சிரியஸ் (Ceres) என்பது செவ்வாய் கோளுக்கும், வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குறுங்கோள், அமெரிக் காவின் நாசா அனுப்பிய டான் (Dawn) வின் கலம் தந்த தகவல்களில் இருந்து, ஒரு காலத்தில் இந்தக் குறுங்கோளில் 90 சதவீதம் பனிக்கட்டிகள் இருந்துள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வட, தென் அமெரிக்காவில்'ஹம்மிங்பேர்டு' பறவை அதிகம் காணப்படுகின்றன.இது இடதுபுறம், வலதுபுறம், மேலே கீழே எனஅனைத்து கோணங்களிலும் பறக்கும். மேலும் மற்ற பறவைகளிடம் இல்லாத சிறப்பம்சமாக, இப்பறவை பின்புறமாகவும் பறக்கும். ஆயுட்காலம் 3,5 ஆண்டுகள். இதில்366வகைகள் உள்ளன. இதன் நீளம்7.5 செ.மீ.-13 செ.மீ. இதன் எடை1824 கிராம். இவை தன் இறகுகளை அசைப்பதன் மூலம் ஒலி எழுப்புகின்றன. விநாடிக்கு 12- 80 முறை சிறகடிக்கும்.
கடல் ராபின்கள், ஒருவகை மீன்கள். இவற்றுக்கு கால் போன்ற அமைப்பு இருக்கும். அவை கடல் தரையில் நடப்பதற்காக ஏற்பட்டவை என்றே நம்பப்பட்டு வந்தன. தற்போது, விஞ்ஞானிகள் இவை கடல் தரையில் புதைந்திருக்கும் தங்கள் இரையைக் கண்டறியவும் உதவுகின்றன என்று கண்டுபிடித்துள்ளனர்.
சுத்தியல் தலை சுறா மீன்களில் ஒரு புதிய 2 இனத்தை ப்ளோரிடா பல்கலை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸ்பைன்ரா அல்லெனி (Sphyrna alleni) என்று பெயரிடப்பட்டுள்ள இது, 1.5 மீ., நீளமே வளரும்.
திராட்சை பழத்தில் பல சத்துகள் உள்ளன. இந்நிலையில் டைனோசர் இனம் அழிந்தது, திராட்சை உற்பத்தி அதிகரிக்க உதவியது என அமெரிக்க ஆய்வு கண்டுபிடித்துள்ளது. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் எவரெஸ்ட் சிகரத்தை விட பெரிய விண்கற்கள், பூமி மீது விழுந்ததில் பூமியில் வாழ்ந்த நான்கில் மூன்று பங்கு உயிரினங்கள் அழிந்தன. இதில் டைனோசரும் ஒன்று. பெரிய விலங்கான டைனோசர் அழிவுக்குப்பின் தான் காடுகளில் திராட்சை உள்ளிட்ட பல்வேறு தாவரங்கள வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள சர்ரே பல்கலை, பிரிட்டிஷ் சூழலியல் கூட்டமைப்புடன் இணைந்து, ஆண்டுதோறும் இயற்கை ரோபாட்டிக்ஸ் போட்டியை நடத்தி வருகிறது. இயற்கையாக உள்ள தாவரங்கள், விலங்குகள் உள்ளிட் டவற்றை முன்மாதிரியாகக் கொண்டு ரோபோக்களைவடிவமைப்பதை ஊக்குவிப்பதே இந்தப் போட்டி நடத்தப் படுவதன் நோக்கம். இதில்,முதல் பரிசு பெற்றுள்ளவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு மாணவர். அப்படி என்ன வடிவமைத்தார்?தற்போது மரங்கள் வெட்டப்படுவதால், காடு களின் பரப்பளவு மிக வேக மாகக் குறைந்து வருகிறது. இதைச் சரிசெய்ய நிறையமரங்களை நடுவது அவசியம். மனிதர்கள் நேரடியாகச் சென்று, குழி தோண்டி மரங் களை நடுவது சுலபமல்ல. இதைச் செய்ய ஏன் ரோபோக் ளைப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவருக்குத் தான்றியது.தற்செயலாக பாங்கோலின்ஸ் (Pangolins) எனப்படும் ஒருவகை ஏறும்புண்ணிகளை மாணவர் கண்காணித்தார்.இவை தங்கள் முன்னங் கால்களால் மண்ணைத் தோண்டி அங்கே எறும்புகளைத் தேடி உண்கின்றன. இதைப் பார்த்த மாணவ ருக்கு இதைப்போலவே ஒரு ரோபோவை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.இதன் விளைவாக பாங்கோலின் வடிவ ரோபோவை உருவாக்கினார். இவற்றைத் தொலைவில் இருந்து இயக்க முடியும். இதில் இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நகர்வதற்கு உதவும். இதன் முன்னங்கால்கள் குழி தோண்டுவதற்கு உதவுகின்றன. இதன் உள்ளே இருக்கும் தாவரத்தின் விதை பின்பகுதியிலிருந்து சரியாகத் தோண்டப்பட்ட குழியில் விழும்.இவ்வாறு விதையை விடுவிக்கும்போது சமாளித்து நிற்பதற்கு இதன் பின்னங்கால் கள், வால் உதவும்.இயற்கையைக் காக்க, இயற்கையில் இருக்கும் விஷயத்தைத் தூண்டுகோலாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த ரோபோவுக்கு முதல் பரிசு தரப்பட்டுள்ளது .
தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒளி மிகவும் முக்கியம். சூரிய ஒளியிலிருந்து தான் அவை உணவைத் தயாரிக்கின் றன. ஒரு சிறிய செடி யின் அருகில் பெரிய மரமோ பிற தாவரமோ இருந்தால், செடிக்குப் போதுமான ஒளி கிடைக்காது. அப்போது அதுஒளியை நோக்கி நகரும். சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகள் குழு, சூரிய காந்திப் பூக்கள் வளர்கின்ற முறையை ஆய்வு செய்தனர். நெருக்கமாக வளரும்போது ஒரு செடியின் நிழல் மற்றொன்றின் மீது விழும். இதைச் சூரியகாந்திச் செடிகள் புரிந்து கொள்கின்றன். தங்கள் மீதும் விழுவது தாவரத்தின் நிழலா, கட்டடங்களின் நிழலா என்பதைக் கூட அவற்றால் வேறுபடுத்திக் காண முடியும்.கட்டட நிழல் தங்களைப் பெரியளவில் பாதிக்காது என்பதும் அவற்றுக்குத் தெரிந்துள் ளது. அதே நேரத்தில் தாவரத்தின் நிழல் பட் டால் வேறு திசைகளில் வளர்கிறது.ஒரு மேடையில் கூட்டமாக ஆடுபவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் மறைக்காதபடி வரிசைப்படுத்திக் கொள்கிறார்களோ அதுபோல் சூரியகாந்திப் பூக்கள் கூட்டமாக வளரும் போது ஒன்றை ஒன்று மறைத்துக் கொள்ளாமல் சூரிய ஒளி அனைத்து செடிகளுக்கும் கிடைக்கும்படி வளர்கின்றன இதனால் ஒரு குறிபிட்ட இடத்தில் வளரும் அனைத்துச் செடிகளும் பயன்பெறுகின்றன.
நல்லா வாழ்ந்தால், பத்து பேர் பொறாமைப் படுவான்.கஷ்டப்பட்டால்,பத்து பேர் ஏளனமாக பேசுவான்.எப்படி வாழ்ந்தாலும் குறை சொல்லும் மனிதர்கள் மத்தியில்,அடுத்தவன் என்ன பேசுறான்னு பார்க்காமல்,அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு போயிட்டே இருக்கணும்.
டென்மார்க் நாடு சுற்றுச் சூழலை மாசு படுத்தாத உலகின் முதல் அமோனியா தயாரிப்பு மையத்தைத் திறந்துள்ளது. இது முழுக்க முழுக்க சூரிய, காற்றாலை மின்சார ஆற்றலைக் கொண்டு இயங்கும்.
குழந்தைகள் கொழுகொழு வென இருந்தால் யாருக்குத் தான் பிடிக்காது? கன்னத்தைக் கிள்ளுவதும், கொஞ்சுவதும் என அன்புத் தொல்லை செய்வார்கள். இது மனிதக் குழந்தைகளுக்கு மட்டும் நடப்பதல்ல, விலங்குகளுக்கும் நடக்கும். இப்படித்தான் ஒரு குண்டு பென்குயின் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ளது.தென் துருவத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே வாழ்பவை பென்குயின்கள். பறக்க முடியாத இந்தப் பறவைகள் இரு கைகளை அசைத்துப்பனியில்நடந்துசெல்வதேஅழகாகத்தான்இருக்கும்.ஆஸ்திரேலியாவின்மெல்போர்ன்நகரில்உள்ளகடல்வாழ்உயிரினங்கள் சரணாலயத்தில் ஜனவரி 30, 2024 அன்று அவகோடா காய் அளவே உள்ள முட்டையிலிருந்து பிறந்தது பென்குயின். பெஸ்டோ எனும் ஒன்பதே மாதங் களில் மடமடவென வளர்ந்து 22.5 கிலோ எடையை அடைந்து விட்டது.தினமும் 25 மீன்கள் உண்கிறது. பொதுவாக இதன் இனத்தை சேர்ந்த பென்குயின்கள் 18 கிலோ வரையே வளரும். அதன் அதீத எடை காரணமாக மிகவும் பரும னான தோற்றதைப் பெற்றுள்ளது. தவிர பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் பென்குயின்களுக்கு உடல் முழுக்க முடிகள் நிறைந் திருக்கும். இது மிகச் சிறியவயதிலேயே உயரமாகவும்,பருமனாகவும் வளர்ந்து விட்டதால் பார்ப்பதற்கு "டெடி பியர் " பொம்மை போல் அழகாக உள்ளது.எனவே இதைபார்ப்பதற்கு பல ரசிகர்கள் சரணாலயத்திற்கு வருகின்றனர். இன்ஸ்டா, யு டியூப், மீம்ஸ் என அனைத்திலும் வீடியோ பதிந்து எழுதி வருகின்றனர். இதனால் இதற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.