25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jan 29, 2025

'வீர தீர சூரன்' ரிலீஸ் மார்ச் 27ல்...

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'வீரதீர சூரன்' பகுதி 2. ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.. இப் போது மார்ச்27ல் இப்படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

Jan 29, 2025

'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பு ஜூன் முதல்'....

பிரபாஸ், அமிதாப் பச்சன். கமல், தீபிகா படுகோனே நடிப் பில் கடந்தாண்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியாகி ரூ.1200 கோடி வசூலித்த படம் 'கல்கி 2898 ஏடி'. இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை நாக் அஷ்வின் துவங்கி உள்ளார். இந்நிலையில் ஜூனில் இரண்டாம் பாக படப்பிடிப்பு துவங்கும் என தயாரிப்பாளர் அஷ்வினி தத் தெரிவித்துள்ளார்.

Jan 29, 2025

“புறநானுாறு” பட தலைப்பை 'பராசக்தி' என பெயரிட்டுள்ளதாக தெரிகிறது

சூர்யா நடிப்பில் உருவாக இருந்த படம் ' புறநானுாறு'. சில காரணங்களால் அவர் விலக சிவகார்த்திகேயன் தற்போது அதில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் ஜெயம் ரவி,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பி டிப்பு நடக்கிறது. புறநானுாறு பட தலைப்பை சூர்யா நிறுவனம் தராததால் வேறு தலைப்பை தேடி வந்தனர். இப்போது 'பராசக்தி'என பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஒரு அறி விப்பு வீடியோவை உருவாக்கி உள்ளனர். அதற்காக சென்சார் சான்று பெற்ற போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. 

Jan 22, 2025

தேவயானி  முதன்முறையாக இயக்கிய “ கைக்குட்டை ராணி' 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை பெற்றது.

திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக,. 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி இவர் முதன்முறையாக கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். நிஹாரிகா நவீன் நடிக்க, இளையராஜா இசைய மைத்துள்ளார். 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை இந்த குறும்படம் வென்றுள்ளது. 

Jan 22, 2025

விதார்த் நடிப்பில் வி.கஜேந்திரன் இயக்கியுள்ள படம்  விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்'.

 இன்றைய  விவசாயி சந்திக்கும் பிரச்னைகளை சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக இப்படம் உரு வாகியுள்ளது" . விதார்த் நடிப்பில் வி.கஜேந்திரன் இயக்கியுள்ள படம் 'மருதம்'. ரக்ஷனா நாயகியாக நடித்துள்ளார். "இது விவசாயியின் வாழ்வியலை நிலத்தின் அவசியத்தை அழுத்தமாக பேசும் படைப்பு  என்றார் கஜேந்திரன் .விவசாயம் ஆதி குடியின் முதல் தொழில். நிலத்திற்கும், மண்ணுக்கும், விவசாயிக்கும் இடை யிலான உறவு தான், மற்ற உறவுகளை விடவும் முதன்மையானது. 

Jan 22, 2025

6 படங்கள் ரிலீஸ் ., 24 ஜன., முதல்

 2025ல் முதல் வெள்ளிக்கிழமையான ஜன.3ல் ஏழு படங்கள் வெளிவந்தன. பொங்கலை முன்னிட்டு நான்கு வெவ்வேறு நாட்களில் 7 படங்கள் வெளிவந்தன. ஜன.24ல் 'பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், மிஸ்டர் ஹவுஷ்கீப்பிங், பூர்வீகம், வல்லான்' ஆகிய 6 படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியரான பா.விஜய் இயக்கி உள்ள படம் 'அகத் தியா'. ஜீவா,அர்ஜுன், ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. இப்போது இத்திரைப்படம் 2025, ஜனவரி 31ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Jan 22, 2025

'நாகபந்தம்' ரூ.100 கோடி  பட்ஜெட் டில் உருவாகிறது.

அபிஷேக் நமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிக் கும் படம் 'நாகபந்தம்'. தெலுங்கில் உருவாகி பான் இந் தியா படமாக வெளியாகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, புரி ஜகநாதர் கோயில்களில் மறைந்துள்ள பொக்கிஷங்கள், 108 விஷ்ணு கோயில்களை சுற்றியுள்ள மர்மங்கள், இந்த புனித தலங்களை காக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாக வைத்து ரூ.100 கோடியில் இப்படம் உருவாகிறது.

Jan 22, 2025

2021ல் ரூ.31 கோடிக்கு வாங்கிய அபார்ட்மென்ட்டை,,ரூ.83 கோடிக்கு விற்ற அமிதாப்பச்சன்

மும்பையின் முக்கிய இடங்களில் பாலிவுட்டின் சீனியர் ஹீரோ வான அமிதாப் பச்சனுக்கு சில வீடுகள் உள் ளன. அவற்றில் மும்பையின் ஓஷிவரா பகுதி யில் அமைந்துள்ள 'டூப்ளக்ஸ் அபார்ட்மென்ட்' ஒன்றை 83 கோடிக்கு விற்றுவிட்டார். 2021ல் ரூ.31 கோடிக்கு வாங்கிய அந்த இடம் இப்போது இவ்வளவு விலைக்கு விற்பனையாகி உள்ளது. இடம் 5795 சதுர அடி பில்ட் அப் ஏரியாவை கொண்ட, விசாலாமான மாடி மற்றும் ஆறு கார் பார்க்கிங் கொண்டது. 

Jan 22, 2025

மீண்டும் 'சங்கமித்ரா “

 சுந்தர் சி இயக்கத்தில் ,தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் , ஏஆர் ரஹ்மான் இசையில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்க 2017ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறி விக்கப்பட்ட சரித்திரப் படம் 'சங்கமித்ரா'. நிதி பிரச்னை யால் 7 ஆண்டுகளாகியும் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது ஆண்டு அடுத்தாண்டு கொண்டாட. 'சங்கமித்ரா' படத்தை மீண்டும் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு,அதற்கான பணிகள் நடக்கின்றன.

Jan 22, 2025

மம்முட்டி நடித்த கவுதம் மேனன் இயக்கத்தில்'டொமினிக்' மலையாள படம்

மலையாளத்தில் மம்முட்டியை வைத்துஇயக்குனர் கவுதம் மேனன்   தற்போது ' இயக்கிய   'டொமினிக்' படம்  இந்த வாரம் வெளியாகிறது. கவுதம் மேனன் கூறுகையில், "தமிழில் அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெற்றி மாறன் கதையில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இதில் நாயகனாக ரவி மோகன் நடிக்கபடத்தின் ஆரம்பகட்ட பணி கள் நடக்கின்றன.

1 2 ... 60 61 62 63 64 65 66 ... 89 90

AD's



More News