25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


முக்கிய அறிவிப்பு

May 05, 2024

வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது.அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள். அதனால் என்னாயினும் பார்த்துக்கொள்ளலாம்.

என் வீட்டில் பெரிதாய் இரு மாமரங்கள், இரு தென்னை மரங்கள்  உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. வெந்து தணிகிறது. நான் மட்டும் மரங்களை வளர்த்து என்ன பயன் ? சுற்றிலும் உள்ள வீடுகளில் மருந்துக்கூட மண்தரை இல்லை. ஆயிரம் வீடுகட்கு ஐம்பது மரங்கள் என்ற அளவில்கூட இல்லை. வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது. இணையத்தில் ஊர்வெப்பத்தைத் தேடியபோது செல்சியசில் 46 பாகை காட்டுகிறது. அதனைப் பாரன்ஹீட்டில் மாற்றிப் பார்த்தால் 114.8 பாகை என்று வருகிறது. இன்னும் நம் ஊடகங்கள் “வெப்பநிலையில் செஞ்சுரி அடித்த நகரங்கள்” என்று கொண்டாட்டமாகச் செய்தி வெளியிட்டுக்கொண்டுள்ளன. எண்ணிப் பாருங்கள், நூற்றிரண்டு பாகை வெப்பநிலையில் காய்ச்சல் என்றாலே நம் உடல் எப்படிக் கொதிக்கிறது ! நம்மைச் சுற்றி நூற்றுப் பதினைந்து பாகை வெப்பம் நிலவுகிறது. வீட்டின் வெளிச்சுவரை உட்புறம்  தொட்டுப் பார்த்தால் அதுவே தகதகவென்று கொதிக்கிறது. இது முற்றிலும் கொடியது. ஆடு மாடு எருமை கன்றுகளின் நிலை என்ன ? பிற அஃறிணைகள் குடிநீர்க்கு என்ன செய்கின்றன ? அவற்றுக்கு ஏதேனும் நாமாவது செய்கிறோமா ? பகல் நேர வெளிப்பணியாளர்கள் வேலை செய்வதற்கு மாற்றாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது ? அவர்கட்கு மாற்றீடு என்ன ? வெட்டி வீழ்த்தப்பட்ட, பிடுங்கியெறியப்பட்ட பெருமரங்களால் விளைந்த வெப்பக்கேடுகள் பற்றிய அளவீடு உண்டா ? அவற்றுக்கு மாற்றாக ஒரு புல்லையேனும் வளர்க்க முயன்றார்களா ? வளர்ச்சி என்பது சாலை நீளமா, சாலை அகலமா ? இக்காலகட்டத்தில் தொழிற்சாலைகள் வெப்பத்தை, வெம்புகையை உமிழாமல் இருக்கும்படி ஏதேனும் கட்டுப்பாடுகள், பரிந்துரைகள் உண்டா ? எதுவுமே இராது. எல்லாம் அப்படியப்படியே கிடக்கும். அரசுகள் எதனைத்தான் செய்கின்றன ! நம்மை ஆள்பவர்கட்குச் சுற்றுச்சூழல் நுண்ணுணர்ச்சி உண்டா ? இந்நேரம் விரைந்து நின்று பலப்பல காப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கவேண்டாவா ? ஐயோ, இதற்கு என்ன செய்யலாம் என்று ஆளும் தரப்பு மண்டையை உலுக்கிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள் ! மக்களாகிய நாம்தான் இனியும் யாரையும் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள். அதனால் என்னாயினும் பார்த்துக்கொள்ளலாம். வீட்டிற்குள் வேர் பரவாத, பருக்காத பலமரங்கள் இருக்கின்றன, அவற்றை வளருங்கள். ஏதாவது ஒன்றை இறங்கிச் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த ஆண்டில் இன்னும் ஐந்தாறு பாகைகள் கூடக்கூடும். இனிமேல்கூடும் ஒவ்வொரு பாகையும் நம் நிலத்தைக் கரித்துவிடும். வாழத் தகுதியற்றதாக்கிவிடும். இருக்கப்பட்டவர்கள் காலப்போக்கில் வேற்றிடம் தேடிப் போய்விடுவார்கள். நமக்கு நம் மண்தான் ஒரே போக்கிடம். அதன் வாழ்தகுநிலையைக் காப்பதன்றி வேறு வழி நமக்கில்லை.      fb  பதிவு

May 03, 2024

கத்தரிக்காய்களில் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்தரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.இது குறித்து அதே பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உணவு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் பியும் டி.ஏ. அபேசுந்தர சுற்றுச்சூழல் நீதி மையத்திடம் தெரிவித்ததாவது“காய்கறிகள் மற்றும் பழங்களை  குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவுவதால் பூச்சிக்கொல்லிகளை நீக்க முடியும் என தெரிவித்திருந்தார்.அத்துடன் காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

Apr 26, 2024

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், கோடைகால பயிற்சி வகுப்பு முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், பள்ளி மாணவர்களுக்கான, ஒன்றிய அளவிலான கோடைகால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் வைத்து, நடைபெற உள்ளது.அதன்படி, 01.05.2024 அன்று ஓவியக் கலைகள் பயில்வோம் என்ற தலைப்பிலும், 02.05.2024 அன்று தனித்தமிழ் அறிவோம் என்ற தலைப்பிலும், 03.05.2024 அன்று விருதுநகர் மாவட்டம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும், 04.05.2024 போஸ்டர் தயாரித்தல் இணைய வழி பயிற்சியும், 06.05.2024 அன்று கதை சொல்லி என்ற தலைப்பிலும், 07.05.2024 அன்று புத்தகம் பேசுதல் என்ற தலைப்பிலும், 08.05.2024 அன்று நாட்டுப்புற கலைகள் பயிற்சியும், 09.05.2024 அன்று உணவே மருந்து என்ற தலைப்பிலும், 10.05.2024 அன்று உபயோகமற்ற பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரித்தல்(Art from Waste) என்ற தலைப்பிலும், 11.05.2024 அன்று மெகந்தி வரைதல் மற்றும் களிமண் பொருட்கள் தயாரித்தல்(Mehendi and clay Modelling) என்ற தலைப்பிலும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாம்களில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 50 மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள இயலும். ஒரு மாணவர் இரண்டு பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்க பதிவு செய்யலாம்.இந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற விரும்பும் மாணவர்கள் 30.4.2024- க்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி முகாம் முற்றிலும் கட்டணமில்லா பயிற்சியாகும். மதிய உணவு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98437- 21133 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 25, 2024

தகிக்கும் தமிழ்நாடு

தமிழகத்தில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில்தொடங்கிவிட்டது. மார்ச் முழுவதும் வெயில் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தீவிரமாகதான் இருக்கிறது.இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் பதிவான வெயிலின் அளவு குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான பகுதிகளில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆந்திராவின் அனந்தப்பூர் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் முதல் இடத்திலும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 109.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர், நீர் சத்து கொண்ட பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழ்நாட்டின் வானிலையை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் சேலம், ஈரோடு, திருப்பத்தூர், கரூர் பரமத்தி, வேலூர், தருமபுரி, மதுரை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது.இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களை பொறுத்த அளவில், வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும், தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஏப்.26 தொடங்கி ஏப்.30 வரை தமிழகம் காரைக்காலில் வறண்ட வானிலையை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மட்டுமல்லாது இன்றும் நாளையும் வட உள் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. 

Apr 22, 2024

இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 130 வது பிறந்தநாள் உத்சவம்

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தைபெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 130 வது பிறந்தநாள் உத்சவம்24.04.2024 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில்ஸ்ரீமான் பி.ஏ.சி .ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும்,  புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.காலை 7.45 மணிக்கு அமரர் ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24.04.2024  மாலை 6.30 மணிக்கு  இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமிராஜா அரங்கத்தில்"அக்கரை சகோதரிகளின்" கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

Apr 14, 2024

அயோத்தி ராமர் கோயிலில் ,ராமரின் நெற்றியில், சூரிய ஒளிக்கதிர் பட்டு சூரிய திலகம் எனப்படும் அரிய நிகழ்வு

அயோத்தி ராமர் கோயிலில், ராம நவமி தினமான ஏப்ரல் 17ஆம் தேதி, ராமரின் நெற்றியில், சூரிய ஒளிக்கதிர் பட்டு சூரிய திலகம் எனப்படும் நிகழ்வு நடந்தேறவிருக்கிறது. அறிவியல், கட்டடவியல் அனைத்தும் ஒன்றிணைத்து, ஆன்மிகச் சிந்தனையை அதிகரிக்கும் வகையில், ராம நவமி நாளில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு, காணக் கிடைக்காத இந்த சூரிய திலக தரிசனம் கிடைக்கவிருக்கிறது.  ஆன்மிக ரீதியாகவும், அதே வேளையில், அறிவியலுடன், கட்டட அமைப்பும் ஒருங்கிணைந்து, கோயில் அறக்கட்டளையுடன் விஞ்ஞானிகள் இணைந்து, ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ராமநவமி நாளில் மட்டும் சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்ட வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வட இந்தியர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராமநவமி, ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய நாள் சூரிய ஒளிக்கதிர், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர்மீதுநான்குநிமிடங்கள்விழும்வகையில்வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சூரியனின் பாதையை துல்லியமாகக் கணித்து, அன்றைய நாள், எந்த இடத்தில் சூரியன் பயணிக்கும் என்பதை கண்டறிந்து, இந்த செயல்முறை அமைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது தளத்திலிருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறைக்குள் இருக்கும் பால ராமர் மீது விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.மிகச் சரியாக பாலராமரின் நெற்றியில் திலகம் போல சூரிய ஒளிக்கதிர் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. 

Apr 10, 2024

ஸ்ரீமதே ராமானுஜாய ஸ்ரீ மத்யை கோதாயை நம: அருள்மிகு ஸ்ரீ வேட்டை வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில், இராஜபாளையம். ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமஹாஸம்ப்ரோக்ஷண அழைப்பிதழ் [மஹா கும்பாபிஷேகம்]சித்திரை மாதம் 08ம் தேதி 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை 

யாகசாலை பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சி விவரங்கள்17.04.2024 சித்திரை 04ம் தேதி புதன்கிழமை முதல் நாள்காலை 7.00-10.00 மணிவிச்வரூப தரிசனம், சுப்ரபாதம், மங்களஇசை, யஜமான, ஆச்சார்ய வர்ணம், அனுக்ஞை, ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், மஹாசங்கல்பம்,மாலை 4.00 மணி to இரவு 8.00 மணி |ம்ருத்ஸங்கிரஹணம், புண்ணியாகவாசனம் விசேஷ பூஜைகள் துவக்கம் கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், கும்பஸ்தாபனம், ரக்ஷாபந்தனம். 18.04.2024 சித்திரை 05ம் தேதி வியாழக்கிழமை இரண்டாம் நாள்முதலாம் கால யாக பூஜைகள், காலை 8.00 மணி.காலை 11.30 மணி பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி18.04.2024 சித்திரை 05ம் தேதி வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜைகள்  மாலை 5.30 மணி , இரவு 8.30 மணி பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி   19.04.2024 சித்திரை 06ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள்,மூன்றாம் கால யாக பூஜைகள்காலை 8.00 மணி |to காலை 11.30 மணி , பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டிநான்காம் கால யாக பூஜைகள் மாலை 5.30 மணி |இரவு 8.30 மணி , பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி   20.04.2024 சித்திரை 07ம் தேதி சனிக்கிழமை நான்காம் நாள்ஐந்தாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம் கோஷ்டிஆறாம் கால யாக பூஜைகள் மாலை 3.30 மணி |to மாலை 5.30 மணி |இரவு 8.30 மணி,, பிம்பஸுத்தி திருமஞ்சனம் ஆறாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம் கோஷ்டி, சயனாதி வாசம் 21.04.2024 சித்திரை 08ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் நாள்காலை 4.00 - 7.25  விச்வரூப தரிசனம், ஏழாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், தசதானம், மஹாகும்ப யாத்திரை புறப்படுதல்காலை  7 .45 – 9.00  விமானங்களுக்கும் மூலவர் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப்பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், பரிவாரமூர்த்திகளுக்கும் மஹாஸம்ப்ரோக்ஷணம்.மாலை 6.30-8.00  ,கெருடோத்ஸவம் ஸ்வாமி கருட வாகன திருவீதி உலா.(வழி: வெங்கடேஸ்வரா நகர், ராமமந்திரம், சக்கராஜா கோட்டை வழியாக கோவிலுக்கு சென்றடைதல்.)  நிகழ்ச்சி18.04.2024 வியாழன்  ,மாலை 6.30-8.00 ,கர்நாடக இசை நிகழ்ச்சி ஸ்ரீமதி சாலை லக்ஷணா 19.04.2024 வெள்ளி  மாலை 6,30 - 8.00 , ''அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள்" ஸ்ரீனிவாசலு குழுவினர் (TTD-திருப்பதி) 20.04.2024 சனி  மாலை 6,30 - 8.00  உபந்யாஸம் "குறை ஒன்றுமில்லை கோவிந்தா" ''வாக் விலாஸ அம்ருத ரத்னம்" “சொல்லின் செல்வன்" ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள்  திருப்பணி தலைவர் திரு பி. ஆர். வெங்கட்ராம ராஜா சேர்மன் - ராம்கோகுரூப், அறங்காவலர் குழு தலைவர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்.  

Apr 10, 2024

மக்களவை பொதுத்தேர்தல் 2024 வாக்குபதிவு நடைபெறுவதை முன்னிட்டு மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (F.L-1), F.L-2/F.L-3/FL-4A  மற்றும் FL-11  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி, மக்களவை பொதுத்தேர்தல் 2024 - வாக்கு பதிவினை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (Poll Day) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2/F.L-3/FL-4A  மற்றும் FL-11  மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Apr 09, 2024

ஏப்ரல் 1 முதல் ஜிமெயில் சேவையில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன

ஜிமெயில் சேவையை நம்பித்தான் உங்களுடைய ஒவ்வொரு நாளும் ஓடுகிறதென்றால்.. கூகுளின் இந்த இமெயில் சேவை இல்லமால் உங்களால் முழுதாக ஒரு நாளைக்கூட கடக்க முடியாதென்றால்.. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய ஜிமெயில் விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் அனுப்பப்படும் இமெயில்கள் ஆனது கூகுள் நிறுவனத்தால் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு வரும் ஸ்பேம் இமெயில்களின் அளவை குறைப்பதோடு சேர்த்து, ஜிமெயில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே கூகுள் நிறுவனம் இந்த கடுமையான விதியை நடைமுறைப் படுத்தி உள்ளது.அடுத்ததாக.. 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பும் எவருமே.. பல்க் செண்டர்கள் தான் என்று கூகுள் நிறுவனம் வரையறை செய்கிறது. எத்தனை துணை டொமைன்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஒரே முதன்மை டொமைனில் இருந்து அனுப்பப்படும் அனைத்து இமெயில்ககளும் இதில் அடங்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படியாக ஒருமுறை பல்க் செண்டர் என்கிற ஸ்டேட்டஸை பெற்றுவிட்டால், அதற்கு எந்த விதமான காலாவதி தேதியும் இல்லாததால், அது நிரந்தரமாகி விடும். அதாவது ஒருவர் ஒருமுறை பல்க் செண்டர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அவர் எப்போதுமே ஒரு பல்க் செண்டர் என்று தான் அடையாளம் காணப்படுவார், பல்க் செண்டர் வழிகாட்டுதல்கள் ஆனது தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு அனுப்பப்படும் இமெயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் கூட, அனைத்து அனுப்புநர்களும் கூகுளின் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். இதில் கூகுள் வொர்க்பிளேஸ் அக்கவுண்ட்களை பயன்படுத்துபவர்களும் அடங்குவர்!கடைசியாக.. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடுமையான டொமைன் அங்கீகார விதிகளும் (Strict Domain Authentication Rules) அமலுக்கு வரும். ஜிமெயிலின் க்ரூப் ப்ராடெக்ட் மேனேஜர் ஆன நீல் குமரன் பல பல்க் செண்டர்கள் தங்களின் சிஸ்டம்களை சரியான முறையில் செக்யூர் மற்றும் கான்ஃபிகரேஷன் செய்யவில்லை. இதனால் அட்டக்கர்களால் எளிதாக தங்களை மறைந்து கொள்ள முடிகிறது என்கிறார். இதனால்தான், ஏப்ரல் 1 முதல், பல்க் செண்டர்கள் அனைவரும் தங்கள் இமெயிலை "சிறந்த நடைமுறைகளைப்" பயன்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். அதாவது டொமைன் அடிப்படையிலான மெசேஜ் அங்கீகாரம் (Domain-based Message Authentication), ரிப்போர்டிங் மற்றும் கன்ஃபார்ம்மென்ஸ் (Reporting & Conformance), டொமைன்கீஸால் அடையாளம் காணப்பட்ட மெயில் (DomainKeys Identified Mail) மற்றும் செண்டர் பாலிசி ஃப்ரேம்வொர்க் (Sender Policy Framework) போன்ற சிறந்த நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும்ஜூன் 1 முதல் இன்னொரு புதிய ஜிமெயில் விதியும் நடைமுறைக்கு வரும்! மேற்கண்ட புதிய ஜிமெயில் விதிகளை தவிர்த்து 2024 1 ஜூன் ஆம் தேதி முதல் பல்க் செண்டர்கள் அனைவரும் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்யும் விருப்பத்தை (One-click unsubscribe option) சேர்க்க வேண்டும். மெயிலிங் லிஸ்ட்டில் (Mailing List) இருந்து அன்சப்ஸ்க்ரைப் முயற்சிக்கும் எவருக்குமே, அது மிகவும் சுலபமான செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் ஜூன் 1 முதல் பல்க் செண்டர்கள் தங்களுக்கு வரும் அன்சப்ஸ்க்ரைப் கோரிக்கைகளை (Unsubscribe requests) 48 மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும்

Mar 26, 2024

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளன்று அவர்களின் சொந்த ஊரில் இருக்க வசதியாக உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் தத்தமது வாக்குரிமையை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் தங்கள் தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் அவர்களது ஜனநாயக உரிமையான வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்குவதுடன் பணியிடங்களில் பிரதான இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்கள் பொருந்திய பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 19 20 21 22 23 24 25 26 27 28

AD's



More News