25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


விளையாட்டு (SPORTS)

Jan 10, 2025

உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் விளையாட்டு பத்திரிகை 'டிராக் அண்ட் பீல்ட் நியூஸ்'. கடந்த 1948ல் துவங்கப் பட்ட இப்பத்திரிகை, 'விளையாட்டின் பைபிள்' என போற்றப்படுகிறது. இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.கடந்த ஆண்டின் சிறந்த ஈட்டி எறிதல் வீரருக்கான 'ரேங்கிங்' பட்டியலில் இந் தியாவின் நீரஜ் சோப்ரா 27, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். இவர் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராகதேர்வானார்.கடந்தஆண்டுவெளியானதரவரிசையிலும்நீரஜ்சோப்ராமுதலிடம் பிடித்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு டைமண்ட் லீக் போட்டிகளில் மூன்று முறை 2வது இடம் பிடித்திருந்தார். பின் லாந்தில் நடந்த பாவோ நுார்மி விளையாட்டில் மட்டும் தங்கம் வென்றிருந்தார். அமெரிக்காவின் விளையாட்டு பத்திரிகை 'டிராக் அண்ட் பீல்ட் நியூஸ்'. கடந்த 1948ல் துவங்கப் பட்ட இப்பத்திரிகை, 'விளையாட்டின் பைபிள்' என போற்றப்படுகிறது. இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.கடந்த ஆண்டின் சிறந்த ஈட்டி எறிதல் வீரருக்கான 'ரேங்கிங்' பட்டியலில் இந் தியாவின் நீரஜ் சோப்ரா 27, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். இவர் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீர ராக தேர்வானார்.கடந்த ஆண்டு வெளி யான தரவரிசையிலும்நீரஜ் சோப்ராமுதலிடம் பிடித்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு டைமண்ட் லீக் போட்டிகளில் மூன்று முறை 2வது இடம் பிடித்திருந்தார். பின் லாந்தில் நடந்த பாவோ நுார்மி விளையாட்டில் மட்டும் தங்கம் வென்றிருந்தார். 

Jan 10, 2025

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக அணி 2-1 என பெங்கால் அணியை வீழ்த்தியது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழகம், பெங்கால் அணிகள் மோதின. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் தமிழகத்தின் செல்வம் கார்த்தி ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் தமிழக அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.இதுவரை விளையாடிய 5 போட்டியில், 3வது வெற்றியை பதிவு செய்த தமிழக அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

Jan 09, 2025

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து. சென்னை அணி

‎‫இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சென்னை அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சம நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் வில் மர் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார்.ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது. இதுவரை விளையாடிய 15 போட்டியில், 4 வெற்றி, 4 'டிரா', 7  தோல்வி என 16 புள் ளிகளுடன் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. 

Jan 09, 2025

'கோ கோ' உலக கோப்பை இந்திய கேப்டன்  பிரதீக் வைக்கார் அறிவிப்பு

இந்தியாவில் முதன் முறையாக கோ கோ உலக கோப்பை தொடர் வரும் 13-19ல் டில்லியில் நடக்க உள்ளது. மொத்தம் 23 நாடுகளில் இருந்து 20 ஆண், 19 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.போட்டிகள் முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் நடக்கும். பின் காலிறுதி, அரையிறுதி, ஜன. 19ல் பைனல் நடக்கும்.இந்திய ஆண்கள் அணி தனது முதல் போட்டியில் நேபாளத்தை (ஜன. 13 சந்திக்க உள்ளது. பெண்கள் அணி முதல் போட்டியின் தென் கொரியாவுடன் (ஜன. 14) மோதும்.ஆண்கள் அணிக்கு பிரதீக் வைக்கார், பெண் கள் அணிக்கு பிரியங்கா இங்லே கேப்டனாக நியமிக்கப்பட்டனர். 

Jan 09, 2025

டென்னிஸ் மாயா ரேவதி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

டில்லியில்ஜூனியர்பெண்களுக்கானஐ.டி.எப்., டென்னிஸ்தொடர்நடக்கிறது.ஒற்றையர்பிரிவில்இந்தியாவின் கோவையை சேர்ந்த 15 வயது வீராங்கனை  மாயா ரேவதி பங்கேற்கிறார். நேற்று நடந்த காலிறுதியில், இத்தொடரின் ‘நம்பர்-7' வீராங்கனை ரஷ்யாவின் ராடா ஜொலோட்டரேவாவை சந்தித்தார். முதல் செட்டை 6-3 என வென்றார் ரேவதி. அடுத்த செட்டில் 1-0 என முன்னிலை பெற்றார். மறுபக்கம் ராடா காயம் காரணமாக விலகினார். இதையடுத்து மாயா ரேவதி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

Jan 09, 2025

உலக டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ்ஷா ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

கத்தாரில் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ்ஷா ஜோடி, ஹாங்காங் கின் குவான் மான், லாங் சியு ஜோடியை எதிர் கொண்டது. இதில் இந்திய 4 3-0 (11-5, 11-3, 11-6) என்ற நேர் செட்டில்  வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. 

Jan 08, 2025

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன், தமிழக அணி வெற்றி

ஒடிசா மாநிலம் ரூர்கே லாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டி யில்தமிழகம், கோனாசிகா அணிகள் மோதின. விறு விறுப்பான இப்போட்டி யில் தமிழக அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2 வெற்றி உட்பட 9 புள்ளிகளுடன் தமிழக அணி 2வது இடத் துக்கு முன்னேறியது..

Jan 08, 2025

இந்தியாவின் மாளவிகா  மலேசிய பாட்மின்டனில் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார்

மலேசியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையரில் உலகின் 'நம்பர்-26' ஆக உள்ள பிரனாய், 28 வது இடத்திலுள்ள கனடாவின் பிரியன் யங் மோதினர். பிரனாய் 21-12, 6-3 என முன்னிலையில் இருந்த போது, மைதான பிரச்னை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.நேற்று மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. பிரனாய் இரண்டாவது செட்டை 17-21 என இழந்தார். பின் நடந்த மூன்றாவது, கடைசி செட்டை பிரனாய் 21-15 என வசப்படுத்தி னார். முடிவில் பிரனாய் 21-12, 17-21, 21-16 என போராடி வென்றார். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ‘யூத்' ஒலிம்பிக் முன்னாள் சாம்பியன், இந்தியாவின் மாளவிகா, 2 முறை ஜூனியர் உலக சாம்பியன் ஆன, மலேசியாவின் ஜின் வெய் மோதினர். இதில் மாளவிகா, 21–15, 21–16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.  

Jan 08, 2025

யூத் பெண்கள்  டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியான ஹன்சினி சாம்பியன்'

குஜராத் மாநிலம் வதோதராவில், மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 86வது சீசன் நடக்கிறது.யூத் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியான ஹன்சினி, ஹரியானாவின்' சுஹானா சைனி மோதினர். ஹன்சினி 4-2 (1-11, 11-9, 13-11, 11-9, 10-12, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இளம் வயதில் (15) 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைஆனார். டென்னிஸ்: காலிறுதியில் மாயா ரேவதி .ஒற்றையர் பிரிவு இந்தி யாவின் 15 வயது வீராங் கனை மாயா ரேவதி பங்கேற்கிறார். கோவையை சேர்ந்த ரேவதி, நேற்று நடந்த இரண்டாவது சுற்றில், பிரான்சின் மனான் பேப்ளரை எதிர் கொண்டார்.   முதல் செட்டை 6-0 என வென்றார் ரேவதி. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய இவர் 6-3 என கைப்பற்றினார். முடிவில் ரேவதி, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

Jan 07, 2025

மத்திய அரசின் 'அர்ஜுனா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் ,இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி

தமிழகத்தின் காஞ்சி புரத்தை சேர்ந்தவர்,இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் 22. பிறக்கும் போது தசைநார் சிதைவு காரணமாக இட துகை பாதிக்கப்பட்டது. தினக்கூலி தொழிலாளியான தந்தை முருகேசன், மகள் துளசிமதியை விளையாட்டு அரங்கில் களமிறக்கினார்.பாட்மின்டனில் கால் பதித்தார் துளசிமதி. 15 நாடுகளில் நடந்த தொட ரில் 16 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். மத்திய அரசின் 'அர்ஜுனா' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். துளசிமதி "சிறந்த வீராங்கனைக்கான அர்ஜுனா விருதை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.டில்லியில் இந்திய ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் தொடர் (ஜன.14-19) நடக்க உள்ளது. இதில் சிந்து, லக்சயா சென், சிராக்-சாத்விக் உட்பட 21 இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். 

AD's



More News