பாட்மிண்டன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 16 வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 21வது இடத்திலுள்ள தென் கொரியாவின் காயுன் கிம்மை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 13-21 என மோசமாக இழந்தார். முடிவில் சிந்து 21-19, 13-21, 13-21 என்ற செட் டில் அதிர்ச்சி தோல்விய டைந்தார். மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் டில்லியில் . மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளம், முதன் முறையாக டில்லியில் நடக்கிறது நேற்று ஆண்களுக்கான 400 மீ., டி 54 பிரிவு (வீல் சேர் ரேசிங்) போட்டியின் பைனல் நடந்தது. இந்தி யாவின் ஜோதி மணிகண்டன் ஒரு நிமிடம், 04.56 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த இவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரர் மனோஜ்குமார் சபாபதி (தமிழகம்), ஒரு நிமிடம், 04.85 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.இருவர் மட்டுமே பங்கேற்ற பார்வைத்திறன் குறைந்த, பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லலிதா (ஒரு நிமிடம், 07.59 வினாடி), ஷாலினி (ஒரு நிமிடம், 21.53 வினாடி ) தங்கம், வெள்ளி கைப்பற்றினர். ஸ்குவாஷ்இந்திய ஓபன் தொடர் மும்பையில் மார்ச் 24-28ல் நடக்க உள்ளது. இதில் வேலவன், அனாஹத் சிங், ரமித் டான்டன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.உலக குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 4 பதக்கம், ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு, 12வது சீசன் இத்தாலியில், 102 நாடுகளை சேர்ந்த, சுமார் 1500 அறிவுசார் குறைபாடு உள்ள வீரர், வீராங்கனைகள், 8 வகை யான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 30 விளையாட்டு நட்சத்திரங்கள், 19 பயிற்சியாளர் குழுவினர் என, 49 பேர் சென்றுள்ளனர்.இதன் 'ஸ்னோபோர் டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்-எப்13' பிரிவு பைனலில் இந்திய வீரர் சமீர் யாதவ், தங்கம் வென்றார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்மித், நியூசிலாந்தின் பிலிப்ஸ் பெயர்கள்பரிந்துரை செய்யப்பட்டன. தற்போது பிப்ரவரி மாதத்தில் 5 போட்டியில் 406 ரன் எடுத்த சுப்மன் கில் (சராசரி 101.50 ரன்), சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மூன்றாவது முறை சிறந்த வீரர் ஆன முதல் இந்தியர் என பெருமை பெற்றார்.
ரோகித் சர்மா இந்திய அணி கேப்டன் 37. கடந்த 2024ல் 'டி-20' உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி., தொடரில் இந்தியாவுக்கு இரண்டு கோப்பை வென்று தந்தார். 37 வயது ஆன போதும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும் ரோகித், ஓய்வு பெறப்போகிறார் என தொடர்ந்து செய்தி' இதை மறுத்த ரோகித்,' இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம்." என்றார். இவரது திறமைக்கு சான்று ஒருநாள் அரங்கில் மூன்று இரட்டை சதம் அடித்தவர் ரோகித் (264, 209, 208).
ஐ.சி.சி., உலக கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையில், 1983 முதன் முதலில் இந்தியா கோப்பை வென்றது. அடுத்து தோனி தலைமையில் இந்திய அணி 2007ல் 'டி-20', 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியது.ரோகித் தலைமையில் 2024ல் 'டி-20' உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி வசப் படுத்தியது இந்தியா. இந்த அணிகளில் விளையாடிய வீரர்களை கொண்டு, இந்தியாவின் 'சிறந்த கனவு லெவன்' அணியை, கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தேர்வு செய்தார். தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
டென்னிஸ்இந்தியன் வெல்ஸ் கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் யூகி பாம்ப்ரி (இந்தியா), கோரன்சன் (சுவீடன்), ஜெய்லின்ஸ்கி (போலந்து), சாண்டரை (பெல்ஜியம்) வீழ்த்தி, 2வது சுற்றுக்கு முன்னேறினர். பாட்மின்டன் இந்தியாவின் உலக பாட்மின்டன் ரேங்கிங் பட்டியலில் சிந்து (16வது இடம்), லக்சயா சென் (15), சாத்விக் - சிராக் ஜோடி (12) பின்தங்கினர். திரீசா ஜாலி - காயத்ரி ஜோடி 9வது இடம் பிடித்தனர். சர்வதேச வாள் சண்டை போட்டி பவானி தேவி .சர்வதேச வாள் சண்டை போட்டி கிரீசில் நடக்கிறது. பெண்களுக்கான சபெர் பிரிவில் இந்தியாவின் பவானி தேவி பங்கேற்றார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், முதற்கட்ட போட்டியில் ஜப்பானின் ஒஜாகியை 22, சந்தித்தார். 2022ல் உலக சாம்பியன், 2024பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஒஜாகி, சவால் கொடுத்தார்.இருப்பினும் பவானி தேவி 15-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். லீக் சுற்றில் 6 போட்டியில் 4ல் வெற்றி பெற்ற இவர், மூன்றாவது இடம் பிடித்தார்
பீஹாரின் பாட்னாவில் தேசிய யூத் தடகளசாம்பியன்ஷிப் 20வதுசீசன், நடக்கிறது.இரண்டாவதுநாளானநேற்று, ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. தமிழகத்தின் நிவேத், 14.35 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஜார்கண்ட்டின் சாஜித் (14.421), கேரளாவின் பஜலுல் ஹக் (14.429) வெள்ளி, வெண்கலம் வென்றனர். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் எட்வினா (55.86 வினாடி) தங்கம் கைப்பற்றினார்.
துபாயில் சாம்பியன்ஸ் டிராபி பைனல் நடந்தது. இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ரோகித் சர்மா 37, ஒருநாள் அரங்கில் இருந்தும் விடை பெறுவார் என எதிர் பார்க்கப்பட்டது.ரோகித் கூறுகையில்," எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. ஒருநாள் போட்டியில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். வரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது," என்றார். கோலி கூறுகையில்,. இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அடைந்த ஏமாற்றத்துக்குப் பின், தற்போது பெரிய தொடரில் சாதித்துள்ளோம்,'' என்றார். நான்காவது இடத்தில் களமிரங்கிய ஸ்ரேயாஸ் இத்தொடரில் அதிக ரன் (243) எடுத்த இந்திய வீரரானார். கேப்டன் ரோகித் கூறுகை யில், "போட்டியின் 'மிடில்' சூழலில், சிறப்பாக செயல்பட்டார் ஸ்ரேயாஸ். சக வீரர்களுடன் இணைந்து 'பார்ட்னர்ஷிப்' அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்று 'சைலண்ட் ஹீரோ' ஸ்ரேயாஸ்," என்றார். ஐ.சி.சி.,அரங்கில் இரண்டு அல்லது அதற்கு மேல்கோப்பை வென்ற 2வது இந்திய கேப்டன் ஆனார் ரோகித். இவரது தலைமையிலான இந்திய அணி, 'டி-20' உலக கோப்பை (2024), சாம்பியன்ஸ், டிராபி (2025) வென்றது. தோனி வழி நடத்திய இந்திய அணி 2007ல் 14-20 உலக கோப்பை, 2011 உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என 3 முறை சாம்பியன் ஆனது கடந்த 2024ல் 'டி - 20' உலக கோப்பை வென்ற போது, இந்திய வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து, பிரபோர்ன் மைதானம் வரை திறந்தவெளி பஸ்சில் வெற்றி ஊர்வலம் சென்றனர். இம்முறை பிரபோர்ன் மைதானத்தில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தவிர மார்ச் 22ல் ஐ.பி.எல்., தொடர் துவங்க உள்ளது. இதனால் துபாயில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனித்தனியாக தாயகம் திரும்புகின்றனர். வெற்றி பவனி இருக்காது எனத் தெரிகிறது. பாகிஸ்தான், துபாயில், சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடந்தது. இதில் சிறப் பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து, 12 பேர் கொண்ட அணியை ஐ.சி.சி., வெளியிட்டது. இந்த அணியில் இந்தியா சார்பில் அதிக பட்சமாக 6 பேர் இடம் பெற்றனர். கோலி, ஸ்ரேயாஸ், ராகுல், ஷமி, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தேர் வாகினர். விக்கெட் கீப்பருக்கான இடத்தை ராகுல் பிடித்தார். பைனலில், ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடம்கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல கைகொடுத்த 9 டிராபி விக்கெட் சாய்த்த வருண் சக்ரவர்த்தி.
மும்பையில், சி.சி.ஐ., ஸ்னூக்கர் கிளாசிக் தொடர் நடந்தது. இதன் பைனலில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ். பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, இஷ்பிரீத் சிங் சதா மோதினர்.துவக்கத்தில் 2-6 என பின்தங்கிய அத்வானி, பின் எழுச்சி கண்டு தொடர்ச்சியாக 6 'பிரேம்'களை கைப்பற்றினார்.முடிவில் அத்வானி 8-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.28 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அத்வானி, தொடர்ந்து 3வது முறையாக (2023, 2024, 2025) கோப்பை வென்றார். 'நடப்பு தேசிய, ஆசிய சாம்பியன்' அத்வானிக்கு, கோப்பையுடன் ரூ. 3.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடந்தது.தமிழகத்தில் இருந்து 440 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் (45 வயது பிரிவு) மயில் வாகனன் (போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.,), சுரேஷ், ராஜேஷ், மோகன்குமார் இடம் பெற்ற தமிழக அணி தங்கம் கைப் பற்றியது.பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் (45 வயது பிரிவு) அருள்மொழி சுகன்யா ரவிச்சந்திரன், ஸ்ரீலேகா, பிந்து கணேஷ் இடம் பெற்ற தமிழக அணி தங்கம் வென்றது.35 வயதுக்கு மேற் பட்டோருக்கான பிரிவில் தமிழகத்தின் ஜேசு எஸ்தர் ராணி, 4x400 மீ., தொடர் ஓட்டம், 4X100 ., தொடர் ஓட்டத்தில் தங்கம் கைப்பற்றிய அணியில் இடம் பெற்றார். தவிர 'டிரிபிள் ஜம்ப்' போட்டி யில் வெள்ளி, நீளம் தாண்டுதலில் வெண்கலம் கைப்பற்றினார்.
, பாரா தடகள கிரான்ட்ப்ரீ தொடர், டில்லி நேரு விளையாட்டு அரங்கில், இந்தியாவில் முதல் முறையாக இன்று துவங்குகிறது. மூன்று நாள் நடக்கும் தொடரில், பாரா வீல் சேர் ரேசிங், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த 283 பாரா வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்னர். இந்தியா சார்பில் 167 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.தமிழகம் சார்பில் ரமேஷ், கீர்த்திகா உட்பட 12 பேர் கலந்து கொள் கின்றனர். இவர்களுக்கு தலா 65,000 ரூபாய் வீதம், 10.40 லட்சம் ரூபாய் நிதி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி வழங்கி உள்ளது.