மார்ச் 22 கோல்கட்டா - பெங்களூருகோல்கட்டாமார்ச் 23 ஐதராபாத் - ராஜஸ்தான்ஐதராபாத்*மார்ச் 23 சென்னை - மும்பைசென்னைமார்ச் 24 டில்லி - லக்னோவிசாகப்பட்டனம்மார்ச் 25 குஜராத் - பஞ்சாப்ஆமதாபாத்மார்ச் 26 ராஜஸ்தான் - கோல்கட்டாகவுகாத்திமார்ச் 27 ஐதராபாத் - லக்னோஐதராபாத்மார்ச் 28 சென்னை - பெங்களூருசென்னைமார்ச் 29 குஜராத் - மும்பை ஆமதாபாத்மார்ச் 30 டில்லி - ஐதராபாத்விசாகப்பட்டனம்மார்ச் 30 ராஜஸ்தான் - சென்னைகவுகாத்திமார்ச் 31 மும்பை - கோல்கட்டாமும்பை
பி.சி.சி.ஐ., சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத் தப்படுகிறது. இதன் 18வது சீசன் நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. பைனல் வரும் மே 25ல் நடக்க உள்ளது.சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) வாங்கப்பட்ட கேப்டன் ரிஷாப்பன்ட் தான் ,லக்னோ அணியின் பலம். மிட்ஸல் மார்ஷ், மார்க்ரம், பூரன், மில்லர் என உலக தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், சாதிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே ஓவரில் முடிவு தலைகீழாக மாறும்,ஐ.பி.எல்., போட்டியில் கோப்பை வெல்லும் அணியை கணிப்பது கடினம். கடைசி பந்து வரை பதட்டப்படாமல் செயல்படும் அணிக்கே கோப்பை வசப்படும். சென்னை அணிக்காக 43 வயதிலும் 'தல' தோனி விளையாட இருப்பது சிறப்பு. ஐ.பி.எல்.,தொடர் 13 மைதானங்களில் நடக்க உள்ளது. முதன் முறையாக அனைத்து மைதானத்திலும் முதல் போட்டி துவங்கும் முன் அல்லது போட்டிக்கு இடையில் துவக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 6:00 மணிக்கு துவக்க விழா நடக்கும். இதில் பாலிவுட் நடிகை திஷா படானி, பாடகி ஷ்ரேயா கோஷல் பங்கேற்கின்றனர். ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி, இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடி வழங்கப்படும் 3, 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி தரப்படும். ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை, மும்பை முதலிடத்தில் உள்ளன. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றன.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு ரூ.58 கோடி பி.சி.சி.ஐ., பரிசு .ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் துபாயில் நடந்தது. பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை சாய்த்து,3வது முறையாக கோப்பை, வென்றது.இதையடுத்து ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணிக்கு ரூ. 58 கோடி பரிசு வழங்குவதாக, இந்திய கிரிக் கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது.
நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று மார்ச் 25ல் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் உலகத்தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி, 162வது இடத்திலுள்ள மாலத்தீவுக்கு எதிராக நட்பு போட்டியில் மோதியது.இப்போட்டி, மேகா லயாவின் ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத் தில், முதன் முறையாக நடந்தது. ஓய்வுக்குப் பின் நேற்று மீண்டும் வந்த சுனில் செத்ரி, கேப்டனாக களமிறங்கினார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தவிர 2021க்குப் பின் மாலத்தீவு அணிக்கு எதிராக களமிறங்கினார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு 2வது சீசன்டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு 2வது சீசன் இன்று முதல் மார்ச் 27 வரை நடக்கிறது. இதில் 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தட களம், வில்வித்தை, பவர்லிப்டிங், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் என 6 வகையான விளையாட்டு நடத்தப்படுகிறது. இதற்கான போட்டிகள் டில்லியில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்கின்றன. இன்று, டில்லியில் உள்ள இந்திரா உள்ளரங்கு மைதானத்தில் துவக்க விழா நடக்கிறது. பாராலிம்பிக்' கில் இந்தியாவுக்கு 9 தங்கம் உட்பட 29 பதக்கம் கிடைத்தது. தேசிய துப்பாக்கிசுடுதல் போட்டி தமிழக காவல்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஒத்தி வாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி வளாகத்தில், 25வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி,நேற்று துவங்கியது. பல மாநில போலீசார், எல்லை பாதுகாப்பு படை, சி.ஆர். பி.எப்., என 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.இதன் துவக்க விழா நேற்று சென்னை, ஊன மாஞ்சேரியில் உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் நடந்தது. மும்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப் பட்டார்.மும்பை, மார்ச் 20-சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்கும் மும்பை அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப் பட்டார்.சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22 ல் நடக்க உள்ள ஐபி எல்., லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். சமீபத்தில்இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றிருந்தது.செஸ் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோண வள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 4வது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஆஸ்திரியாவின் பெடெல்காமோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 27வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். தடகளம்இந்திய ஓபன் எறிதல் போட்டிக்கான 4வது சீசன் நவி மும்பையில், இன்று துவங்குகிறது. ஈட்டி எறிதலில் இந்தியாவின் ரோகித் யாதவ், ஷிவ்பால் சிங், சாஹில் சில்வால் பங்கேற்கின்றனர்.
இந்திய வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மாற்றுத்திறனாளிக்கான பாராலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற கூறுகையில்,"பாரா கேலோ இந்தியா விளையாட்டு எங்களது வளர்ச்சிக்கு உதவுகிறது,"என்றார்.
கிரிக்கெட்பி.சி.சி.ஐ., கட்டுப்பாடு - "தொடரின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் இருப்பது அவசியம் ,இந்திய ஜாம்பவான் கபில்தேவ் கூறுகையில்,. அணியின் நலனும் முக்கியம். சமநிலையை பின்பற்ற வேண்டும்," என்றார்.ஷபாலி'ஒன் டே டிராபி' தொடர் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பெண்களுக்கான (23 வயது) தொடர் நடத் தப்படுகிறது. கவுகாத்தியில் நடந்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் கர்நாடகா, ஹரியானா மோதின. 'டாஸ்' வென்ற ஹரியானா கேப்டன் ஷபாலி வர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். ஹரியானா அணி 42 ஓவரில் 219/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
கால்பந்து: 2027ல்சவுதி அரேபியாவில்ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று இம் மாதம் நடக்க உள்ளது. மொத்தம் 24அணிகள்,ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,போட்டிகள் நடக்கும், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலாஇரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி'பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. மார்ச் 25ல்தனது முதல் போட்டியில் 185 வதுஇடத்திலுள்ள வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.தேசிய பாரா பவர்லிப்டிங்22வது சீனியர், 17வது ஜூனியர் தேசிய பாரா பவர் லிப்டிங் சாம்பின்ஷிப் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் நடந்தது.தமிழகம், குஜராத், ஹரியானா உட்பட 28 நிலத்தின் 280க்கும் மற்பட்ட வீரர், ராங்கனைகள் பங்கேற்றனர்.பெண்களுக்கான சீனியர் 67 கிலோ பிரிவில் தமிழகத்தின் கஸ்தூரி, தங்கம் - அகிலா வெண்கலம் வெ ன்றனர். சீனியர் 86கிலோ பிரிவில் அருண் மொழி தங்கம் கைப்பற் றினார். ஆண்கள் ஜூனியர் 88 கிலோ பிரிவில் மகேஷ்வரன், 72 கிலோ பிரிவில் மனோவா தங்கம் கைப்பற்றினர்.ஹாக்கிதேசிய ஹாக்கி லீக் போட்டி ராஞ்சியில் நடந்த பெண்கள் ஹரியானா அணி, மணிப்பூரை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஒடிசா அணி, பெங்காலை 1-0 என வென்றது.
பெண்களுக்கான கிராண்ட ப்ரி தொடர் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே) சார்பில் நடக் கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் திவ்யா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ராவைஇதன் மூன்றாவது சுற்றில் சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையா டிய திவ்யா, போட்டியின் 41 வது நகர்த்தல் 'டிரா' செய்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, சீனாவின் ஜு ஜினரை எதிர்கொண்டார். கருப்புநிற காய்களுடன் ஹரிகா விளையாடினார். இப் போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மூன்று சுற்று முடிவில் சீனாவின் ஜூ ஜினர் (2.5 புள்ளி) உள்ளார். முதலிடத்தில் உக்ரைனின் அனா முஜிசுக் (2.0), கிரீ சின் ஸ்டாவ்ரூலா (2.0) அடுத்த இரண்டு இடங் களில் உள்ளனர். இந் தியாவின் ஹரிகா (1.5) 4. திவ்யா (1.5) 7வது இடங்களில் உள்ளனர்.
'சுவிஸ் ஓபன்சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் இன்று துவங்குகிறது. இந்திய நட்சத்திரங்களுக்கு ராசியான இத்தொடரில் இம்முறை பெண்கள் ஒற்றையரில் சிந்து, மாளவிகா, ஆகர்ஷி, ரக்சிதா, அனுபமாநேரடியாக முதல் சுற்றில் களமிறங்குகின்றனர். கடந்த வாரம் ஆல்இங்கிலாந்து பாட்மின்டனில் முதல் சுற்றில் தோல்வியடைந்தார் சிந்து. இம்முறை தனக்கு ராசியான சுவிட்சர்லாந்து மண்ணில் களிமிறங்குகிறார் சிந்து. கடந்த 2019ல் இங்கு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இவர், 2022ல் சுவிட்சர்லாந்து தொடரில் கோப்பை வென்றார். பெண்கள் இரட்டையரில் திரீசா -காயத்ரி, பிரியா-ஆர்த்தி ஜோடியும், கலப்பு இரட்டையரில் சதிஷ் குமார் - வரியாத் ஜோடியும் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், அனுபவ பிரனாய், கிரண் ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, உலகின் 'நம் பர்-1 பெலாரசின் அரினா சபலென்கா மோதினர்.சிறப்பாக ஆடிய ஆன்ட்ரீவா 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்..