25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


இந்திய சட்டம் சொல்வது

Aug 01, 2026

சட்ட ஒருமைப்பாடு.

நீதிமன்ற அறிவிப்பை குடும்ப உறுப்பினர்கள் வாங்க மறுப்பதுஎன்பது அந்த அறிவிப்பு செல்லத்தக்க முறையில் சார்வு செய்ததற்கு ஒப்பாகுமா?ஒரிசா உயர் நீதிமன்றம் விடையளிக்கிறது!நீதிமன்ற அறிவிப்பை குடும்ப உறுப்பினர்கள் வாங்க மறுத்தால் மட்டும், அது செல்லத்தக்க முறையில் சார்வு செய்யப்பட்டதாக கருத முடியாது.சார்வு விதிமுறைகள் சட்டப்படி பின்பற்றப்பட வேண்டும்.சட்டப்படி உரிய முறையில் அறிவிப்பு வழங்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பது அவசியம்.

Jul 29, 2026

தந்தை பரம்பரை சொத்தை உயில் எழுதினால் அது செல்லாது. ஏன்?

மூதாதையார் சொத்தை அதாவது பரம்பரை சொத்தை தந்தை தன் விருப்பம் போல் யாருக்கும் உயில் எழுத முடியாது ஏனென்றால் பரம்பரை சொத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமை உண்டு என்று கூறி ஒரு தந்தை தன் மகளுக்கும் மகனுக்கும் எழுதிய உயிலை செல்லாது என்று அறிவித்து. அந்த சொத்தை அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்க உத்தரவிட்டது.2026 (2) MWN Civil 327.  Madaras high court 

Jul 21, 2026

பாகப்பிரிவினை வழக்கு.( Partition Suit ) தொடர்பான முக்கிய தகவல்கள்.

உங்கள் சொத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கைப் பெற முடியவில்லையா?பாகப்பிரிவினை வழக்கு - முக்கிய அம்சங்கள்1. சொத்தில் அனைவருக்கும் சம உரிமை மகன் , மகள், தந்தை, தாய், மனைவி அனைவருக்கும் உரிமை உண்டு.2. வாய் மொழி உடன்பாடு செல்லாது .வாய்மொழியாக "எனக்கு தேவையில்லை" என்றால், பங்கு உரிமை இழக்காது.3. கோர்ட் வழியாக உரிமை பெறலாம் .பங்காளிகள்ஒத்துழைக்காவிட்டால், சிவில் கோர்ட் வழியாக பங்கப்ரிவினை வழக்கு தொடரலாம்.4. சொத்து வகையைப் பொருட்படுத்தாது .வீடு, நிலம், கடை, விவசாய நிலம், வங்கி இருப்பு , தங்கம் - அனைத்தும் பகிர்வுக்கு உட்படும்.5.காலவரையறு இல்லை பங்கப்பிரிவினை வழக்கில் உரிமை கோர காலவரையறு இல்லை.6. சமரசம் எப்போதும் சிறந்த தீர்வு குடும்ப ஒற்றுமைக்காக சமரசம் மூலம் தீர்த்துக் கொள்வதே சிறந்தது.நீங்கள் என்ன செய்யலாம்?உங்கள் சொத்து ஆவணங்களை சரிபார்க்கவும்.உங்கள் சட்ட உரிமையை அறிந்திருக்கவும்.தேவையானால், உடனே சட்ட ஆலோசனை பெறவும்."' உங்கள் உரிமையை நீங்கள் கேட்காவிட்டால், உங்கள் பங்கை நீங்கள் இழக்க நேரிடும்'!

Jul 18, 2026

திருமணமான பெண்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்ப முடியுமா?

பதில்: முடியாது... சட்டம் பெண்ணை பாதுகாக்கிறது.திருமணமான பெண் வாழ்ந்த குடும்ப வீட்டிலிருந்து கணவர் அல்லது குடும்பத்தினர் வெளியேறசொல்லினாலும்...பெண்னுக்கு சட்டப்படி பாதுகாப்பு உள்ளது.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம். 2005 படி.Shared householdல் வாழும் உரிமை உள்ளது.வீட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்ற முடியாது.நீதிமன்றத்தில் Residence Order கேட்கலாம்.Protection Order  கோரலாம்.தேவையானால் Maintenance-வும் கேட்கலாம்.வீடு உங்கள் பெயரில் இல்லையென்றாலும்... அங்கு கணவருடன் வாழ்ந்திருந்தால் சட்டப்படிஉங்கள் உரிமை இருக்கலாம்.இந்த வீடு உன்னுடையது இல்லை.. வெளியே போ என்று சொன்னால் அதை அமைதியாக ஏற்க வேண்டியதில்லை.உங்கள் பாதுகாப்பும்.. உங்கள் வாழும் உரியையும்.. சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.சட்டம் தெரிந்தால்.. தைரியமாக பேச முடியும்.உங்கள் உரிமைகள். உங்கள் குரல்.

Jul 16, 2026

.புதிய சட்டம் மாமியார்கள் கவனத்திற்கு!...

மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை ஏற்படுத்தும் மாமியாருக்கு,3 வருடம் சிறை தண்டனை!1PC பிரிவு 498A படி, கணவன் அல்லது அவரது உறவினர்களால் செய்யப்படும் கொடுமைக்கு 3 வருடம் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கலாம்.தொடர்ச்சியாக சண்டை ஏற்படுத்துதல், பழிச்சொல் பரப்புதல், மிரட்டல், மன உளைச்சலை உண்டாக்குதல் இவை அனைத்தும் 'மன ரீதியான கொடுமை  என்பதில் அடங்கும்.ஆனால் நினைவில் கொள்ளுங்கள்:நீதிமன்றம் கூறுவது ஒன்றை ஆதாரம் முக்கியம்!வெறும் வாய்வழி குற்றச்சாட்டு போதாது,சட்டத்தில் திருப்பம்!டெல்லி உயர்நீதிமன்றம் (செப் 2025) விளக்கியது:குற்றவியல் சட்டத்தைத் தாண்டி, துணைவியின் "அன்பை விலக்க மூன்றாவது நபரால் வேண்டுமென்றே தலையிட்டு, திருமண உறவை சேதப்படுத்தினால் அவருக்கு எதிராக சிவில் வழக்கு தொடுத்து நஷ்ட ஈடு கோரலாம்.

Jul 11, 2026

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.

18 வயதிற்குட்பட்ட சிறார்கள் வாகனங்கள் இயக்குவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் சிறார்கள் வண்டி ஓட்டி விபத்து நேர்ந்தால், பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை & ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் மற்றும் சிறாருக்கு 25 வயது வரை லைசென்ஸ் தரப்படாது என மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 199A-ஐ சுட்டிக்காட்டி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Jul 08, 2026

திருமணமான பெண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை!

திருமணமான மகள்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை உண்டு. அரசுப் பணியில்இருந்த பெற்றோர்மரணமடைந்தால், கருணை அடிப்படையிலான வாரிசு வேலை பெற திருமணமானமகள்களுக்கும் முழு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மகனுக்குத் திருமணமாகி இருந்தாலும் அவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால்மகளுக்குத் திருமணமானால் வேறுகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வேலை மறுப்பதுபாலின பாகுபாடு என்றும், கருணை வேலை வழங்குவதில் திருமண நிலை அல்ல, தகுதிமற்றும் நிதி தேவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Jul 07, 2026

உயில் எழுதாமல் இறந்தால்…..

அப்போது சொத்து யாருக்கு செல்லும்?இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956உயில் (Will) இல்லாமல் ஒருவர் இறந்தால்,முதல் வாரிசுகள்- மனைவி, மகன், மகள், தாய் வாரிசுச் சான்றிதழ் அவசியம்சொத்து மாற்றம் செய்ய,வங்கி பணிகளுக்கு,சட்ட நடைமுறைகளுக்கு.,சட்டம் என்ன சொல்கிறது?அனைவருக்கும் சம பங்கு வழங்கப்படும்.உதாரணம் - மனைவி + மகன் + மகள் + தாய் இருந்தால், சொத்து 4 பேருக்கும் சமமாக பகிரப்படும்.உயில் எழுதி வைத்தால் குடும்ப தகராறுகளை தவிர்க்கலாம்.

Jun 30, 2026

போலிஸ் வாகன சோதனை:உங்கள் உரிமை என்ன?

உங்கள் உரிமைகள் காரணம் கேட்க உரிமை உண்டு. சோதனை செய்யும் காரணத்தை கேட்கலாம். அடையாள  அட்டை கேட்கலாம் .போலீசின் பெயர், பதவி எண்ணை கேட்கலாம். பெண்களை பெண் போலீஸ் மட்டுமே சோதிக்க வேண்டும் இது உங்கள் உரிமை. வாகன ஆவணங்களை மட்டும் சோதிக்கலாம். DL, RC, Insurance , மட்டும். உங்கள் மொபைலை சோதிக்க அனுமதி இல்லை இது சட்டவிரோதம். போலீஸ் செய்யக்கூடாதவை. லஞ்சம் கேட்பது குற்றம் அதை மறுக்கவும், மிரட்டுவது, தவறாக நடந்து கொள்வது சட்டவிரோதம். உங்கள் பொருட்களை பறிமுதல் செய்ய முடியாது சட்டப்படி அனுமதி இல்லாமல். சட்டப்படி காரணம் இல்லாம தடுத்து நிறுத்த முடியாது. தவறாக நடந்தால் உடனே புகார் செய்ய உரிமை உண்டு. சட்டப்படி தண்டனை (BNS). ₹5,000 ए ₹25,000 அபராதம். 3 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை.

Jun 23, 2026

போலீஸ் நிலையத்திற்கு வரச் சொன்னால் போக வேண்டுமா?

NOTICE வந்தால் மட்டும் செல்ல வேண்டும்.வாய்மொழி அழைப்புக்கு உடனே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெண்கள் வீட்டிலேயே விசாரனைக்குரிமை உண்டுஇரவு நேரங்களில் போலீஸ் அழைக்க முடியாது. வக்கீலுடன் செல்லலாம்உங்கள் உரிமைகளை பாதுகாக்க வக்கீலுடன் செல்வது முக்கியம். அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.சட்டப்படி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். தெரிந்து கொள்ளுங்கள்...இல்லையெனில் தோல்வியும் உங்களதே! சட்டம் தெரிந்தால் பயம் வேண்டாம். BNSS சட்டத்தின் கீழ் உங்கள் உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றன.

1 2 3

AD's



More News