SMT. SAKKANIAMMA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATIONOn Saturday, 22nd August 2026 at 8.30 A.MVenue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam.Thiru. N.D.VISWANATHSmt. S. RADHIKAThiru. A.G. BHAGAVATH SINGHThiru. M. RAM KUMARSchool Committee MembersDeclare the meet open & Preside over the functionSri. A.K.D. KRISHNAMA RAJUCorrespondentSmt. Sakkaniamma DharmarajaNursery & Primary School.
நூற்றாண்டு கண்ட இராஜபாளையத்தின் நூற்றுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விழா(REWA வின் 49வது நிகழ்ச்சி)நாள் : 15-08-2026 சனிக்கிழமைநேரம் : காலை 10-00 மணிஇடம் :மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம்சிறப்புரை :Dr.V. வெங்கட்ராமன் அவர்கள்முன்னாள் முதல்வர். இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி.விழா பேருரை :Dr.V. ரகுபதி அவர்கள்தலைவர், காந்திநிகேதன் ஆஸ்ரமம், T. கல்லுப்பட்டி.சுதந்திரப் போராட்டத்தில் இராஜபாளையத்தின் பங்கு ஆர்பரியதாக இருந்திருக்கிறது. பிரிட்டீஷாரே பயப்படும் அளவிற்கு தீவிரமாக அனைத்து போராட்டங்களும் 1905 வங்காள பிரிவினை முதல் 1947 சுதந்திரம் கிடைக்கும் வரை சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், அன்னியநாட்டு துணிகளை புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், மது எதிர்ப்பு பிரச்சாரம், சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, போன்ற போராட்டங்கள் நடத்தி, பிரிட்டீஷ் காவல்துறை இரண்டுமுறை துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு சாதி, மத, அரசியல் சாயம் சிறிதும் இல்லாமல் பூர்ண சுவராஜ் என்ற இலக்கை நோக்கி நூற்றுக்கணக்கான தியாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.பிரிட்டீஷாரே நமது இராஜபாளையத்தை பயங்கர நகரம் (Dangerous Town) என்று பதிவிடும் அளவிற்கு ஒற்றுமையாக அனைவரும் போராடி உள்ளனர்.
இராஜபாளையம் பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு,பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு மகளிர் அணி,(பான்த்த பாளேனி வஜ்ஜுராலு),மற்றும்அபரஞ்சிலு இணைந்து நடத்தும், உணவுத் திருவிழா- 2026பாளையத்தின் முதல் திறந்தவெளி உணவுத் திருவிழா( மனவாலு வண்ட்டலு வைபவம்).நாள்: 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை,நேரம்: மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே.இடம்: பழையபாளையம் பெரிய சாவடி வளாகம் சித்திரை திருவிழா நடைபெறும் இடம். துவக்கி வைப்பவர்கள் - திருமதி. பவித்ரா ஷ்யாம் அவர்கள், சேர்மன், இராசபாளையம் நகராட்சி.திரு. V.ரவிக்குமார் அவர்கள், ஸ்ரீ குமரன் ஸ்வீட்ஸ், இராஜபாளையம்.உணவுகளின் சங்கமத்தில் சங்கமிக்க திரண்டு வாருங்கள்!!இனிமையான இசை, சுவையான உணவு,சுவைக்க வாருங்கள்!
இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் 88-வது ஆண்டு பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்அன்புடையீர்,நமது சங்கத்தின் 88-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நமது நகர் தென்காசி சாலையில் உள்ள மாண்புமிகு P.S. குமாரசாமிராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில்நமது சங்கத் தலைவர்உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (சேர்மன். ராம்கோ குழுமம்)தலைமையில் நடைபெறும்.உயர்திரு V.V.S. யோகன் B.A., (Hons.) அவர்கள்தலைவர்.விருதுநகர் வியாபாரத் தொழில்துறைச் சங்கம்.முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.தாங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.தங்கள் அன்புள்ள,M.C.வெங்கடேஸ்வர ராஜாR. நாராயணசாமிசெயலாளர்கள்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12, புதன்கிழமை வருகிறது.அமாவாசை திதி ஆகஸ்ட் 12 அதிகாலை 2:11 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 13 அதிகாலை 12:16 மணிக்கு நிறைவடைகிறது.'மேலும் அதே நாளில் சூரிய கிரகணமும் நிகழ்கிறது.சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 இரவு 9:04 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 13 அதிகாலை 4:25 மணிக்கு நிறைவடைகிறது.
2026-ம் ஆண்டின் முக்கிய சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ம் தேதி நிகழ உள்ளது.குறிப்பு: இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியாது.ஐரோப்பாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணத்தை காண முடியும்.
கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்கன்னியாகுமரிதிருநெல்வேலிதென்காசிதேனிகோயம்புத்தூர்நீலகிரிஅதிக கனமழை பெய்யக்கூடிய தாலுகாக்கள்அம்பாசமுத்திரம்நாங்குநேரிதென்காசிசெங்கோட்டைகடையநல்லூர்உத்தமபாளையம்வால்பாறைமாஞ்சோலை, கோதையாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.பிற தென் மாவட்டங்களில் சாரல் மழைதூத்துக்குடிதிருநெல்வேலி (சமவெளி பகுதிகள்)விருதுநகர்மதுரைகுற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ள அபாயம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜகந்நாதராஜா இலக்கிய தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை நடத்தும் பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பிறந்தநாள் விழாதலைமை - மருத்துவர்.கு. கணேசன் அவர்கள் பொதுநல மருத்துவர், கணேஷ் மருத்துவமனை மற்றும் மருத்துவ எழுத்தாளர்முன்னிலை - கவிஞர். இரா.ஆனந்தி அவர்கள், அமைப்பாளர் நாற்று இலக்கிய அமைப்பு. இராஜபாளையம்திரு.பி.லோகநாதராஜா அவர்கள், ஸ்ரீ ரமணாலயம் டிரஸ்ட் இராஜபாளையம்.26 ஜூலை 2026, ஞயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை,இடம்: முதுனூர் தாயாதியார் மண்டபம், சக்கராஜா கோட்டை இராஜபாளையம். அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.பன்மொழி புலவர் மு.கு.ஜகந்நாதராஜா நூலகம், JRLR டிரஸ்ட் நிர்வாகிகள்.
நாள் : 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைஇடம்: இராஜபாளையம் தொழில் வர்த்தகசங்கம், இராஜபாளையம்.மதுரைக்கு நிகரான மருத்துவ வசதிகள் கொண்ட நம் நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் Dr.P.K. இராமசுப்பிரமணியன் M.S.அறுவை சிகிச்சை நிபுணர், அவர்கள் தலைமையில் இந்த முகாமை நடத்தவுள்ளார்கள்.பங்கேற்கும் மருத்துவர்கள்:Dr.K. இராஜதுரை M.B.B.S.D.C.H. குழந்தைகள் நல மருத்துவர். Dr. N.V. விவேக், M. D. D. M . இருதய நோய் சிறப்பு நிபுணர். Dr.M. திருமுருகன் M.S.(ORTHO) எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர். Dr.K. புதியராஜ் M.B.B.S.RCD.(Diab.) சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர். Dr. E. கவி அரசன் M. D .இருதய மற்றும் பொது நல மருத்துவர். , Dr. R. மகாலட்சுமி, பொது மற்றும் மகளிர் நல மருத்துவர்.பரிசோதனைகள்உடல் எடை, உயரம்எக்கோ கார்டியோ கிராம்இரத்த அழுத்தம்ஈசிஜிBMI பரிசோதனைஎக்ஸ்-ரேஇரத்தத்தில் சர்க்கரையின் அளவுஹீமோகுளோபின் அளவுதேவைப்படுவோருக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி பரிசோதனை செய்யப்படும்.உடல் சம்மந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைப்படி தேவைப்படுவோருக்கு இலவசமாக மருந்து, டானிக், மாத்திரைகள் வழங்கப்படும்.குழந்தைகள், மகளிர், பெரியவர்கள், மூத்தோர் ஆகிய அனைவரும் பயன்படும் வகையில் முதன்முறையாக நமது நகரில் பிரத்யேகமாக நடத்தப்படும் இந்த சிறப்பு வாய்ந்தமருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.முதலில் வரும் 150 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மருத்துவ முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு கொண்டு வரவும்.
தமிழக அரசுலஞ்சம் கேட்குறாங்களா?பயப்படாதீங்க!புகார் அளியுங்கள் - ஊழலை ஒழிப்போம்!தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.94981 80936WhatsApp மூலம் புகார் அளிக்கலாம்.லஞ்சம் தொடர்பான புகார்களை DVACக்கு கீழ்கண்ட வழிகளிலும் புகார் அளிக்கலாம்.dvac@nic.in044-22321090இதற்கான சுற்றிக்கையை தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.ஊழலை ஒழிப்பது நம் கடமை.நேர்மையான தமிழகம் நம்மால் சாத்தியம்.புகார் அளிப்போம்.ஊழலை ஒழிப்போம்.நேர்மையை நிலை நிறுத்துவோம்.