பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். பெரும் பணக்காரர்கள், நிலவுடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள் என உயர்தட்டு மக்களுக்காகவே இந்த உலகம் பிறந்ததாக எண்ணிய காலமது! குறிப்பாக சொல்வதென்றால், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் ஆணாதிக்கமானது அளவு கடந்த நிலையில் ஆக்கிரமித்து இருந்தது. மேலும் விடுதலைக்கு முன்னிருந்த இந்தியாவிலும் இதே நிலைதான் நீடித்தது. அடிமைத்தனத்தில் ஆண் - பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. ஆயினும் பெண்கள் அளவுகடந்த துயரங்களையும் வேதனைகளையும் சந்திக்க நேரிட்டது. வேலைசெய்யும் ஆண்களுக்கு ஒருநாள் கூலி ஒரு ரூபாய் என்றால் பெண்களுக்கு அதில் பாதிக்கூட கிடையாது. நாலில் ஒரு பங்காக 25காசு மட்டுமே கூலியாகக் கொடுக்கப்பட்டது. அந்தளவிற்கு பெண்ணடிமைத்தனம் பெரும்பாலான நாடுகளில் மேலோங்கி இருந்தது. அதிலும் பெரும்பாலான நாடுகள் விவசாயத் தொழிலையே முதன்மையாகக் கொண்டிருந்ததால், வயல்களில் பெண்கள் நடவு பணிகளில் ஈடுபடும்போது குனிந்தே வேலை பார்க்க வேண்டும். ஓய்வுக்காக ஒருகணம் நிமிர்ந்தால்கூட முதலாளி வர்க்கத்தினரின் சவுக்கடி பெண்களின் உடல் முழுவதையும் பதம் பார்த்துவிடும். மாதவிடாய் நாட்களிலும் ஓய்வு கிடையாது. பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா அங்கீகரித்தது.உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் நாளன்று நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இக்கொண்டாட்டத்திற்கு வரவேற்பளித்து வருகின்றன.
நமது முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல071271 91333என்ற எண்ணில் இப்போதே அழையுங்கள் .
87 வது பிறந்த தினத்தில் சாலமன் பாப்பையாப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம் கலைமாமணி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள சாலமன் பாப்பையா ,, 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் பண்டிகை நாள் பட்டிமன்றங்களின் தலைவனாக விளங்குகிறார்.பெண் கல்வி, மருத்துவம், ஊழல்' உள்ளிட்ட சமூக தலைப்புகளுக்கு பட்டிமன்றங்களை மாற்றி ,பேச்சில், பெண்களுக்கும் சம வாய்ப்பளித்தார். மூன்று தலைமுறை பேச்சாளர் களை வளர்த்துள்ள இவர், 'திருக்குறள், புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி' உள்ளிட்ட இலக்கி யங்களுக்கு, எளிமையாக உரை எழுதியுள்ளார்.சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில், பி.ஏ., பொருளாதாரமும், தியாகராஜர் கல்லுாரியில், எம்.ஏ., தமிழும் படித்தார்.கல்லுாரியில் ஆசிரியர் பணியை துவங்கி, பேராசிரியர். தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். ஆரம்பத்தில் 1963ல், குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து, 'பெரிய புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை' உள்ளிட்ட சமய இலக்கிய பட்டிமன்றங்களில் பங்கேற்றார்.சாலமன் பாப்பையா பட்டிமன்றம் என்றால் தமிழ் ஆர்வலர்களுக்கு அலாதி பிரியம் தான்.
மகா சிவராத்திரி (Maha Shivaratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.நித்திய சிவராத்திரி,மாத சிவராத்திரி,பட்ச சிவராத்திரி,யோக சிவராத்திரி,மகா சிவராத்திரி.ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து ,சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து,நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக, ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
தமிழ் கவிதைகளில் இருந்த கருத்துகளை ரசனையுடன் எடுத்துக் கூறியதால் ரசிகமணி டி.கே.சி.' என்று அழைக்கப்பட் டார். 1926ல் சென்னை மாகாண சட்டசபையில் மேலவை உறுப்பினரானார்.தொடர்ந்து,ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனராக பொறுப்பேற்றார். கம்பராமாயண இடைச்செருகலை நீக்கி பதிப்பித்தார். மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களின் அவசியத்தைக் கூறி ராஜா அண்ணாமலை செட்டியாரை சென்னையில் தமிழ் இசை மன்றம் துவங்க ஏற்பாடு செய்தார். FEB 16 , 1954ல் தன் 71வது வயதில் இதே நாளில் காலமானார்.