RAJAPALAYAM RAJUS' COLLEGE RAJAPALAYAM78th Independence Day CelebrationChief Guest ,Rtn.R.ANANTHI, PRESIDENT Rotary Club of Rajapalayamwill hoist the National Flag, deliver the Independence day address inaugurate the Independence day "Environmental Awareness Mini Marathon Race"Date: 15.08.2024 (Thursday)Time: 08.30 A.M.All are Invited
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் ஆண்டு விழா முன்னாள் மாணவர் சங்க கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. துணை முதல்வர் ரமேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்லூரி ஆட்சி மன்ற குழுத் தலைவர் கே.ஜி.பிரகாஷ் தலைமை உரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் எஸ்.சிங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஐஜி. எம் எஸ்.முத்துசாமி ஐபிஎஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில், கல்வி என்பது ஒரு ஆயுதம் அதை எதற்காக, எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். படித்த அனைவருக்கும் இன்று வேலைவாய்ப்புகள் உண்டு. இளங்கலை பட்டம் படித்தவர்கள் இன்றைக்கு எத்தனையோ பெரிய,பெரிய பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாணவர்கள் கல்லூரி வேலை நாட்களை முழுவதும் பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொழியை பிரதானப்படுத்தி ஆங்கிலம் தெரியவில்லை என்று தாழ்த்தி விடாமல் முன்னோக்கி வளர வேண்டும்.திருவள்ளுவர் திருக்குறளை தமிழ் மொழியில் எழுதினார். தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறளை உலக பொதுமறை ஆக போற்றப்படுகிறது. எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல என்ன பேசுகிறோம் என்பது தான் முக்கியம் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். நிறைவாக மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பழையபாளையம் மகமை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி கலையரங்கத்தில் வைத்துத் தமிழ்த்துறை சார்பாக "நாட்டார் வழக்காற்றியல்"என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு வந்த அனைவரும் வரவேற்றுத் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ச.மைதிலிராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் முனைவர் எஸ்.சிங்கராஜ் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் தலைமையுரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் த.வெங்கடேஸ்வரன் மற்றும் சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ.சூரியகலா ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்தரங்கத்திற்குச் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் டி.தருமராஜ் முனைவர் பா.ச.அரிபாபு மற்றும் முனைவர் கு.சக்திலீலா ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையத்தின் தலைவரும், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறைத் தலைவருமான முனைவர் டி.தருமராஜ் அவர்கள் "படிக்காதவர் படித்த புத்தகங்கள்" என்ற தலைப்பில் நாட்டார் வழக்காற்றியலில் உள்ள மக்களின் இன்றைய பழக்க வழக்கங்கள் மற்றும் நாட்டுப்புறவியல் சார்ந்த மக்களின் நம்பிக்கை குறித்துச் சிறப்புரையாற்றினார். அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் பா.ச.அரிபாபு அவர்கள் "இராமாயணநாடகம் -சடங்கே நாடகமாதல்" என்ற தலைப்பில் தமிழகத்தில் இன்றைய காலகட்டத்தில் நாட்டார் வழக்காற்றியலில் இராமாயணம், மகாபாரதப் புராணங்கள் எவ்வாறு அரங்கேற்றப்படுகிறது மட்டுமல்லாமல் அக்கருத்துகள் நாட்டார் வழக்காற்றியலோடு எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது என்பன பற்றி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.காளீஸ்வரி உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சக்திலீலா அவர்கள் "பெருந்திரள் வழிபாட்டின் நீட்சி" என்ற தலைப்பில் நாட்டார் வழக்காற்றியலில் உள்ள பெருந்தெய்வ மற்றும் சிறு தெய்வ வழிபாடு குறித்துப் பல அரிய கருத்துக்களைப் பல்வேறுநூல்களில்இருந்துமாணவமாணவியர்களுக்குஎடுத்துரைத்தார்.கருத்தரங்கத்திற்குநாட்டார்வழக்காற்றியலில் பயன்படுத்தப்பட்ட பழம்பெரும் பொருட்கள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டன.கருத்தரங்கத்திற்குப் பிற கல்லூரிமாணவமாணவிகள்பேராசிரியர்கள்மற்றும்ஆய்வாளர்கள்ஏராளமானோர்கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்.( சுயநிதிப் பிரிவு ) நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து விழாவைச் சிறப்பித்தனர்.
இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியில் முதுகலை ஆங்கிலத் துறையின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு இடையிலான ஆங்கில இலக்கிய விழா நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் மருதநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் மற்றும் சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் சூர்யகலா வாழ்த்துரை வழங்கினார்கள்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் சான்றிதழையும் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வழங்கினார். நன்றியுரையை பேராசிரியர் பாண்டிபிரியா வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி, தமிழ்த்துறை பாரதிய பாஷா சமித், (மத்திய கல்வி அமைச்சகம்) நிதி நல்கையுடன் இணைந்து நடத்தும் ஜெகத்குரு ஸ்ரீசங்கராச்சார்யார் வியாக்ன மாலாசிறப்புரை-பேராசிரியர் C.R. அனந்தராமன், இணைப்பேராசிரியர், துறைத்தலைவர், சமஸ்கிருதத் துறை (ஓய்வு), விவேகானந்த கல்லூரி, திருவேடகம் மேற்கு, மதுரை. வருகை தரு பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.தலைப்பு: ஜெகத்குரு ஸ்ரீசங்கராச்சார்யார்Dr.S.ஸ்ரீதர் சுவாமிநாதன்,,துறைத்தலைவர், உதவிப் பேராசிரியர், சமஸ்கிருதத் துறை, விவேகானந்த கல்லூரி, திருவேடகம் மேற்கு, மதுரை.தலைப்பு: சங்கர திக்விஜயம் 19/03/2024 ,மணி: 10.00 காலை,இடம்: கருத்தரங்க அறைமுனைவர்.ச.சிங்கராஜ், செயலர்,முனைவர்.த.வெங்கடேஸ்வரன் முதல்வர்முனைவர்.வி. கலாவதி ,கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறைத் தலைவர்திருமதி சு சத்யா, திரு.ச.குமார் தமிழ்த்துறை பேராசிரியர்கள்
.இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 2022- 2023 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலைப் பயின்ற மாணவ, மாணவியர்களுக்குப் பட்டமளிப்பு விழா கல்லூரியின் கலை அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. கல்லூரிச் செயலர் முனைவர்.சிங்கராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் விழாவிற்கு வருகை புரிந்து அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி. முத்துச்சாமி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குத் தேவையான நற்சிந்தனை, உடல் ஆரோக்கியம் , பெற்றோர்களின் பொறுப்புணர்வு, மற்றும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்தும், வாழ்வியல் நலன் குறித்தும் ,கல்வியின் நோக்கம் குறித்தும் சிறப்புரையாற்றி, 550 மாணவ, மாணவியர்களுக்குப் பட்டம் வழங்கி பெருமை பாராட்டினார். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வில் கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.