25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 16, 2026

திருச்சி மருத்துவர்களின் உலக சாதனை.

திருச்சியில் உள்ள G. விஸ்வநாதன் மருத்துவமனை, பெல்ஜியத்தில் இருந்து இந்தியா வரை சுமார் 9,700 கி.மீ தூரத்தில் டெலி-ரோபோடிக் பெண்ணோயியல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு உலக சாதனை படைத்துள்ளது.இந்த சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் ரம்யா கலைச்செல்வன் மற்றும் டாக்டர்கள் கோவிந்தராஜ், ஹேமமாலினி, முத்துராம் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Jun 16, 2026

நகர்ப்புற வளர்ச்சிக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய்  உத்தரவிட்டுள்ளார்.

 தமிழ்நாட்டின் அனைத்து 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேர தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.மேலும், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்தி, தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.அனைத்து மாநகராட்சிகளிலும் 100 சதவீத குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை வழங்கும் பணிகளை விரைவுபடுத்தவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற பகுதிகளில் பல்லுயிர் மற்றும் சூழலியல் பூங்காக்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், தேவைக்கேற்ற கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Jun 15, 2026

மாற்றங்களுடன் புதிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் ஜூலை 15 முதல் பயன்பாட்டுக்கு....

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் ஜூலை 15 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது மாணவர் ஒருவர், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள், ‘கேப்ட்சா’ சரிபார்ப்பு நடைமுறை மற்றும் தட்கால் டிக்கெட் முன்பதிவு நேரங்களில் இணையதளம் செயலிழப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் லட்சக்கணக்கான பயணிகள் சிரமம் அடைவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்றும் கேட்டார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், புதிய மற்றும் அதிவேக தொழில்நுட்ப வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அது ஜூலை 15 முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.புதிய இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செயல்முறை மேலும் எளிமையாகவும், விரைவாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jun 15, 2026

இந்தியாவின் முதல் மக்கும் பால் பாக்கெட் அறிமுகம்! ( MOTHER DAIRY )

மண்ணில் இயற்கையாகவே மக்கிப்போகும் இந்தியாவின் முதல் பால் பாக்கெட்டை ஒன்றிய அரசின் மதர் டெய்ரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய பால் பாக்கெட், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Jun 15, 2026

புகைப்பட கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்களுக்கு ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு; 

புகைப்பட கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்களுக்கு ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு; ஒளிப்படக் கலைஞர் பணியிடங்கள் ஆளும் கட்சியினரால் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், 56 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக அறிவிப்பு வெளியானது.

Jun 15, 2026

ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் பயணம்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 13 முதல் 19 வரை ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்குச் செல்லும் அவர், ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஜி7 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.

Jun 13, 2026

மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் '1930' என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவசர உதவி எண் : 1930தமிழ்நாடு காவல்துறை அறிவிப்புபெண்கள் தனியாக ஆட்டோவிலோ அல்லது கார்லேயோ பயணம் செய்வதற்கு முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். காவல்துறை அந்த வாகனத்தை GPRS மூலம் கண்காணிக்கும். இந்த தகவலை உங்கள் அனைத்து குடும்பங்களிலும் பகிரவும்.

Jun 13, 2026

DEAD ZONES .

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில்1985ம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு சராசரியாக2.1% குறைந்துள்ளதாக சீன அறிவியல் அகாடமி நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!காலநிலை மாற்றமே இதற்கு முதன்மை காரணம் என்றும், இதே நிலை\நீடித்தால்,2100ம் ஆண்டுக்குள் வெப்பமண்டல ஆறுகளில் மீன்கள்)சுவாசிக்க முடியாத அளவுக்கு Dead zones உருவாகும் எனவும் எச்சரிக்கை.

Jun 13, 2026

இயற்கையின் அதிசயம்.

சைபீரியாவின் அலாசியா நதிக்கரை அருகே, உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 24,000 ஆண்டுகளுக்கு முந்தைய Zombie Worm என்ற நுண்ணுயிர்ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை கண்டெடுத்த நிலையில், ஆய்வகத்தில் உயிர்பெற்று உணவு உண்ணவும், நகரவும் தொடங்கிய Zombie Worm, பாலில்லா இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியதால் விஞ்ஞானிகள் வியப்பு.

Jun 13, 2026

இந்தியாவின் முதல் எத்தனால் பைக் அறிமுகம்.

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவின் முதல் 'ஃபிளெக்ஸ் ஃபியூவல்' (Ethanol) பைக்குகளை அறிமுகம் செய்துள்ளார்.HF Deluxe Flex Fuel: ₹72,792 (Ex-showroom)Splendor+ Flex Fuel: ₹82,710 (Ex-showroom)

1 2 ... 26 27 28 29 30 31 32 ... 131 132

AD's



More News