25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Apr 08, 2025

9TH APRIL விளையாட்டு போட்டிகள் .

துப்பாக்கி சுடுதல்  உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் அர்ஜென்டினாவில், பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் போட்டி நடந்தது.  ஒலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாகர், தகுதிச்  சுற்றில் 13வது இடம் பிடித்து வெளியேறினார்.  டாப் '-10' வீராங்கனைகள் பைனலுக்கு முன்னேறினர்.இதில் சிறப்பாக செயல்பட்ட 18 வயதான இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சீன வீராங்கனைகளை பின்தள்ளி முதலிடம் பிடித்தார்  244.6 புள்ளி எடுத்த இவர், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.சீனாவின் வெய் குயான்(241.9), ரான்ஜின் ஜியாங்(211.0)வெள்ளி,வெண்கலப் பதக்கம் வென்றனர். இதுவரை 5 பதக்கம் வென்ற இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் தொடர் சீனாவில் முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா - துருவ் ஜோடி வெற்றி பெற்றது.சீனாவில் பாட்மின்டன் ஆசியசாம்பியன்ஷிப் 42வது சீசன் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி, 15-21, 21-12, 21-11 ஹூ பங்ரான், செங்சு இன்ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.மற்றொரு போட்டியில் இந்தியா வின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி,21..9..,21..11 என இலங்கையின் துலித், பாஞ்சாலி ஜோடியை வென்றது.

Apr 07, 2025

7th APRIL IPL MATCH ,MUMBAI - BANGALORE

APRIL ,7-ம் தேதி மும்பையில், பெங்களுர், மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் பெங்களுர் அணி 221/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 209/9,ரன்கள் தோல்வி அடைந்தது. 12 ரன்கன் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக RAJAT PATIDAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 07, 2025

பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்தொடர்.

நேற்று துவங்கியபிரான்சின் பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்தொடர் 2வது சீசன் உலகஇந்தியாவின் பிரக்ஞானந்தா, சாம்பியன், குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஐந்து முறைஉலக சாம்பியன் ஆனநார்வேயின் கார்ல்சன் உள்பட 12 பேர்பங்கேற்றனர்.முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடக்கிறது. முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் காருணாவை வென்றார். அடுத்த சுற்றில் அர்ஜுன், கார்ல்சனை 29 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.நான்கு சுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (2.0), பிரக்ஞானந்தா (2.0), குகேஷ் (1.5) 6, 7, 8வது இடத்தில் இருந்தனர். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (3.5), கார்ல்சன் (3.0), பிரான்சின் மேக்சிம் வாசியர் (3.0) 'டாப்-3' ஆக உள்ளனர். 

Apr 07, 2025

போபண்ணா ஏ.டி. பி., 'மாஸ்டர்ஸ் 1000' சர்வ தேச டென்னிஸ் உலக சாதனை.

 ஏ.டி. பி.,'மாஸ்டர்ஸ் 1000'சர்வ தேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில்ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பென்ஷெல்டன் ஜோடி, அர்ஜென்டினா வின்பிரான்சிஸ்கோ, சிலியின்அலெக்சாண்ட்ரோ ஜோடியை சந்தித்தது இதையடுத்து ஏ.டி.பி.,'மாஸ்டர்ஸ் அந்தஸ்து தொடரில் 1000' பெற்ற ஒற்றையர் அல்லது இரட்டையர் போட்டியில், வெற்றி பெற்ற, உலகின் மூத்த வீரர் எனபோபண்ணா   45 வயது, 1 மாதம்) உலகசாதனை படைத்தார்.     

Apr 07, 2025

அர்ஜென்டினாவில் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் தங்கப் பதக்கம் வென்ற ருத்ராங்க்ஷ்.

 ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா (634.5 புள்ளி), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (633.7) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.மற்ற இந்திய வீரர்களான அங்குஷ் கிரண் ஜாதவ் (631.5), திவ்யான்ஷ் சிங் பன்வார் (628.0), ஹசாரிகா (624.6) பைனலுக்கு தகுதி பெறத் தவறினர்.அடுத்து நடந்த பைனலில் ருத்ராங்க்ஷ்,252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்..இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 4 பதக்கம் வென்ற இந்தியா,முதலிடத்தை சீனாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. 

Apr 07, 2025

சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து

கால்பந்து 11வது சீசன் இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,). நேற்று, கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் மோகன் பகான், ஜாம்ஷெட்பூர் அணிகள் மீண்டும் மோதின.முதல் சுற்றில் 21என வென்ற ஜாம்ஷெட்பூர், இப்போட்டியை 'டிரா'செய்தால்,பைனலுக்கு சென்று விடலாம், என்றநிலையில் களமிறங்கியது. மோகன் பகான் அணி குறைந்தது 2 கோல்வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.  இரண்டு சுற்று அரையிறுதி முடிவில், கோல் அடிப்படையில் 3-2 (1-2, 2-0) எனமுந்திய மோகன் பகான் அணி, பைனலுக்கு முன்னேறியது. இதில் பெங்களூருவை (ஏப். 12) சந்திக்க உள்ளது. 

Apr 06, 2025

5th APRIL and  6th APRIL ,IPL MATCH

  5th APRIL  CHENNAI - DELHI 5-ம் தேதி சென்னையில், டெல்லி, சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி 183/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 158/5, ரன்கள் தோல்வியடைந்தது 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KL RAHUL தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப், ராஜஸ்தான்.5-ம் தேதி சண்டிகரில், பஞ்சாப், ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 205/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 155/9,ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOFRA ARCHER தேர்ந்தெடுக்கப்பட்டார்.6th APRIL IPL MATCH HYDERABAD - GUJARAT 6-ம் தேதி ஹைதராபாத்தில், குஜராத், ஹதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் ஹை தராபாத் அணி 152/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 153/3, ரன்கள் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MOHAMMED SIRAJ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 06, 2025

விளையாட்டு போட்டிகள் APRIL 6TH

குத்துசண்டை  உலக குத்துச்சண்டை கோப்பைபிரேசிலில், முதல் சீசன் 70 கிலோஎடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, இங்கிலாந்தின் ஓடெல் கமாரா மோத இருந்தனர். கடைசி நேரத்தில் காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் விலக,ஹிதேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கத்தை தட்டிச் சென்றார். உலக குத்துச்சண்டை கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்றவரலாறு படைத்தார் ஹிதேஷ். ஹரியானாவை சேர்ந்த ஹிதேஷ் குலியா 20, இந்திய கடற்படையில் மாலுமியாக உள்ளார். உள்ளூர் போட்டியில் சர்வீசஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், நடப்பு ஆண்டில் நடந்த சீனியர் தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், 38வது தேசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார். கூடைபந்து  கூடைப்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (எப்.ஐ.பி.ஏ.,)வெளியிட்டது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி,127.3 புள்ளிகளுடன் 81வது இடத்தில் இருந்து 76வதுஇடத்தை கைப்பற்றியது. கடந்த மாதம் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில்பஹ்ரைனை வென்ற இந்தியா,11வது முறையாக ஆசியகோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறியது. கார்பந்தயம்   கார்பந்தயத்தில்ஜப்பானில் நடந்த 'பார்முலா-1''ரெட்புல் ரேஸிங் ஹோண்டா' அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். 

Apr 04, 2025

4th  APRIL  - KOLKATTA - HYDERABAD IPL MATCH.

 APRIL-4-ம் தேதி  லக்னோவில், மும்பை, லக்னோ அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  லக்னோ அணி 203/ 8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 191/5 ரன்கள் எடுத்து  தோல்வி அடைந்தது,   12 ரன்கள் வித்தியாசத்தில்  லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக DIGVESH SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.   சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோத உள்ளன. 

Apr 04, 2025

4TH APRIL விளையாட்டு போட்டிகள் .

  ஹாக்கி .இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி தொடர் கடந்த 2013 துவக்கப் பட்டது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின், இத் தொடரின் ஆறாவது சீசன், சமீபத்தில் நடந்தது. இதை டிவி, இணையத ளத்தில் பார்த்தவர்கள் விபரம்,  ஒட்டுமொத்தமாக 4.08 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர் ஆண்களுக்கான பைனலை 30.7 லட்சம் பேர், பெண்கள் பைனலை 29.2 லட்சம் பேர் பார்த்தனர். ஹாக்கி விளை யாடும் 18 நாடுகளில், இத் தொடரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். குத்து சண்டை  உலக குத்துச் சண்டை கோப்பை  தொடர் பிரேசிலில் . 19 நாடு களில் இருந்து 130 பேர் பங் கேற்றுள்ளனர். 70 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஹிதேஷ்  பிரான்சின் மக்கான் டிரவோர் மோதினர். இதில் ஹிதேஷ், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தேசிய சாம்பி யன் ஜடுமானி சிங் (50 கிலோ), முன்னாள் ஆசிய சாம்பியன், உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜலிலோ விடம் 2-3 என தோல்வி யடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். 

1 2 ... 146 147 148 149 150 151 152 ... 170 171

AD's