வேல்மலை முருகன்
'குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்' என்பர். இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி அருகே கணக்கபிள்ளைவலசை வேல்மலை யில் அமைந்துள்ளது, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவில் சுமார் 1300 ஆண்டு களுக்கு முன்பு வேல் மலையில் ஆதிநாத சித்தர் வாழ்ந்து வந்தார். சிறந்த தவசீலரான இவர் முருகனின் திருப்பாதங் கள் தனது சிரசின் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்பி பல ஆண்டுகள் தவம் புரிந்தார். அவரது வேண்டுதலுக்கு இணங்க முருகப்பெரு மான் பாலகனாக அவருக்கு காட்சி தந்து முக்தியளி தார். அவரது ஜீவசமாதி பீடத்தின் மீது முருகப்பெரு மான், பாலசுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கின்றார்.
முன்பொரு காலத்தில் குற்றாலநாதர் கோவில் வைணவ ஆலயமாக இருந்தது. அப்போது பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், ஹரி யும் சிவனும் ஒன்று என் பதை உணர்த்த எண்ணி னார். அதன்படி, முருகன் ஆணைக்கு இணங்க மகாவிஷ்ணுவை பிரார்த் தனை செய்து குற்றா லத்தை சிவதலமாக மாற்றினார்.பின்னர் அகத்தியரை வேல்மலைக்கு வருமாறு முருகப்பெருமான் அழைத்தார். உடனே குற்றாலம் பொங்குமாங் கடலில் மூழ்கிய அகத்தியர், தனது தவ வலிமை யால் வேல்மலையில் இருந்த சுனை வழியாக வெளியே வந்து முருகப் பெருமானை வழிபட்டார்.எனவே வேல்மலையை அகத்தியர் அமர்ந்த மலை' என்றும் அழைக்கின்றனர்.
0
Leave a Reply