விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைகழகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் மற்றும் க்யூட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டு, 1 மாத காலம்(01.04.2025 முதல் 30.04.2025 வரை) நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் தற்போது 12 ஆம் வகுப்பில் சிறப்பாக பயின்ற 110 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன்; நீட் மற்றும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கான 1 மாத இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.அதன்படி, 70 மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளும், 40 மாணவர்களுக்கு க்யூட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் 01.04.2025 முதல் 30.04.2025 வரை நடத்தப்படுகிறது.இப்பயிற்சி வகுப்பில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்துரைக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை க.விலக்கில்(30.03.2025) நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை சார்பில் ரூ.36.40 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை பெருநாழி சாயல்குடி கடுகுசந்தை மாரியூர் வாலிநோக்கம் இருவழி சாலைகளை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S.அவர்கள் தலைமையில் நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும்,விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.இந்த சாலையானது முக்கிய நகரங்களான அருப்புக்கோட்டை. திருச்சுழி, கமுதி. பெருநாழி. சாயல்குடி, கடுகுசந்தை, மாரியூர், வாலிநோக்கம் ஆகியபகுதிகளை இணைக்கிறது. மேலும் முக்கிய சுற்றுலாத்தலமான வாலிநோக்கம் கடற்கரை இச்சாலையின் எல்கையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு, தொழிற்சாலைகள், குவாரிகள், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்கள் அதிகம் உள்ளது. விவசாயிகள் பெருமளவில் வணிகப் பொருட்களை கொண்டு செல்ல இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதன் மொத்த நீளம் 79.260 கி.மீ. அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கமுதி விலக்கு முதல் செட்டிகுளம் விலக்கு வரைமுதற்கட்டமாக இருவழித்தடத்திலிருந்து நான்குவழித்தடமாக மாற்றும் வகையில், முதலமைச்சரின் சாலைமேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.36.40 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.இச்சாலையானது 6.00 கி.மீ. நீளத்துடன், 7 சிறுபேழை பாலங்கள், 100 மீ அளவிலான தடுப்புச்சுவர்கள், குறுக்கு வடிகால் பணிகள், தடுப்புச்சுவர் கட்டுதல்,மையத்தடுப்பான் கட்டுதல், சாலை சந்திப்புகளை மேம்பாடு செய்தல் உள்ளிட்டபணிகளுடன்நான்குவழித்தடமாகஅகலப்படுத்தப்படவுள்ளது..திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இதுவரை ஏறத்தாழ ரூ.121.11 கோடி மதிப்பில்103 கி.மீ தூரம் சாலைகள் போடுவதற்கும், ரூ.16 கோடி மதிப்பில் 21 பாலங்கள் அமைக்கும் பணிகளும் என மொத்தம் ரூ.137 கோடி மதிப்பிலான மிகப்பெரிய பணிகள் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக நமது பகுதிகளில் நிறைவேற்றிஇருக்கின்றோம்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு நாளும் நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறார்கள். பெண்களுக்கான அறிவிப்பாக, நம்முடைய மாணவர்களுக்கான அறிவிப்பாக இந்த நிதிநிலை அறிக்கை எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் வகையில்,இந்த முறை நிதிநிலை அறிக்கையை தந்து இருக்கிறார்கள். அவருடைய கரங்களை வலுப்படுத்த என்றைக்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் திருமதி.ஜெயராணி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள (29.03.2025) வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் I.A.S.அவர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழுவிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் எடுத்துரைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல், குழந்தைகள் டிஜிட்டல் திரை நேரத்தை குறைத்து ஆக்கப்பூர்வமான செயல்களில் அவர்களை மடைமாற்றம் செய்வதற்கான விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் சித்திரக்கதை நூலகம்(காமிக் நூலகம்), அறிவியல் பரிசோதனைகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி, குழந்தைகள் இலக்கிய திருவிழா உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.இந்த பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உயர்கல்வி சேர்க்கை விகிதம், தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், ஓவியம், சுற்றுச்சூழல் ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சிறப்பான மேம்பாடுகளை காண முடிகிறது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள இன்று வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், அவர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழுவிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், அவர்கள் எடுத்துரைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தலைமையில் (29.03.2025) நடைபெற்றது. இக் கிராமசபை கூட்டத்தில் வான்தரும் மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடிநீரை செறியூட்டுதல், நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுக்கட்டுப்பட்டைத் தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொருமரம் வளர்த்தல், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீhநிலைகளின் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம்(01.04.2024 முதல் 28.02.2025 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல்(பிரதிமாதம் 5 - ம் தேதிமற்றும் 20 - ம் தேதி), தினமும் தகுந்த அளவு குடிளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்தல் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.பின்னர் மாவட்டஆட்சித்தலைவர் நமது மாவட்டத்தில் இருக்ககூடிய 450 கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு வருடமும் தற்போது 6 நாட்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் உள்ளாட்சிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அதுவும் குறிப்பாக மக்களினுடைய பங்களிப்பும் அந்த உள்ளாட்சி நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. கலைஞர் கனவு இல்லத் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் பயனாளிகளை அரசினுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு கிராம ஊராட்சி மக்களே அவர்களை தெரிவு செய்ய வேண்டும்.கிராம ஊராட்சிகளுக்கு அரசினுடைய மாநில நிதி ஆதாரங்கள், மானியக் குழு நிதி உள்ளிட்ட நிதிகள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்;றன. ஆனால் நமக்கு இருக்கக்கூடிய நிதி ஆதாரங்களை வைத்து பார்த்தால், அதனை எல்லாம் ஒரே நேரத்தில் முடியுமா என்றால் அதற்கு என்று முன்னுரிமை பட்டியல் தயார் செய்து நிறைவேற்றும் வகையிலும், கிராம மக்கள் ஒன்றாக கூடி முடிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.நாம் சுகாதாரத்தில் நிறைய இலக்குகளை அடைய வேண்டும். எனவே தனிநபர் கழிப்பறைகளை நாம் முழுமையாக கட்ட வேண்டும். அதற்கு திட்டங்கள் இருந்தாலும், பொதுமக்களினுடைய பழக்க வழக்கங்களில் மாற்றம் வர வேண்டும். ஏனென்றால் ஒரு ஆண்டுக்கு 365 நாள்களில் சராசரியாக ஒருவர் 8-லிருந்து 12 நாட்கள் ஒரு குடும்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் செல்கிறது. ஆனால் அதில் பெரும்பாலான நோய்கள் காற்றின் மூலமாகவும், நீரின் மூலமாகவும் பரவக்கூடிய தொற்று நோய்களாக தான் இருக்கின்றன. எனவே, நாம்; சுற்றுப்புறச் சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்வதன் மூலமாக அந்த தொற்று நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்க முடியும். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது நமது பகுதியில் அதிகமான கோடை காலம் நிலவுகிறது .எனவே கோடைகாலத்தில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா என்பதையும், இல்லையென்றால் அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பகுதியிலும் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் விவாதிப்பதற்கும், ஏற்கனவே கிராம ஊராட்சிகள் சார்பாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் பொதுமக்கள் நேரடியாக பார்க்க வேண்டும். ஊராட்சிகள் மூலமாக செலவிடப்பட்ட செலவினங்களை எல்லாம் எடுத்து பார்த்து, அது சரியாக செலவிடப்பட்டுள்ளதா என்பதையும் பொதுமக்கள் பார்த்து, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய வகையில் இந்த ஒளிவு மறையற்ற வெளிப்படை தன்மையை, நிர்வாக தன்மையை உறுதி செய்யும் என்பதற்கு தான் இந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. ஒரு துளி நீர் இல்லாமல் போனால் மண்ணில் ஒரு சிறு பசும்புல் கூட இருக்காது என்று தண்ணீரின் அருமையை பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறர். அனைவரும்; தண்ணீரை பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும். தண்ணீரை வீணாக்கக்கூடாது. மழைநீர் சேகரிப்பை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் எல்லோருக்கும் தூய குடிநீர், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். அதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த கிராமசபைக்கூட்டம் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தெரிவித்தார்., வேளாண்மைத்துறையின் மூலமாக நுண்ணீர் பாசனத்திற்கான மானியத்தொகையினையும், இடுப்பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், தூய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (28.03.2025) மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,IA S., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக (28.03.2025) மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரை சுற்றுச்சூழல் பூங்கா, திருமலை நாயக்கர் மஹால், இராஜாஜி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அறிவியல் களப்பயணம் செல்வதற்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுற்றுலா பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இப்பயணத்தில், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள 3.5 இலட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள், குழந்தைகள் நூல், சிறுவர் திரையரங்கம், கலையரங்கம், மாதிரி வானூர்தி, எண்ணிம திரைகள், தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் , போட்டித் தேர்வுகளுக்கான நூலகப்பகுதி, பார்வையற்றவர்களுக்கான நூல்கள் மின்னூல்,ஒலி நூல், மேற்கோள் நூல்கள் குறித்தும், மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் திருமலை நாயக்கர் மஹால், இராஜாஜி பூங்கா உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டு, அவற்றையெல்லாம் மாணவர்கள் அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் இந்த அறிவியல் களப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.இந்நிகழ்வின் போது, ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலங்களில் சாலையோரங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் குப்பைகள் மற்றும் இதர திடக்கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திடக்கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழலையும், மனித நலனையும்பாதிக்கக் கூடும்.“தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, அத்தியாயம் VIII பிரிவு 153, 156, 157, 158, 160 மற்றும் 161-ன் படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை அகற்ற போதிய ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு சேவையில் ஈடுபட்டு பொது சுகாதாரம் பேணி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செலவினத்தை அதன் பொறுப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து செயல்படுத்தவும் நச்சுத் தன்மை உடைய கழிவுகளையோ, அழுகிய கழிவுகளையோ, மலக்கழிவுகளையோ, மருத்துவக்கழிவுகளையோ மாற்றம் செய்தல், சாலைகளில் போடுதல் மற்றும் கழிவு நீர்க் கால்வாய்களில் கொட்டுதல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது”. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம்தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்1920-ன்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (27.03.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தாய் சேய் நலம் காப்போம் - 2025 திட்டத்தின் கீழ், மகப்பேறு மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், IAS அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர்களுக்கான மாபெரும் கபடி மற்றும் கையுந்து போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 29.03.2025 முதல் 04.04.2025 வரை நடைபெற உள்ளது. அதன்படி, ஆண்களுக்கு வட்டார அளவிலும், பெண்களுக்கு மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.அதன்படி, ஆண்களுக்கான வட்டார அளவிலான போட்டிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அருப்புக்கோட்டை செட்டிகுறிச்சி, ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9345036559, 94435-44350 என்ற எண்ணிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில்; 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9842909574, 9442418663 என்ற எண்ணிலும்,விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்;ட விளையாட்டு அரங்கத்தில் 29.03.2025 அன்று கையுந்து மற்றும் 31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9791634373, 7639525633 என்ற எண்ணிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தூர் எட்வர்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9486497010, 8695966669 என்ற எண்ணிலும்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கையுந்து மற்றும் 31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9791229305, 7010156632 என்ற எண்ணிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கல்லூரணி எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியில் 03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9445383316, 9080092027 என்ற எண்ணிலும்,சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9994846801, 9865071770 என்ற எண்ணிலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 6369804545, 8667403340 என்ற எண்ணிலும்,திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மங்காபுரம் மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 7305574443, 8428272694 என்ற எண்ணிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செவல்பட்டி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் 03.04.2025 அன்று கையுந்து மற்றும் 31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9629648653, 9486427621 என்ற எண்ணிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில்; 29.03.2025 அன்று கையுந்து மற்றும் 31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலரை 8925491170 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.பெண்களுக்காக 09.04.2025 மற்றும் 10.04.2025 ஆகிய தினங்கள் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9488151214, 9994511966 மற்றும் 9865071770 ஆகிய எண்ணிலும், கையுந்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9994160149 மற்றும் 9894693210 ஆகிய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.வட்டார அளவில் நடத்தப்படும் ஆண்களுக்கான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.10,000ஃ- மும், இரண்டாம் பரிசு ரூ.5,000ஃ-மும் வழங்கப்படும். வட்டார அளவில் வெற்றி பெறும் தலா ஒரு அணிகள் 12.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.மேலும், மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.1.20 இலட்சம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ.90 ஆயிரம் வழங்கப்படும்.இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் வயது சான்று அல்லது ஆதார் கார்டு நகலுடன் படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.எனவே, மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதம் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்க சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.இந்த பயிற்சியின் மூலம் கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று அதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தகுதி பெற்று உள்ளார்கள்.எனவே, இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் (26.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் (26.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடி, மாணவர்களின் கல்வித்தரம், வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், பள்ளிகளுக்கு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்டவை முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.