25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 24, 2026

புதிய வரவு: மொபைல் சந்தையில் களமிறங்கும் Fire-Boltt.

ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஆடியோ சாதனங்கள் விற்பனையில் இந்திய சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள Fire-Boltt, தற்போது ஸ்மார்ட்போன் சந்தையிலும் கால்பதிக்கத் தயாராகி வருகிறது.நிறுவனம் அடுத்த மாதம் தனது முதல் ஸ்மார்ட்போன் வரிசையை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மொபைல் போன்கள் Unisoc செயலி (Chipset) மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட சாதனங்களை வழங்குவதை Fire-Boltt இலக்காகக் கொண்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் உள்ளிட்ட அணியக்கூடிய சாதனங்கள் (Wearables) சந்தையில் கவனம் செலுத்தி வந்த Fire-Boltt, தற்போது மொபைல் துறையில் தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டு வரும் நிலையில், Fire-Boltt-ன் வரவு வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல தேர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய ஸ்மார்ட்போன்களின் விலை, கேமரா அம்சங்கள், பேட்டரி திறன் உள்ளிட்ட முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. Unisoc சிப் கொண்ட இந்த போன்கள் பட்ஜெட் மற்றும் நடுத்தர விலை பிரிவை குறிவைத்து அறிமுகமாகலாம் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jun 24, 2026

டாக்டர். அண்ணல் அம்பேத்காரின் உதவும் கரங்கள்

தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடைய சிவில் சொத்து சம்பந்தப்பட்ட கேசுகள் கோர்ட்டுக்கு சென்றும் நிலுவையில் இருத்தல் உங்கள் சொத்துக்களை ஏமாற்றி அடுத்தவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்தல் மேலும் கட்சியின் பலத்தை வைத்துக்கொண்டு உங்களது சொத்துக்களை அபகரித்தல் உங்கள் சொத்துக்கள் மீது வில்லங்கம் மற்றும் சந்தேகம் இருத்தல் உங்கள் சொத்துக்களை உங்களுக்கே திரும்ப பெற்று தருதல் ஆகிய அனைத்துஉதவிகளையும் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாக்டர். அண்ணல் அம்பேத்காரின் உதவும் கரங்கள் மக்களுக்கு உண்டான உதவிகளை செய்து வருகிறோம்.தாங்கள் அழைக்க வேண்டிய அலைபேசி எண்கள் - 94437 74440

Jun 23, 2026

போலீஸ் உடை ஏன் காக்கி நிறத்தில் இருக்கிறது?

ஆரம்பத்தில் இந்திய காவல்துறையின் சீருடை வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் வெள்ளை நிற உடை எளிதில் அழுக்காகிவிடும். தூசி, மண் போன்றவை உடனே தெரிந்துவிடுவதால் அதை தினமும் சுத்தமாக வைத்திருப்பது சிரமமாக இருந்தது.இதற்குத் தீர்வாக, 1840களில் பிரிட்டிஷ் அதிகாரி Sir Harry Lumsden சீருடையின் நிறத்தை மாற்றும் யோசனையை கொண்டு வந்தார். தேநீர், மண் மற்றும் இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி உடையை மங்கலான பழுப்பு நிறமாக மாற்றினர். பின்னர் அந்த நிறம் "காக்கி" என்று அழைக்கப்பட்டது."காக்கி" என்ற சொல் உருது மொழியின் "காக்" (Khak) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அதற்கு "மண்" அல்லது "தூசி" என்று பொருள்.காக்கி நிறம் தேர்வு செய்யப்பட்டதற்கான முக்கிய காரணங்கள்:அழுக்கு எளிதில் தெரியாது.வெயில் மற்றும் வெளிப்புற பணிகளுக்கு ஏற்றது.ஒழுக்கம் மற்றும் அதிகாரத் தோற்றத்தை அளிக்கிறது.பாதுகாப்புப் பணிகளில் மறைவாக செயல்பட உதவுகிறது.அதனால்தான் இன்று வரை காவல்துறை மற்றும் ராணுவ சீருடைகளில் காக்கி நிறம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Jun 23, 2026

பெட்ரோல் செலவு அதிகமாகிறதா? உங்கள் பைக்கின் Mileage-ஐ உயர்த்தும் எளிய வழிகள்!

பழைய பைக்குகளில் மைலேஜ் குறைவது இயல்பான விஷயமாக இருந்தாலும், சரியான பராமரிப்பு மூலம் அதை மேம்படுத்த முடியும்.ஒவ்வொரு 2,000 கிலோமீட்டருக்கும் ஏர் ஃபில்டரை சுத்தம் செய்வது என்ஜின் செயல்திறனை அதிகரிக்கும். டயர்களில் சரியான காற்றழுத்தம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். காற்று குறைவாக இருந்தால் எரிபொருள் அதிகமாக செலவாகும்.மேலும், 500 கிலோமீட்டருக்கு ஒருமுறை செயினுக்கு லூப் பயன்படுத்தி, அதன் இறுக்கத்தை சரிபார்ப்பது அவசியம். தேவையில்லாமல் வேகத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, 40–50 கிமீ வேகத்தில் சீராக ஓட்டினால் நல்ல மைலேஜ் கிடைக்கும்.

Jun 22, 2026

மும்பை அருகே தானேவைச் சேர்ந்த கணேஷ் சதே, சிஏ கனவை விட்டுவிட்டு தோசை தொழிலில் வெற்றி: மாதம் ரூ.12 லட்சம் லாபம் .

மும்பை அருகே தானேவைச் சேர்ந்த கணேஷ் சதே, சிஏ தேர்வு தயாரிப்பை கைவிட்டு தனது தாயாரின் சிறப்பு ‘பெண்ணே தோசை’ செய்முறையை அடிப்படையாகக் கொண்டு உணவுத் தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் தினசரி வெறும் ரூ.200 மட்டுமே விற்பனையாகி சவால்களை சந்தித்த அவர், சகோதரி சப்னாவுடன் இணைந்து சமூக ஊடகங்கள் மூலம் தொழிலை பிரபலப்படுத்தினார்.அவர்களின் விடாமுயற்சியால் இன்று ‘தி பென்னே’ கடைக்கு தினமும் சுமார் 400 வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். தற்போது இந்த தொழில் நாளொன்றுக்கு ரூ.40,000 வருவாயையும், மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் லாபத்தையும் ஈட்டி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

Jun 22, 2026

அமைதி பேச்சுவார்த்தை: பெட்ரோல், கேஸ் விலை குறையுமா?

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தணியும் அறிகுறிகள் தென்படுவதால், உலக எரிசக்தி சந்தையில் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது.கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அச்சங்கள் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன.தற்போது சூழ்நிலை சீராகும் நிலை ஏற்பட்டாலும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்புவது சாத்தியமில்லை. கப்பல் போக்குவரத்து தாமதம், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள், காப்பீட்டு செலவுகள் மற்றும் துறைமுக நெரிசல் போன்ற காரணங்களால் சந்தை இயல்பு நிலையை அடைய சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.

Jun 22, 2026

சலுகை விலையில் சூப்பர் 5ஜி போன்... SONY கேமராவுடன் லாவா அசத்தல்!

5ஜி ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு லாவா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடல் தற்போது 11% தள்ளுபடியுடன் ரூ.15,990 விலையில் கிடைக்கிறது.இந்த போனில் 6.75 இன்ச் 120Hz டிஸ்ப்ளே, டைமென்சிட்டி 7060 சிப்செட், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் வரும் இந்த சாதனத்தில் 50MP சோனி பிரதான கேமரா, 4K வீடியோ பதிவு வசதியும் உள்ளது.மேலும், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. Frosty Blue மற்றும் Dune Titanium நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

Jun 20, 2026

. அதிர்ஷ்டக் காற்று: கணக்கு தொடங்கிய 2 மாதத்தில் ₹4.5 கோடிக்கு மேல் வென்ற இந்திய வாலிபர்!

அபுதாபியில் வசித்து வரும் 34 வயதான இந்தியர் ஷாஜீர் வெங்கா, ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி (SIB) நடத்திய 'மில்லியனர் கேம்பைன்' (Millionaire Campaign) குலுக்கலில் ஏஇடி (AED) 2 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 4.5 கோடி ரூபாய்க்கும் மேல்) பரிசுத் தொகையை வென்று மில்லியனராகியுள்ளார்.அவர் இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், இந்த அதிர்ஷ்டப் பரிசு அவரைத் தேடி வந்துள்ளது. "இந்தத் திட்டத்தைப் பற்றிப் படித்துவிட்டு என்றாவது ஒருநாள் நாமும் வெல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் இவ்வளவு சீக்கிரம் என் கனவு நிஜமாகும் என எதிர்பார்க்கவில்லை" என்று ஷாஜீர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Jun 20, 2026

வட்டியும் முதலுமாக அடைத்த மோடி அரசு.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் அரசு வாங்கிய Oil Bondக்கான அசல் மற்றும் வட்டியை மொத்தமாக கட்டி முடித்த மோடி அரசு. ₹1.53 லட்சம் கோடி அசல் மற்றும் ₹1.70 லட்சம் கோடி வட்டி என மொத்தமாக ₹3.23 லட்சம் கோடி கடனை மோடி அரசு கட்டி முடித்துள்ளது.

Jun 20, 2026

வன்பொருள் துறையில் களமிறங்கிய சோஹோ. ( ZOHO )

 செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கணினி உள்கட்டமைப்பு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், சோஹோ நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட "நது லா" (Nathu La) என்ற சர்வர் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாக்பூர் குழுவினரால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட இந்த சர்வர், குறைந்த மின் நுகர்வு மற்றும் குறைந்த செலவை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மென்பொருள் நிறுவனமான சோஹோ, வன்பொருள் துறையிலும் தனது தடத்தை பதித்துள்ளது.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 131 132

AD's



More News