மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 18, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் மோதினர். உன்னதி 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17–21, 21-18 என, ஜப்பானின் அனா இவாகியை வென்றார். இந்தியாவின் அனுபமா 21-14, 21-13 என இந்தோனேஷியாவின் தலிலா அக்னியா புடேரியை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஜூனி யர் உலகக்கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் 'சி' பிரிவு லீக் சுற்றில் நமீபியா, அயர்லாந்தை வென்ற இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. இந்திய அணி அடுத்து நடந்த 9-16வது இடத்துக்கான போட்டியில், வேல்சை வென்றது.இந்தியா, உருகுவே அணிகள் ,நேற்று நடந்த 9-12 வது இடத்துக்கான போட்டியில் மோதின. இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு மணிஷா (19வது நிமிடம்) கைகொடுத்தார். போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பூர்ணிமா யாதவ், இஷிகா, கனிகா சிவாச் கோல் அடித்தனர்.
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நடந்தது. நேற்று, சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 57 வது நிமிடத்தில் 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பை, திவாரி ஷர்தானந்த் கோலாக மாற்ற, இந்தியா 3-2 என முந்தியது. அடுத்த நிமிடம் அன்மோல் எக்கா (58வது) 'பெனால்டி கார்னரில்' கோல் அடிக்க, ரசி கர்கள் உற்சாகம் அடைந்தனர். முடிவில் இந்திய அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக வெண்கலம் கைப்பற்றியது.9 ஆண்டுகளுக்கு பின்ஜூனியர் உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2016-ல் சாம்பியன் பட்டம்வென்றிருந்தது.
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நடக்கும் கடைசி நாளான இன்று 'டாப்-8' இடங்களை பெற போட்டிகள் நடக்கின்றன.சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அர்ஜென்டினாவை இந்திய அணி, எதிர்கொள்கிறது. காலிறுதியில் லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி பெற்ற இந்திய அணி, 'பெனால்டி ஷூட் அவுட்டில்' பெல்ஜியத்தை வென்றது. இரவு நடக்கும் பைனலில் 7 முறை சாம்பியன், உலகின் 'நம்பர்-1' ஜெர்மனி, ஸ்பெயின், அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவைவென்று, 11 வது இடம் பெற்றது.'பெனால்டிஷூட் அவுட்டில்' ஜப்பானை வென்ற மலேசியா (3-0) 13வது இடம் பெற்றது. சிலி அணி 2-1 என சுவிட்சர்லாந்தை வென்று, 15வது இடம் பிடித்தது.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது.இதையடுத்து, இந்தியாவில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி பங்கேற்கும் 'நட்பு' போட்டிக்கு, கேரளா மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசியில் இப்போட்டி ரத்தானது. மூன்று நாள் பயணமாக'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, டிசம்பர் 13 அதிகாலை 1:30 மணிக்கு இந்தியா வருகிறார். அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் ,இவரது நீண்ட கால கிளப் அணி நண்பர்உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், என மூன்று பேர் வருகின்றனர்.கோல்கட்டா, இ.எம் பைபாஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் காலை 9:30 முதல் 10:30 மணி வரை ஸ்பான்சர் சந்திப்பு நடக்கிறது.பின் இந்தியா-அர் ஜென்டினா உணவுத்திருவிழா நடக்கிறது.அடுத்து தனது ஆளுயர சிலையை திறந்து வைக்கிறார்.பின் சால்ட் லேக் மைதானத்தில், மெஸ்ஸிக்கு ஓவியம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் 70,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள உள்ளனர். மூன்றாவது நாள் டிசம்பர் 15, டில்லி செல்லும் மெஸ்ஸி, மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.
தென் ஆப்ரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது. நேற்று ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 175/6 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய தென் ஆப்ரிக்க அணி 12.3 ஓவரில் 74 ரன்னுக்கு தோல்வியடைந்தது.ஹர்திக் பாண்ட்யா, 25 பந்தில் அரைசதம் விளாச, இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது 'டி-20' போட்டி, டிச.11ல் சண்டிகரில் நடக்க உள்ளது.
உலகின் 'நம்பர்-7' ஆக உள்ள இந்திய ஹாக்கி அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.நேற்று கேப்டவுனில் இரண்டாவது போட்டி நடந்தது. முதல் பாதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் தென் ஆப்ரிக்காவின் தயான் (31), நீத்லிங் 37) அடுத்தடுத்து கோல் அடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது.ஹர்மன்பிரீத்சிங் ,போட்டியின்49வதுநிமிடத்தில்ஒருகோல் அடித்தார்.முடிவில்போட்டி 2-2 என்றகோல்கணக்கில் 'டிரா' ஆனது.மூன்றாவது, கடைசி போட்டி இன்று நடக்கிறது.
இந்தியா வரவுள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் விசாகப்பட்டினம் (டிச. 21, 23), கடைசி 3போட்டிகள் திருவனந்தபுரத்தில் (டிச.. 26, 28, 30) நடக்க உள்ளன.இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் மதுரையை சேர்ந்த விக்கெட் கீப்பர் கமலினி 17, வைஷ்ணவி சர்மா 19, அறிமுக வாய்ப்பு பெற்றனர். பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் இருவரும் மும்பை அணிக்காக விளையாடுகின்றனர்.
பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் , 'சி' பிரிவு லீக் சுற்றில் நமீபியா, அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வி யடைந்து 2வது இடம் பிடித்தது.9-16வது இடத்துக்கான நேற்றுநடந்த போட்டியில் இந்தியா, வேல்ஸ் அணிகள் மோதி, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஹினா பானோ (14வது நிமிடம்), சுனேலிதா (24வது), இஷிகா (31வது) தலா ஒரு கோல்அடித் தனர். வேல்ஸ் அணிக்கு எலோயிஸ் (52வது நிமிடம் ) ஆறுதல் தந்தார்.வரும் டிச. 10ல் நடக்கவுள்ள 9-12வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி உருகுவே அணியை எதிர்கொள்கிறது.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நேற்று, மதுரையில் உள்ள ரேஸ் கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடந்த 19-20 வது இடத்துக்கான போட்டியில் சீனா, தென் கொரியா அணிகள் மோதின. தென் கொரிய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 19வது இடம் பிடித்தது. சீனாவுக்கு 20வது இடம் கிடைத்தது, நேற்றுடன் மதுரையில் ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் நிறைவு பெற்றன. பைனல் (டிச. 10), இந்தியா-அர்ஜென்டினா மோதும் மூன்றாவது இடம் (டிச. 10) உட்பட மற்ற போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளன. . நாளை நடக்கவுள்ள 3-4வது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி னால் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைக்கும்.