25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Nov 06, 2024

வெற்றி பெற்ற துல்கர் சல்மானின்" லக்கி பாஸ்கர் "

 நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் அப்பாவை போலவே மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழ்,தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்கிறார். 2018ல் மகாநடி படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் தொடர்ந்து 2022ல் சீதா ராமம், தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் என தெலுங்கில் ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார். இவர் இப்போது தெலுங்கில் முன்னணி  நடிகராக மாறியிருக்கிறார். 

Nov 06, 2024

"தக் லைப் "படத்தில் "எனக்கு பிடித்த பாடல்  "என திரிஷா குறிப்பிட்டுள்ளார் .

மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட் டோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பாடல் காட்சி படமாகி வருகிறது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு காலை 11:00 மணியளவில் இதன் சிறப்பு வீடியோவை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.ஏ.ஆர் ரஹ்மான் இசை. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ஒரு பாடல் காட்சி பட மாகிறது. அதன் படப்பிடிப்பு போட்டோவை பகிர்ந்து, 'இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த பாடல்' என திரிஷா குறிப்பிடப்பட்டுள்ளார்.

Nov 06, 2024

தமிழ் செல்வன் என்பவர் இயக்கிய படம் நாளை வெளியீடு

ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளியாகும். இந்த வாரம் நவ. 8 (நாளை)  தமிழ் செல்வன் என்பவர் இயக்கிய 'இரவினில் ஆட்டம் பார்' என்ற படம் வெளியாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Oct 31, 2024

புனித் ராஜ்குமார்

45 இலவசப் பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலைகள், 1800 மாணவர்கள் கல்வி. மேலும் இறப்பதற்கு முன் கண்ணை தானம் செய்தார்.மாபெரும் நடிகரான புனித் ராஜ்குமாரை  நினைவுகூறுவோம், அவரைப் போல் இன்னொரு சூப்பர் ஸ்டார் இருக்க மாட்டார்

Oct 30, 2024

'ராஜா சாப்' மோஷன் போஸ்டர் புதிய சாதனை

பான் இந்தியா நடிகராக பிரபலமாகிவிட்ட பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் 'ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி 24 மணிநேரத்தில் 8.3 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்திய அளவில் சாதனை படைத்தது. இதற்கு முன் பவன் கல்யாணின் 'ப்ரோ' மோஷன் போஸ்டர் 5.83 பார்வைகளை பெற்று முதலிடத்தில் இருந்தது.

Oct 30, 2024

நடிப்பில் 50 ஆண்டுகள் சிரஞ்சீவி மகிழ்ச்சி 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு 1974ல் கல்லுாரி படிப்பின்போது இ நடித்த முதல் நாடகத்தின் புகைப்படத்தை வெளியிட்ட சிரஞ்சீவி நர்சபூர் ஒய்என்எம் 'ராஜினாமா'. கோனா கோவிந்தராவ் எழுதியது ; நடிகராக முதல் அங்கீகாரம். 50 ஆண்டு நடிப்பு... தீராத மகிழ்ச்சி" என நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Oct 30, 2024

பின்னணி இசைக்கு தனி யுடியூப் சேனல் ஆரம்பித்த இளையராஜா

இன்றையடிஜிட்டல் யுகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களே அதிகம் கேட்கப்படுகிறது. அவருடைய பாடல்கள் பல தளங்களில் கிடைத்தாலும், தனக்கென தனியாக யுடியூப் சேனல் ஒன்றையும் வைத்து பாடல்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது பின்னணி இசைகளை வெளியிடுவதற்காகவும் தனியாக ஒரு யுடியூப் சேனலை துவக்கியுள்ளார். அதில் அவர் இசையமைத்த திரைப்பட பின்னணி இசை தொகுப்புகளை வெளியிட உள்ளார்.

Oct 30, 2024

மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கண்டிஷன்

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளார் ராஜமவுலி. இதற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ள மகேஷ்பாபு, பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி, படம் திரைக்கு வரும்வரைஇந்த படத்திற்கான கெட்டப்பில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என மகேஷ்பாபுவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

Oct 30, 2024

'அஜித்குமார் ரேஸிங்'ன் புதிய லோகோ

விடாமுயற்சி' படத்தை முடித்துவிட்டு 'குட் பேட் அக்லி' படத் - தில் நடிக்கிறார் அஜித். அதோடு கார் ரேஸ் களத்தில் மீண்டும் இறங்கி உள்ளார். தற்போது 'அஜித் 'குமார் ரேஸிங்' என்ற பெயரில் கார் பந்தய அணியை துவக்கி, அதற்கான லோகோவையும் அவரது மேலாளர் மூலம் வெளியிட்டுள்ளார். அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித்தும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஐரோப்பியா வில் நடக்கும் 24எச் கார் ரேஸிங்கில் போர்ஷே 992 ஜிடி3 கப்' பிரிவில் இவரது அணி பங்கேற்கிறது.

Oct 30, 2024

பொறாமையில்  தவறாக பேசாதீர்கள் நெப்போலியன்

 வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லிட்டு, தமிழ் நாட்டோட மத்திய பகுதி திருச்சில இருந்து  வந்த ஒரு பையன் நடிச்சி இவ்ளோ சீக்கிரம் மேல் வரானா அவன நம்ம பாராட்டணும்,ஆதரவா இருக்கணும். சினிமாவுல ஆரோக்கியமான போட்டி வெச்சிக்கோங்க, இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிச்ச படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுதுனா நீங்க அத விட  சிறந்த படம் குடுக்க முயற்சி பண்ணுங்க அத விட்டுட்டு பொறாமைப்படுறது, இழிவா பேசுறது சரி இல்ல! நடிகர் நெப்போலியன்

1 2 ... 67 68 69 70 71 72 73 ... 89 90

AD's



More News