவுறுத்தினார்கள்.வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் கிராம அளவில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.விவசாயிகளுக்கு காட்டுப் பன்றிகளால் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடித்திட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,), திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி மு.சுமதி, திரு.மோகன்தாஸ் சௌமியன் வேளாண்மை இணை இயக்குநர், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (23.01.2026) தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட 1950-சனவரி-25 தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி-25 தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதனடிப்படையில், மாவட்ட அளவில் பல்வேறு வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “எனது இந்தியா” என்ற தலைப்பில் “இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு,மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் என்ற உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.