25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 13, 2026

ஓமன்-குஜராத் ஆழ்கடல் எரிவாயு குழாய் திட்டம்: இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்திற்கான வழி!

🌐 திட்டத்தின் பின்னணி மற்றும் முக்கியத்துவம்மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் விநியோக இடையூறுகளுக்குத் தீர்வாக, அரபிக்கடல் வழியாக ஓமன் மற்றும் குஜராத்தை இணைக்கும் 2,000 கி.மீ நீள ஆழ்கடல் எரிவாயு குழாய் திட்டம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. ₹40,000 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம், வளைகுடா பிராந்தியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நேரடி எரிசக்தி வழித்தடத்தை உருவாக்கி, இந்தியாவின் விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்யும்.⚓ மாற்று வழியின் அவசியம்: LNG vs குழாய்வழித் திட்டம். இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (LNG) தேவைகளுக்கு வளைகுடா நாடுகளையே பெரிதும் நம்பியுள்ளது.தற்போதுள்ள கடல்சார் கப்பல் வழித்தடங்களை விட, இக்குழாய்வழித் திட்டம் மூலத்திலிருந்து நேரடியாக எரிவாயுவை வழங்கும் என்பதால் நம்பகத்தன்மை அதிகம்; போக்குவரத்துச் செலவும் குறையும்.🏗️ தொழில்நுட்ப சவால்களும் தற்போதைய நிலையும்.: கடல் மட்டத்திற்குக் கீழே 3,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் அமையவுள்ளதால், இது உலகின் மிக ஆழமான குழாய்வழித் திட்டங்களில் ஒன்றாக இருக்கும். இதற்கு அதிநவீன பொறியியல் தீர்வுகள் தேவை. கடந்த 30 ஆண்டுகளாக அதிக செலவு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் முடங்கியிருந்த இத்திட்டத்தை SAGE (South Asia Gas Enterprise) நிறுவனம் கடல் தரைத்தள ஆய்வுகள் மூலம் மீண்டும் புதுப்பித்துள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் இத்திட்டத்தின் விரிவான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கும் பணியை GAIL, IOCL மற்றும் Engineers India Ltdஆகிய பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது.⚠️ எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள். கடலடியின் அதீத அழுத்தம் காரணமாக உள்கட்டமைப்பை நிறுவுவதும், கசிவு போன்ற கோளாறுகளைப் பராமரிப்பதும் கடினமானது.ஆரம்பக்கட்ட மதிப்பிடலான ₹40,000 கோடி, திட்ட தாமதங்களால் அதிகரிக்கக்கூடும். நீண்டகால எரிவாயு விலை மற்றும் சந்தை தேவையைப் பொறுத்தே இதன் வணிக ரீதியான வெற்றி அமையும். ஓமன்-குஜராத் திட்டத்தின் முந்தைய பதிப்புகள் போதிய வருவாய் இல்லாததால் தோல்வியடைந்தன. தற்போதைய சந்தை நிலவரம் சாதகமாக இருந்தாலும், முதலீட்டாளர்களை ஈர்க்க நிலையான வருமானத்திற்கான நீண்ட கால விநியோக ஒப்பந்தங்கள் மற்றும் தெளிவான நிதிப் பகிர்வுத் திட்டங்கள் அவசியமாகும். இது வெறும் எரிவாயு இறக்குமதித் திட்டம் மட்டுமல்ல; இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை பலப்படுத்தி, வளைகுடா நாடுகளுடனான பொருளாதார உறவை ஆழமாக்கும் ஒரு பரந்த முயற்சியாகும். ஒரே ஒரு கடல் வழித்தடத்தைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் பலவீனத்திற்கு இது சிறந்த தீர்வாக அமையும். வருங்காலத்தில் உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கு ஏற்ப, இதே உள்கட்டமைப்பை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களைக் கடத்தவும் பயன்படுத்த முடியும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். இத்திட்டத்தின் பின்னணியில் உள்ள காரணம் வலுவாக இருந்தாலும், 30 ஆண்டு கால விவாதங்களுக்குப் பிறகு, இதன் தொழில்நுட்ப மற்றும் நிதிச் சவால்களை ஒன்றிணைத்து எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

Jun 13, 2026

மத்திய அரசின் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு இணையத்தில் விண்ணப்பித்தல் எப்படி ?

1.அதிகாரப்பூர்வ NHA இணையதளத்திற்கு செல்லவும். 2.Beneficiary என்பதை தேர்வு செய்யவும். 3. மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் Login செய்யவும். 4.மாநிலம் - Tamil Nadu தேர்வு செய்யவும். 5. மாவட்டம் மற்றும் PMJAY திட்டத்தை தேர்வு செய்யவும். 6.ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை உள்ளிடவும். 7.உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா  என சரிபார்க்கவும். 8.e-KYC என்பதை கிளிக் செய்யவும். 9. ஆதார் OTP மூலம் சரிபார்ப்பை முடிக்கவும். 10.ஆயுஷ்மான் அட்டையை Download செய்து கொள்ளலாம்.

Jun 12, 2026

உள்நாட்டு வன்பொருள் துறையில் கால்பதிக்கும் ஜோஹோ (Zoho): 'நாது லா' (Nathu La) சர்வர் அறிமுகம்!

முழுமையான தொழில்நுட்ப அடுக்கை உருவாக்கும் நோக்கில், ஜோஹோ நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தனது முதல் சர்வர் தளமான 'நாது லா'-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முழுமையான அறிவுசார் சொத்துரிமையுடன் உள்நாட்டு சர்வர் தளத்தை வடிவமைத்த மிகச்சில நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ இணைந்துள்ளது.முக்கிய அம்சங்கள் & தயாரிப்பு விவரங்கள்:ஆராய்ச்சி & மேம்பாடு: ஜோஹோவின் நாக்பூர் மையத்தில், உள்ளூர் திறமையாளர்களைக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.செயல்திறன்: 'Intel Xeon 6' செயலிகளை அடிப்படையாகக் கொண்ட இச்சரவர், வழக்கமான சர்வர்களை விட 12-18% குறைவான மின் நுகர்வு மற்றும் 20-30% குறைவான மொத்த பராமரிப்புச் செலவைக் (TCO)கொண்டது. இது AI மற்றும் தரவு சேமிப்புப் பயன்பாடுகளுக்கு ஏற்றது.மேக் இன் இந்தியா: இதன் சேஸிஸ் மற்றும் உலோகப் பாகங்கள் புனே, நாக்பூரிலும், PCB அசெம்பிளி சென்னையிலும் செய்யப்பட்டுள்ளன. நாக்பூர் குழுவில் 90% பேர் புதியவர்கள் (Freshers) என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்காலத் திட்டம்: உலகெங்கும் 20 தரவு மையங்களைக் கொண்டுள்ள ஜோஹோ, தனது இந்திய தரவு மையங்களில் முதற்கட்டமாக 1,000 'நாது லா' சர்வர்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் Zoho Mail, Zoho Meeting போன்ற பயன்பாடுகளுக்காக இதன் எண்ணிக்கையை 2,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. தற்போதைக்கு இச்சர்வடர்களை வணிகரீதியாக விற்கும் எண்ணம் நிறுவனத்திற்கு இல்லை என ஜோஹோ தெரிவித்துள்ளது.

Jun 11, 2026

ப்ரோசோன் மால் பெயர் மாற்றப்படுகிறதா?

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள ப்ரோசோன் மாலின் உரிமங்களை, ரஹேஜாகார்ப்பின் இனோர்பிட் மால்ஸ் கைப்பற்றியுள்ளது. ரூ.1300 கோடிக்கு அவுரங்காபாத் மற்றும்கோயம்புத்தூரிலுள்ள இரு மால்களை வாங்கியுள்ளது இனோர்பிட் மால்ஸ். விரைவில்,பத்திரப்பதிவு வேலைகள் முடிந்து பெயர் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ..

Jun 11, 2026

ROBOT PHONE.( ரோபோ ஸ்மார்ட்போன் 9X ) )

உலகத்தின் முதல் 9X;ரோபோ ஸ்மார்ட்போன்9X; நடப்பாண்டின் 3ம் காலாண்டில் (ஜூலை-செப்.)விற்பனைக்கு வரும் என Honor அறிவிப்பு!சினிமா கேமராக்களுக்கு புகழ்பெற்ற ARRI நிறுவனத்துடன் இணைந்து, இதில் இமேஜிங் சிஸ்டம்உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஹாலிவுட் தரத்திலான வீடியோவை எடுக்க முடியும் என கூறப்படுகிறது.

Jun 10, 2026

🦁 தமிழகம் முழுவதும் இன்று முதல் 70 'சிங்கப்பெண்' போலீஸ் படைகள் இயக்கம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று (புதன்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வருகிறது. சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 70 சிங்கப்பெண் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.🛡️ சென்னை மற்றும் பிற நகரங்களில் படைப் பிரிவு விவரம்:சென்னை மாநகரம்: 12 சிங்கப்பெண் படைகள் அதிரடி ரோந்து பணியில் ஈடுபடும்.தாம்பரம் & ஆவடி கமிஷனரகம்: தலா 4 படைகள் வீதம் மொத்தம் 8 படைகள்.இதர போலீஸ் கமிஷனரகங்கள்: தலா 2 படைகள் வீதம் இயங்கும்.மாவட்டங்கள்: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒரு சிங்கப்பெண் படை பிரத்யேகமாகச் செயல்படும்.⏱️ 24 மணி நேர சுழற்சி முறைப் பணி:இந்தச் சிறப்புப் படையில் முழுக்க முழுக்க பெண் போலீசாரே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கென பிரத்யேகமாக 140 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (Shift System) ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.ஆண் போலீசாரின் பங்களிப்பு: பெண் போலீசாருக்கு உதவியாக கார் ஓட்டுநர் (Driver) போன்ற சில துணைப் பணிகளில் மட்டுமே ஆண் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.🛸 நவீன தொழில்நுட்பமும் அவசர உதவிகளும்:பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க இந்தத் திட்டத்தில் சில முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.'டிரோன்' ரோந்து முறை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ள இடங்களைக் கண்காணிக்க நவீன 'டிரோன்' (Drone) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தொடர்பு எண்கள்: பாதிக்கப்பட்ட பெண்கள் சிங்கப்பெண் படையை நேரடியாகத் தொடர்பு கொள்ளத் தனி வாட்ஸ்-அப் குழுக்களும், செல்போன் எண்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.அவசர உதவி: தற்காலிகமாகப் பெண்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்குப் போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100 என்ற எண்ணை வழக்கம் போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்.💬 "பெண்களின் கனவை உணர்ந்த அரசு" – முதல்வர் நெகிழ்ச்சிஇத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் விஜய்: "நமது வீட்டுப் பெண்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் என்ன என்பதை நம்முடைய அரசு நன்றாகப் புரிந்து வைத்துள்ளது. அதனைப் படிப்படியாக நிறைவேற்றுவோம். பெண்களுக்கான மரியாதை மற்றும் கண்ணியத்திற்கு முதல் முன்னுரிமை அளிக்கும் தொலைநோக்குப் பார்வையும் குறிக்கோளும் ஒரு அரசுக்கு இருந்தாலே போதும், போகிற பாதை சரியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அரசுதான் நம்முடைய அரசு," என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.சிங்கப்பெண் ரோந்து வாகனத்தை ஓட்டிய முதல்-அமைச்சர்.சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கான ரோந்து வாகனங்களை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது அவர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையில் இடம் பெற்றுள்ள 3 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களோடு ரோந்து வாகனத்தை தானே ஓட்டி சென்று மைதானத்தை ஒரு 'ரவுண்டு' வந்தார். முறைப்படி 'சீட்' பெல்ட் அணிந்து, கம்பீரமாக அவர் ரோந்து வாகனத்தை ஓட்டி சென்ற காட்சியை பார்த்து பார்வையாளர்கள் ஆரவாரமாக கைதட்டி வரவேற்றனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்து பேசியதுதான் முதல்-அமைச்சர் விஜய்யின் முதல் அரசு விழா ஆகும். ஏற்கனவே சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ‘ஜீப்' வாகனத்தை முதல்-அமைச்சர் விஜய் ஓட்டி பார்த்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jun 10, 2026

தமிழகத்தில் 'தங்க நாணய' விற்பனை நிறுத்தம் – நகைக்கடை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

இந்தியாவின் அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் தங்க நாணயங்கள் (Gold Coins) விற்பனையை உடனடியாக நிறுத்துவதாக தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளனம் (Tamil Nadu Jewelers Federation) அதிரடியாக அறிவித்துள்ளது.மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, தங்கம் சேமிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தற்போது பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.🚫 விளம்பரங்களுக்கும் தடை:தங்க நாணய விற்பனை நிறுத்தத்தோடு சேர்த்து, சம்மேளனம் மேலும் சில முக்கிய முடிவுகளையும் அறிவித்துள்ளது:நகைக்கடைகள் மூலம் நடத்தப்படும் நகைச் சேமிப்புத் திட்டங்கள் (Jewellery Savings Schemes) தொடர்பான விளம்பரங்கள் நிறுத்தப்படும்.தங்க முதலீட்டை ஊக்குவிக்கும் அனைத்து விதமான ஊக்குவிப்பு விளம்பரங்களும் (Promotional Ads) உடனடியாக வாபஸ் பெறப்படும்.✉️ பிரதமருக்கு கடிதம்:இது தொடர்பாக தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளனம், பாரதப் பிரதமர் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகள் குறித்தும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் தங்களின் முழு ஆதரவு இருக்கும் என்றும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க நாணயங்களாக வாங்குவது நுகர்வோரின் முதலீட்டு நோக்கமாக இருக்கும் வேளையில், இந்தத் திடீர் தடை நகையாக வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Jun 10, 2026

, LA Cinema மல்டிப்ளெக்ஸ் மற்றும் Westside வருவதால் அந்த பகுதி வணிக மையமாக வளர்கிறது.

TATAWestside பிராண்டு, தனது இரண்டாவது ஸ்டோரை திறக்க இருக்கிறது மொத்தம்G+2 மாடி கொண்ட,28,500 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஸ்டோர், காட்டூர்-திருவெரும்பூர் பாதையை இன்னும் பிஸியானதாக மாற்றும்!ஏற்கனவே உள்ள வணிக வளாகங்களுடன் சேர்ந்து,LACinema மல்டிப்ளெக்ஸ் மற்றும்Westside வருவதால் அந்த பகுதி வணிக மையமாக வளர்கிறது.

Jun 10, 2026

ஐரோப்பாவில் "கால பைரவா"! AI போர் விமானத்தை ஐரோப்பாவில் தயாரிக்கவுள்ளது பெங்களூரை சேர்ந்த FWDA நிறுவனம்.

" இந்தியாவின் பாதுகாப்பு துறை தயாரிப்பில் புதிய மைல்கல்லாக, தனது அதிநவீன "கால பைரவா" AI போர் விமானத்தை ஐரோப்பாவில் தயாரிக்கவுள்ளது பெங்களூரை சேர்ந்த FWDA நிறுவனம்.. F-16 போர் விமான தயாரிப்போடு தொடர்புடைய போர்ச்சுகல் நாட்டின் SKETCHPIXEL LDA நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து.. சுமார் 3,000 கி.மீ தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானம், NATO நாடுகளின் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும் என தகவல்..

Jun 10, 2026

500 மடங்கு வேகம்.

விண்வெளி ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, தற்போதைய சிப்களை விட 500 மடங்கு வேகமாக இயங்கும் அதிநவீன Processor-ஐ உருவாக்கி நாசா அசத்தல்.பூமியிலிருந்து கட்டளைகள் வரும் வரை காத்திருக்காமல், விண்வெளியில் ஏற்படும் சிக்கல்களுக்கு விண்கலன்கள் சுயமாக முடிவெடுத்து இயங்க இந்த Processor உதவும் என தெரிவிப்பு.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 131 132

AD's



More News