வீட்டு உரிமையாளார் இந்த 5 விஷயங்களை செய்ய முடியாது!(வாடகை ஒப்பந்தத்தில் இருந்தாலும் கூட) 1.முன் அறிவிப்பு இல்லாமல் உங்கள் வாடகை வீட்டுக்குள் நுழைய முடியாது. 2.உங்களை வெளியேற்றுவதற்காக மின்சாரம் அல்லது தண்ணீர் இணைப்பை துண்டிக்க முடியாது. 3.(பெரும்பாலான மாநிலங்களில்) 2 மாத வாடகையை விட அதிகமாக பாதுகாப்பு தொகை கேட்க முடியாது. 4.சட்டப்படி தேவையான முன் நோட்டீஸ் இல்லாமல் உங்களை வெளியேற்ற முடியாது. 5. ஒப்பந்தம் இல்லாமல் வாடகை காலத்தின் நடுவில் வாடகையை உயர்த்த முடியாது. உரிமைகளை அறிந்து, பாதுகாப்பாக வாழுங்கள்.சட்டம் உங்களை பாதுகாக்கும்!
ஒருவர் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதாமல் இருந்து விட்டால் அவருடைய முதல் நிலை வாரிசுகள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதில் ஒருவர் தன்னுடைய பங்கினை மூன்றாம் நபருக்கு விற்பதற்கு முன்பு அந்த முதல் நிலை வாரிசுகளிடம் விற்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் அவ்வாறு முன்னுரிமை முயற்சி செய்யாமல் மூன்றாம் நபருக்கு விற்றால் இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 22 இன் படி மற்ற இணை உரிமையாளர் அதில் உரிமை கேட்கலாம். அது விவசாய நிலமாக இருந்தாலும் சரி.
16 வருடம் கழித்து உரிமை கிடைக்குமா?மெட்ராஸ் உயர் நீதிமன்றம்.பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்து - முக்கிய தீர்ப்பு!வழக்கின் பின்னணி05.03.1977 - குடும்பப் பங்கீடு சொத்து பூர்வீகச் சொத்து என்று குறிப்பிடப்பட்டது.12.04.2002 -மகளுக்கு Settlement Deed எழுதி கொடுத்தா.ர்மகள் பலருக்கு Sale Deed செய்தார்.16 ஆண்டுகள் கழித்து மகன் பாகப்பிரிவு வழக்கு,உயர் நீதிமன்றம் கூறியது - இந்தச் சொத்து பூர்வீகச் சொத்து, பங்கீட்டிற்குப் பிறகும் தன்மையை இழக்காது.தந்தை முழு சொத்தையும் மகளுக்கு தனியாக Settlement செய்ய முடியாது.மகனுக்கு பிறப்புரிமை (Birth Right) உண்டு.Settlement தெரிந்த நாளிலிருந்து காலவரம்பு (Limitation) தொடங்கும்.Patta மாற்றம் தாமதமாக நடந்தாலும் காலவரம்பு நீளாது.12 ஆண்டுகளுக்குள் உரிமை கேராதவர் விலக்கப்பட்ட கூட்டுரிமையாளர் ஆவார்.காலவரம்பு சட்டம்Sec - 109 - தந்தை மாற்றியதை எதிர்த்து 12 ஆண்டுகளில் வழக்கு வேண்டும்.Sec- 110-- விலக்கப்பட்டதை தெரிந்த நாளிலிருந்து 12 ஆண்டுகளில் பங்குரிமை கோர வேண்டும்.முடிவுவிசாரனை நீதிமன்றத் தீர்ப்பு ரத்து.மேல்முறையீடு அனுமதி மகன் பாகப்பிரிவு வழக்கு தள்ளுபடி.
திருமணத்திற்கு முன், திருமணத்தின் போது அல்லது அதன்பிறகு மனைவிக்கு வழங்கப்படும் நகைகள், பணம், பரிசுகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் Stridhan எனப்படும்.Stridhan என்பது மனைவியின் தனிப்பட்ட சொத்து,கணவர் அல்லது அவரது குடும்பத்தினர். மனைவியின் சம்மதம் இல்லாமல் அவற்றை பயன்படுத்தினால், வைத்துக்கொண்டாலோ சட்டப்படி உரிமை இல்லை.சட்ட ஆதாரம்:வரதட்சணைத் தடைச் சட்டம், Act 1961 - பிரிவு 6குறிப்பு: ஒவ்வொரு வழக்கின் உண்மைச் சூழ்நிலைக்கும் மாறுபடும். இந்த பதிவு பொதுவான சட்ட விழிப்புணவுக்காக மட்டுமே.இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்மனைவி இறந்த பிறகு நகை யாருக்கு? கணவருக்கே மட்டும் தானா?மனைவியின் ஸ்திரிதனம் அவருடைய தனிப்பட்ட சொத்து, உயில் (Will) இல்லையெனில், சட்டப்படி வாரிசுகளுக்கு செல்லும்.வாரிசுரிமைச் சட்டம், 1956பிரிவு 15(1)(a)கணவர், மகன், மகள் ஆகியோர் அனைவரும் சமமான வகையில் சட்ட வாரிசுகள்.கணவர்,மகன்(கள்),மகள்(கள்)வரும் சம பங்கு உரிமையாளர்கள்ஸ்திரிதனம் (Sridhanam) என்றால் என்ன?திருமணத்தில் கொடுக்கப்பட்ட நகைகள். சீர் வரிசை/ பரிசுப் பொருட்கள் பெற்றோர் கொடுத்த சொத்து .மனைவி பெயரில் இருக்கும் FD வங்கி சேமிப்பு.பணம் மற்றும் மற்ற சொத்துக்கள் .உதாரணம்:மனைவி + கணவர் 2 குழந்தைகள் இருந்தால், ஸ்திரீத்னம் 3 சம பங்குகளாக பிரிக்கலாம் .3 முக்கியமான குறிப்புகள்.1.கணவருக்கு தானாகவே முழுதும் கிடைக்காது.குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கும் சம பங்கு உண்டு.2.ஸ்திர்த்னத்திற்கு 'ஆதாரங்கள் அவசியம்.பில், புகைப்படம், பட்டியல் இருந்தால் தான் உரிமையை நிரூபிக்க முடியும்.3. குழந்தைகள் இல்லையெனில் கணவர் தவிர மற்ற சட்ட வாரிசுகள் (அம்மா, அப்பா உள்ளிட்டிடோர்) உரிமை பெறலாம்.இது பொதுவான சட்ட விழிப்புணர்வு தகவல் மட்டுமே. உங்கள் வழக்கின் நிலவரத்திற்கு ஏற்ப சட்ட நிலை மாறலாம். தயவு செய்து ஒரு வழக்கறிஞரிடம் கவுண்சில் பெறுங்கள்.
பதிவு செய்யாத உயில் (Unregistered Will) கூட சட்டப்படி செல்லுபடியாகும்.ஒரு உயில் செல்லுபடியாக இருக்க:உயில் எழுதியவர் (Testator) கையொப்பமிட வேண்டும்.குறைந்தது 2 சாட்சிகள் (Witnesses) கையொப்பமிட வேண்டும்.உயில் சுய விருப்பத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.Registration இல்லாதது மட்டுமே உயிலை செல்லாததாக மாற்றாது. முக்கிய குறிப்பு:பதிவு செய்யப்பட்ட உயில் எதிர்காலத்தில் ஏற்படும் தகராறுகளை குறைக்க உதவும். பதிவு செய்யாத உயில் சந்தேகத்திற்குரிய குழ்நிலையில் இருந்தால், நீதிமன்றம் கூடுதல் ஆதாரங்களை கேட்கலாம். சட்ட அடிப்படைபிரிவு 63, இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925உயில் நிறைவேற்றும் முறை,பிரிவு 68, இந்திய சாட்சியச் சட்டம், 1872உயிலை நிரூபிப்பதற்காக சாட்சியை விசாரிக்க வேண்டும்.
இல்லை!மூலப் பத்திரம் இல்லாததால் மட்டும் ஆவணப் பதிவை மறுக்க முடியாது!-மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.வில்லங்கச் சான்றிதழ் (EC) வழங்கும்போது சர்வே எண், கதவு எண் மற்றும் சொத்தின் முழு விவரங்களுடன் வழங்க வேண்டும்!வங்கியில் அடமானமாக உள்ள பத்திரங்கள்.தொலைந்துபோன மூலப் பத்திரங்கள்.பரம்பரைச் சொத்து பிரச்சினைகள்.சொத்து உரிமையை தீர்மானிப்பது நீதிமன்றத்தின் வேலை; பதிவு அலுவலகத்தின் வேலை அல்ல!-நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தல்.மதுரை உயர் நீதிமன்ற அமர்வு.சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள். மற்றும் பொதுமக்கள் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்!
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் ! உங்கள் உரிமையை உறுதிப்படுத்துங்கள், எதிர்கால சிக்கல்களைத் தவிர்த்திடுங்கள்! வாரிசு சான்றிதழ் ஏன் முக்கியம்? தந்தை இறந்துவிட்டால், சட்டப்படி அனைத்து வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு. வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate)இல்லாமல் சொத்தை விற்றால், விற்பனை சட்டப்பூர்வ சவால்களுக்கு உள்ளாகலாம். மற்ற வாரிசுகள் தங்களுக்கும் உரிமை இருப்பதாகக் கூறி வழக்கு தொடாலாம். அனைத்து வாரிசுகளின் சம்மதம் இல்லாமல் செய்யப்பட்ட விற்பனை. பங்குதாரர்களுக்கு எதிராக செல்லுபடியாகாது. சொத்தின் உரிமையை நிரூபிக்க இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ். சட்டப்பிரிவுகள் (LAWS). 1.இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 - பிரிவுகள் 8, 9, 10, 14, 15, 16 இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925 பிரிவுகள் 272, 373 2. சொத்துரிமை மாற்றுச் சட்டம், 1882 - பிரிவு 6 (சொத்து விற்பனை) பதிவுச் சட்டம், 1908 பிரிவு 17 3.இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 101, 102 எதிர்கால ஆபத்துகள்சொத்து மீது வழக்குவிற்பனை ரத்து செய்யப்பட வாய்ப்புவாங்குபவருக்கு உரிமை சிக்கல்கள்நீதிமன்ற செலவுகள் மற்றும் நேர இழப்பு தேவையான ஆவணங்கள். இறப்புச் சான்றிதழ்( Death Certificate ). வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate). அனைத்து வாரிசுகளின் அடையாள ஆவணங்கள். சொத்து தொடர்பான ஆவணங்கள். ஆதார் /வாக்காளர் அடையாள அட்டை சட்டப்பூர்வமாக செயல்படுங்கள். உங்கள் உரிமையை பாதுகாப்பாக நிலைநிறுத்துங்கள் இன்று பாதுகாப்பு, நாளை நிம்மதி!
சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு. பட்டா மாற்ற அதிகாரம் தாசில்தாருக்கே! RDO என்பது மேல்முறையீட்டு அதிகாரி மட்டுமே! மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரம் இல்லை! அதிகார வரம்பை மீறி பிறப்பித்த உத்தரவு செல்லாது! சிவில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்!சட்டம் எந்த அதிகாரிக்கு அதிகாரம் வழங்கியுள்ளதோ, அந்த அதிகாரியால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
மூதாதையர் சொத்து தொடர்பான பாகப்பிரிவினையில், சகோதரியின் உரிமை குறித்து பல்வேறு சட்ட விதிகள் உள்ளன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சொத்து தொடர்பான தனது உரிமையை உரிய காலத்திற்குள் கோராமல் இருப்பது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.உதாரணமாக, தந்தை இறந்த பிறகு சகோதரர்கள் சொத்தைப் பிரித்துக் கொள்ளும்போது, அந்தப் பாகப்பிரிவினையை அறிந்த நிலையில் சகோதரி சாட்சியாக கையொப்பமிட்டு பதிவு செய்திருந்தால், பின்னர் நீண்ட காலம் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பாக நீதிமன்றம் பரிசீலிக்கலாம்.மேலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முன்பாகவே சட்டப்படி சொத்து உரிமை மாற்றம் அல்லது பாகப்பிரிவினை நிறைவேற்றப்பட்டிருந்தால், அதன் தன்மையைப் பொறுத்து பின்னர் உரிமை கோருவதில் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.இத்தகைய சொத்து விவகாரங்களில் ஆவணங்கள், பாகப்பிரிவினை நடந்த தேதி மற்றும் சம்பந்தப்பட்ட சட்ட விதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்யப்படும். எனவே, குறிப்பிட்ட வழக்கில் சட்ட நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 85-ன் கீழ், மனைவிக்கு உடல் அல்லது மனரீதியான கொடுமை செய்தால் அது குற்றமாகக் கருதப்படுகிறது.இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.