2025-26-ஆம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.
கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிக முக்கியமாகும். பண்ணை செலவினத்தில் 70 சதவீதம் கால்நடைகளுக்கான தீவன செலவாகும். உற்பத்தி செலவினை குறைத்து, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவதற்கு , தீவனம் விரயம் ஆகுதலை குறைப்பது முக்கியமான ஒன்றாகும். கால்நடைகள் தீவனங்களை வீண் செய்வதை தவிர்க்க, தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கி வழங்குவதற்கு, 2025-26-ஆம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு, குறைந்த பட்சம் 2 கறவைப் பசுக்கள் வைத்திருக்க வேண்டும். மின்சார வசதி கொண்ட இறவையில் தீவன சாகுபடி செய்கூடிய வாறு, குறைந்த பட்சம் ½ ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்களில் பயனாளியாக பயன்பெற்று இருத்தல் கூடாது. சிறு குறு மற்றும் பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி தங்களிடம் உள்ள கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply