காலிஃப்ளவர்
காலிஃப்ளவர், குளிர்ப் பிரதேசக் காய்கறி. குளிர்காலத்தில் இது அதிகமாகக் கிடைக்கிறது. இத்தாலியில்அதிகமாகவிளைவிக்கப்பட்டது. ஆனாலும், , காலிஃப்ளவர் முதன்முதலில் ஆசியாவில்தான் பயிரிடப்பட்டது.
எண்ணற்றமருத்துவக்குணங்கள்அடங்கியதுகாலிஃப்ளவர்.இந்தப்பூக்களில்பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் ஏ.சி. மாவுச்சத்து, புரதம், சிறிதளவு கால்சியம், சோடியம். கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. கண் பார்வைக்குத் தேவையான கேரோட்டின் சத்து, நார்ச்சத்து ஆகியவை இந்தப் பூவில் அதிகம்.இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. உடல் மெலியும்.
இது உஷ்ணத்தைத் தணிக்கும். இதைச் சாப்பிட்டால் சளி குறையும். உடல் வறட்சியைப் போக்கும். இருமல் குறையும், வாய் துர்நாற்றம் நீங்கும். உடல் இளைப்பு நீங்கும். காலிஃப்ளவர் மேனியை மினுமினுப்பாக்கும். தண்ணீரில் இந்தப் பூவை வேகவைப்பதைவிட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். அப்படி செய்தால் வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். மேலும், காலிஃப்ளவர் கொழுப்புச் சத்து இல்லாத காய்கறி, குறைந்த கலோரி கொடுக்கும். அதனால், இதய நோய்க்கு இதமான பூ இது, யாருக்கு நல்லது? புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும்.புற்றுநோய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்
0
Leave a Reply