25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 20, 2026

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் (19.02.2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வரைவு வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர் குறியீடு உள்ள வாக்காளர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர்பணியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026ல் படிவம்- 6, 7, 8 ஆகியவற்றை, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் (TN Rights) மூலம் கள ஆய்வு செய்து எடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும், அவர்களை அடையாளப்படுத்தி வாக்குச்சாவடியில் தேவையான அணுகல் வசதிகள் ஏற்பாடு செய்யவும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி வாக்காளர் குறியீடு உள்ள வாக்காளர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ உதவி ஆணையர் கலால் திரு.ரமேஷ், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.பாலமுருகன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Feb 20, 2026

உண்டு உறைவிடப் பயிற்சி பெற்று, அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) முதல்நிலை தேர்வில் தகுதி பெற்ற 11 அரசுப்பள்ளி மாணவர்களை இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (19.02.2026) மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பு மூலம் உண்டு உறைவிடப் பயிற்சி பெற்று, அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) முதல்நிலை தேர்வில் தகுதி பெற்ற 11 அரசுப்பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி செய்து தயார்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு(JEE) தயார்படுத்தும் வகையில் 79 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் உண்டு உறை விட பயிற்சி அளிக்கப்பட்டது.அந்த வகையில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான(JEE) முதல்நிலை தேர்வில் 11 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.அந்த வகையில், இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள 11 மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி செய்து தயார்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், அடுத்த நிலை தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.அரசுப்பள்ளியில் பயிலும் எங்களுக்கும், இந்திய அளவிலான தலைசிறந்த கல்லூரிகளில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகளையும்  வழங்கும் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிலை உயர் அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 20, 2026

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.02.2026) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் - 2026  பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S ., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர்பணியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026ல்' படிவம்- 6, 7, 8 ஆகியவற்றை, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்த விதம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் குறியீடு குறித்து கேட்டறிந்தார்.மேலும், அதிகபட்சமாக பெயர் சேர்க்கப்பட்ட, நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுச் சாவடிகள், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படங்களின் தரம், வாக்காளர் அடையாள அட்டை விநியோகம், இளம் வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு மற்றும் பொதுமக்களின் குறைதீர்க்கும் உதவி மையம் பற்றியும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும் வாக்காளர் பதிவு அலுவர்களுக்கு தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 குறித்து வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Feb 20, 2026

போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரிக்கை.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.17.02.2026 வரை 19,405 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 2508 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.39,48,13,414/-ஐ (ரூபாய் முப்பத்தி ஒன்பது கோடியே நாற்பத்தி எட்டு இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்றி பதிநான்கு மட்டும்) வரவு வைக்கப்பட்டுள்ளது.இந்நேர்வில், விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டதை கள ஆய்வில் உறுதி செய்த பின்னரே விவசாயிகளுக்கு முறையாக 10(1) சிட்டா மற்றும் அடங்கல்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்பட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்களிடமிருந்து போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், மேற்படி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விநியோகம் பராமரிக்கும் சட்டம் 1955-ன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ,, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 19, 2026

தோட்டக்கலை பயிர்களில் அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (18.02.2026) தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-2026-ன் கீழ், தோட்டக்கலை பயிர்களில் அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகளுக்கான இரண்டு நாள் மாவட்ட அளவிலான கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்தார். உலகளவில் இயற்கை முறையில் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு அதிகளவிலான சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை முறையில் உற்பத்தி செய்தல், சாகுபடி செய்யப்பட்ட விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்துதல், ஏற்றுமதிக்கு உகந்த வேளாண் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.மேலும், விவசாயிகளால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அங்கக உரங்கள் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும், தொழில்நுட்பங்கள், இயற்கை முறை உற்பத்தி சான்றிதழ், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன.எனவே, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் உற்பத்தி செய்வது, வணிகம் செய்வது, மதிப்புக்கூட்டல், வங்கிக் கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், தோட்டக்கலை அங்கக சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பம் குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார். இக்கருத்தரங்கில், தோட்டக்கலை பயிர்களில் அங்கக சாகுபடி குறித்து வேளாண் அறிவியல் மையப் பேராசிரியர் (தோட்டக்கலை) திரு.பாலசுப்பிரமணியன், திருமதி ஜடாகவிதா (இணை பேராசிரியர்), திரு.நல்லகுரும்பன் (இணை பேராசிரியர்) ஆகியோர் தொழில்நுட்ப உரை வழங்கினர்.தோட்டக்கலை பயிர்களில் சாகுபடி செய்யப்பட்ட விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு உகந்த முறையில் நன்னெறி வேளாண் முறைகள் குறித்த தொழில்நுட்ப உரையினை திருமதி மா.செல்வி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மற்றும் திரு.மு.தீபன் சக்ரவர்த்தி (மூத்த நிலை மேலாளர், TNAPEX) ஆகியோர் வழங்கினர்.மேலும், விருதுநகர் மாவட்ட விவசாயிகளால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் அங்கக உரங்கள் தயாரிப்பு குறித்த செயல்விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.பா.மோகனதாஸ் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சூ.சுபாவாசுகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நுகர்வோர்கள், ஏற்றுமதி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Feb 19, 2026

காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில்  (18.02.2026) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நான்கு ஒன்றியங்களில் இருந்து 11 ஆம் வகுப்பு பயிலும் 511 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்வு வாய்ப்புகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள் மற்றும் தேர்வுக்கு பயிற்சி செய்யும் விதம் பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப அவர்கள் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.

Feb 18, 2026

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காமராஜர் பூங்காவில்  (17.02.2026)மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பானவிழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் துவக்கிவைத்தார்.போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும்ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள்மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள்சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்நோக்கத்துடனும் பேரணி தொடங்கப்பட்டது.ஒரு வேதிப்பொருள் மாற்றத்தால் நமது உடம்பு இயங்குகிறது. அதில் ஒரு சிலவேதிபொருட்கள் மாற்றத்தினால் மூளையில் சென்று, ஒரு சில ஹார்மோன்கள் சுரக்கவைக்கும்.அப்பொழுது தான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே அதனை தடுக்காவிட்டால்,அதனை சார்ந்த ஒரு மனிதனாகவே மாறிவிடுவார். இதில், உடலில் ஏற்படக்கூடிய மாற்றத்தினால்தான் மகிழ்ச்சிஏற்படுகிறது.துருவப் பகுதிகளில், மனிதர்களுக்கு உணவுப்பொருட்கள் எளிதாக கிடைப்பதில்லை.அவர்கள் வேட்டையாடி தான் உணவினை பெறுவார்கள். அதாவது விலங்கினைவேட்டையாடுவதற்காக தேடுவார்கள். அதற்கு பல நுட்பங்களை கையாண்டுதான்வேட்டையாடுகின்றன. கூர்மையான கத்தி போன்ற பொருட்களை கொண்டு தான் வேட்டையாடிஅதன் மீது இரத்தத்தை ஊற்றி தான் வேட்டையாடுவார்கள். அப்பொழுது விலங்கிலிருந்துமுழுவதுமாக இரத்தம் வெளியேறி இறந்துவிடும்.இதுபோன்று தான் ஒரு மனிதன் பயன்படுத்தக்கூடிய போதைக்கு உதாரணமாக கூறலாம்.இரத்தம் எவ்வாறு விலங்கிற்கு சுவையாகஇருக்கிறதோஅதேபோல்போதைப்பொருட்களிலிருந்து வரும் இன்பம் என்பது அந்த போதைப் பொருட்களினால்கிடைக்கக்கூடிய இன்பம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதுஉண்மையல்ல. அது உங்கள் உடலில் உள்ள வேதிமாற்றங்களால் உங்கள் உடல் உறுப்புகள்சிதைந்து அதன் மூலமாக வரக்கூடிய இன்பம் தான் போதைப்பொருட்களுக்கான இன்பம் ஆகும்.ஒருவருடைய வாழ்நாளில் ஆரோக்கியமாக எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்றால்அவருடைய மொத்த வாழ்நாளில் 30000 நாட்கள் வாழ்கிறார் என்றால் அதில் 27000நாட்களாவது ஆரோக்கியமாக வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும்போதைப்பொருள்களில் அடிமையானவர்கள் ஒருநாளில் 3 மணிநேரமாவது வீணடிக்கிறார்கள்.ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய செல்வம் என்பது அவனது கையில் இருக்கக்கூடிய நேரம்தான். அந்த நேரத்தையும், உடலையும் முழுமையாக அளிக்கக்கூடியது போதைப்பழக்கம் தான்எனவும், இப்போதைப் பொருட்கள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ள அனைத்து வகையான வாய்ப்புகளையும் பயன்படுத்தி பயனடையுமாறும் கேட்டுக்கொண்டார்.போதை ஒழிப்பு பேரணி காமராஜர் பூங்கா முதல் காரனேசன் பெண்கள்மேல்நிலைப்பள்ளி வரை செல்லும் சாலை வழியாக பேரணி நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில், சிவகாசி சார் ஆட்சியர் திரு. முகமது இர்பான்,. I A S ., அவர்கள்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலர் ரமேஷ், காவல்துறை அதிகாரிகள், சிவகாசிவட்டாட்சியர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 18, 2026

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில்  (17.02.2026) எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Feb 18, 2026

புல்வாய்ப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புல்வாய்ப்பட்டி ஊராட்சியில் (17.02.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Feb 18, 2026

சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் 11 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி  வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில்  (17.02.2075) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி  வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நான்கு ஒன்றியங்களில் இருந்து 11 ஆம் வகுப்பு பயிலும் 614 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் நடைபெற  இருக்கும் நுழைவுத் தேர்வு வாய்ப்புகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள் மற்றும் தேர்வுக்கு பயிற்சி செய்யும் விதம் பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.

1 2 ... 40 41 42 43 44 45 46 ... 140 141

AD's



More News